Search This Blog

10.8.09

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்- ஓவியர் ஹூசேனின் ஓவிய அரங்கினைத் தீக்கிரையாக்கியது சரியா?




ஓவியர் ஹூசேன்

ஓவியர் ஹூசேன் உலகம் அறியப்பட்ட பிரபலமான ஓவியர். ஆனாலும், அவர் இஸ்லாமியர் ஆயிற்றே பொறுக்குமா ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கும்பலுக்கு?

1996 மே திங்கள் மும்பையில் இவ்வோவியர் ஏற்பாடு செய்த ஓவிய அரங்கினைத் தீக்கிரையாக்கியது அந்தத் தீய கும்பல். என்ன காரணமாம்? 1978 ஆம் ஆண்டு வாக்கில் இந்துக்களின் சரஸ்வதியை ஆபாசமாக அவர் வரைந்துவிட்டராம். அதற்குத்தான் காலந்தாழ்ந்தாலும் கடுமையான தண்டனையாம்!

கடவுள்களை ஆபாசமாக வரைவதுபற்றி இந்த இந்துத்துவாவாதிகள் கூறுவதைக் கேட்டால் வாயால் சிரிக்க முடியவில்லை.

சரஸ்வதியின் பிறப்பே ஆபாசம்! பெற்ற தந்தை பிரம்மாவிற்கே மனைவியானவள் இந்த சரஸ்வதி. இதற்குமேல் என்ன ஆபாசம் வேண்டியிருக்கு?


இந்துக் கோயில்களில் வடித்து வைத்திருக்கிற கற்சிலைகளில் வழிந்தோடாத ஆபாச வெள்ளத்தைவிடவா? கோயில் தேர்களில் தீட்டி வைக்காத வக்கிரங்களை வேறு எங்கு சென்று தேடிட முடியும்?

பக்தர்களை இந்துக் கோயில்கள் கவர்ந்து இழுக்கிறது என்றால் சும்மாவா? புராணங்களில் கிறுக்கியிருக்கும் காமக் குரோதங்களைக் குப்பைத் தொட்டியில் கிழித்து எறிந்தால்கூட அந்தக் குப்பைத் தொட்டிக்கே அவமானம்!

கோபிகாஸ்திரிகளுடன் கிருஷ்ணன் கொஞ்சும் காட்சிகளை வைணவர்கள் நடு வீட்டில் கண்ணாடி போட்டு மாட்டி வைப்பதை நினைத்தால் வாந்தியும், பேதியும்தான் வரும்.


மிக உன்னத ஓவியக் கலைஞர் உசேனின் ஓவிய அரங்கம் தீயிடப்பட்டபோது சிவசேனாவின் பால்தாக்கரே சொன்னார்:

உசேன் ஹிந்து ஸ்தானத்துக்குள் நுழைய முடிகிறதென்றால், நாங்கள் அவர் வீட்டுக்குள் நுழைய முடியாதா? என்று மூர்க்கத்தனமாகப் பேசினார்.

அதன் விளைவு, உலகப் புகழ் மிக்க கலைஞர் இந்தியாவை விட்டு வெளியேறும்படி நேர்ந்தது. துபாய், லண்டன் முதலிய நாடுகளில் வசித்து வர நேர்ந்தது.

உச்சநீதிமன்றம் வரை சென்றது வழக்கு. அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்புக் கிடைத்தது.

இந்த நிலையில், மீண்டும் தாம் இந்தியா வரவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கலைஞனை மதச் சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நின்று வரவேற்க வேண்டும்!

---------------- மயிலாடன் அவர்கள் 10-8-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: