Search This Blog

18.8.09

கோயில்கள் விபச்சார விடுதிகள் -காந்தியார் சொன்னது சரியா?





ஒரே குட்டை!

பார், பார், ஜப்பான் பார், ஜெர்மன் பார்! என்று சாலையோரத்தில் பயாஸ்கோப் வைத்துப் படம் காட்டுவார்கள். அதற்குக் கட்டணமும் வசூலித்து விடுவார்கள் அது ஒரு காலம்.

இப்பொழுது சிறுவர்களும் பார்ப்பது சின்னத்திரைகள்தான்_ சினிமாக்கள்தான். வாலிப வயதில் தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தப்பும் தவறுமாக தொடக்கப்பள்ளிகளிலேயே தெரிந்துகொண்டு சீர்கேடு என்னும் சாக்கடையில் வீழ்கிறார்கள்.

காதல் என்று அறியப்பட்டதெல்லாம் காமம் என்னும் புரையேறிய சமாச்சாரமாகிவிட்டது. விளம்பரங்கள் எல்லாம் இந்த விகாரப் புற்றுநோய்களாகிவிட்டன.

வார ஏடுகள், இதழ்களுக்கிடையே நிர்வாணமாக, பெண்களைப் போட்டுத் தள்ளுவதிலேதானே போட்டா போட்டி!


இன்றைய சமூக சூழலில் பாலியல் உணர்வுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் செய்யப்படும் பிரச்சாரம் நாகரிக சமூகச் சீர்மையையே குப்புறத்தள்ளி உதைத்தே கொன்றுவிடும் போல் தோன்றுகிறது.

குஜராத்தில் சவுமிய நாராயண் கோயில் கருவறை அக்கோயில் புரோகிதர்களுக்கு கிருஷ்ண லீலை நடத்தும் படுக்கையறையான செய்தி படங்களுடன் வெளியானதுண்டு.

அய்யப்பன் கோயில் தாந்திரிகளுக்கு (அர்ச்சகமாருகளுக்கு) அவர்களின் ஓய்வறைகள் பாராக மாறிவிட்டன.

திருவனந்தபுரம் விபச்சார விடுதிகள்தான் அவர்களின் பொழுது போக்கு!

இப்பொழுது என்னவென்றால், பஞ்சாபில் லுதியானா நகரில் உள்ள ஜார்சாகேப் குருத்வாரா கோயில் பூசாரிக்கு ஃப்ளூ பிலிம் பார்க்கும் கிளப்பாக மாறிவிட்டது கம்பி எண்ணுகிறார் இப்போது.

சின்னஞ்சிறு பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்திய ஆயிரக்கணக்கான பாதிரியார்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பாவ மன்னிப்பு வழங்கிவிட்டார் வாடிகன் போப்.

ஆனால், நாட்டில் என்ன சொல்லுகிறார்கள்? பக்தி குறைந்ததால்தான் நாட்டில் ஒழுக்கம் குறைந்துவிட்டது என்று மூக்கால் அழுகிறார்கள்.

கோயிலுக்குப் போவது மனதை ஒருமுகப்படுத்த என்று கொஞ்சம்கூட மனச்சான்று இல்லாமல் பொய் பேசுகிறார்கள் பெரிய மனுஷர்கள்.

நம் நாட்டுக் கோயில்களைப்பற்றி தெரியாதா? கொக்கோகம் என்று சொல்கிறார்களே, அவையெல்லாம் பிச்சை வாங்கவேண்டும் இந்துக் கோயில்களில்.

கோயில்கள் விபச்சார விடுதிகள் என்று விளையாட்டாகவா சொன்னார் ஆன்மிகவாதியான காந்தியார்?





கோபுரங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் எல்லாம் பட்டப் பகலில் காட்டப்படும் படுக்கையறைக் காட்சிகள்தானே? தேர்களில் என்ன வாழ்கிறது?

உண்மையை அறவே பேசக்கூடாது, ஒழுக்கமே பரவிடக் கூடாது என்று சத்தியம் செய்துகொண்டு செயல்படும் ஒரு கூட்டம் ஆன்மிகப் போர்வையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

பாலுணர்வு தூண்டல் மூலம்தான் பக்தியைப் பரப்ப முடியும் என்பது அவாளின் அசைக்க முடியாத திட்டம் குத்தாட்டம் காட்டிதான் சினிமாவை ஓட்ட முடியும் என்று திரைப்பட உலகினரும், பத்திரிகையாளர்களும் தொழில் நடத்தவில்லையா? எல்லாம் ஒரே குட்டையின் மட்டைகள்தான்!




---------- மயிலாடன் அவர்கள் 18-8-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: