Search This Blog

14.8.09

உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் -ஈ.வெ.ரா

முற்றுமுணர்ந்த பேராசிரியர்!

சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு ராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை, அரை மணி நேரத்துக்கு மேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது. 'பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேசவேண்டுமென்றால், பண்டிதர், சுராஜ்உத்டௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ஆம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருமுன், பொழுது விடிந்துவிடும். ஆனால், இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவு தான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவதே கிடையாது. அவ்வளவு ஏன்?

தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். அதிக நீளம் என்னும் ஒருகுறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்து விடுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்!

நாம் உபயோகிக்கும் சொற்கள் எல்லாம் செந்தமிழ்ப் பதங்கள்தாமாவென்று, நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய், பயனிலைகள், ஒருமை - பண்மைகள், வேற்றுமையுருபுகள் முதலியவைகளைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. ஆனால், தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ சொல்ல வேண்டுவதில்லை.

இராமசாமியாரின் பிரசங்கம் பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறெவரையும்விட அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களேயன்றி, முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளுங்கூட அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத்திறமை அபாரமானது. "இவர் மட்டும் வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று ஒரு பிரபல வக்கீல், மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டேன்.

உபயோகமற்ற வாதங்களும், அவர் வாயில் உயிர் பெற்று விளங்கும். ஓர் உதாரணம் கூறி முடிக்கிறேன். அந்தக் காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது சட்டசபைப் பிரவேசத்துக்கு விரோதமாகப் பல பிரசங்கங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறிய வாதங்களில் ஒன்று சட்டசபைப் பிரவேசத்தினால் வீண்பணச் செலவு நேரும் என்பது.

"ஒரு ஜில்லாவில் சுமார் 30,000- வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர், இந்த 30,000- 'கார்டாவது' போடவேண்டும். சர்க்கார் தபால் இலகாவுக்கு லாபம் இத்துடன் போகாது. இந்த அபேட்சகர் செத்துப் போய் விட்டதாக, எதிரி அபேட்சகர் ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுவார். நான் செத்துப்போகவில்லை. உயிருடன் தான் இருக்கிறேன் என்று மறுபடியும் 30,000- கார்டு போடவேண்டும்."

நாயக்கரின் இந்த வாதத்தில் அர்த்தமேயில்லை என்று சொல்ல வேண்டுவதில்லை. அதுவும், எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால், அப்போது - ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்தபோது, நானும் இன்னும் 4,000- ஜனங்களும் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒருமுறை 'கொல்' என்று சிரித்து மகிழ்ந்தோம்.

---------------1931-ல் 'ஆனந்தவிகடன்' இதழில் "கல்கி" அவர்களால் எழுதப்பட்டது

6 comments:

ஊர்சுற்றி said...

உண்மைதான். அவர் பேராசிரியரே!

Unknown said...

கல்கி அவர் இல்லத் திருமணத்திற்குப் பெரியாரை அழைத்து அவரை நன்கு உபசரித்து மகிழ்ந்தவர்.

bala said...
This comment has been removed by a blog administrator.
bala said...

திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.

பாலா