Search This Blog

25.8.09

பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமேயில்லை!


என்ன படிப்போ!



பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமேயில்லை என்றார் கிருபானந்த வாரியார்; பக்தி ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது; பிசினஸ் ஆகிவிட்டது என்றார் மாஜி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

சொன்னவர்கள் நாத்திகர்கள் அல்லர். அவர்களாலேயே பக்தியைக் காப்பாற்ற முடியவில்லை. முட்டுக் கொடுத்து நிறுத்த முடியாத ஒரு பரிதாப நிலையின் உச்சத்திற்கு பக்திச் சமாச்சாரங்கள் நாய் விட்டை என நாற்றம் எடுக்கின்றன!

பல ஊர்களில் உள்ள கோயில்களின் அற்புதம், மகத்துவம்பற்றி பக்கம் பக்கமாக வார இதழ்கள் எழுதும் ஒரு பரிதாப நிலை உருவாகிவிட்டது.

வியாபாரிகள் தங்கள் சரக்குகளுக்கு விளம்பரம் செய்யும் யுக்தியை இந்தப் பக்திக்கு_ கோயிலுக்குப் பயன்படுத்துகின்றன.

இந்த வாரத்திலேயே வெளிவந்த ஒரு வார இதழில் புற்றுநோய் போக்கும் கோயில் என்று ஒரு கோவிலைப்பற்றி அளந்து கொட்டப்பட்டுள்ளது

மின்சார இரயில் வண்டிகளில் சில துண்டறிக்கைகள் ஒட்டப்பட்டுள்ளன. அருள்மிகு சிவாம்பிகை உடனுறை சொர்ணாபுரீஸ்வரர் திருக்கோயிலாம்.

இந்தக் கோயிலின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?

ருது தோஷ பரிகாரமாம். பெண்களின் கர்ப்பப்பை, பூப்பெய்தல், மாதவிடாய் இடர்ப்பாடுகளை நீக்கவல்ல (ஸ்ரீசமன்விதா) ருது தோஷ பரிகார அம்மன் கும்பாபிஷேகம் என்று அந்தத் துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இது எப்படி இருக்கிறது? டாக்டர்களில் நீரிழிவு, சிறுநீரக இடர்ப்பாடு தோல் சம்பந்தப்பட்ட வியாதி, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் என்று நோய்களுக்குத் தனித்தனி விற்பன்னர்கள் (Specialist) இருப்பதுபோல கடவுள்களிலும் தனித்தனி ஸ்பெஷலிஸ்டுகள் இருக்கிறார்களோ!


இப்படி ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கோயிலும், கடவுளும் இருக்கும்போது மருத்துவக் கல்லூரி எதற்கு? மருத்துவமனைகள் எதற்கு? இழுத்து மூட வேண்டியதுதானே_ அரசுக்கு செலவாவது மிச்சமாகுமே!

மற்ற மற்ற விஷயங்கள் பற்றியெல்லாம் காதுவரை வாயை நீட்டிப் பேசும் பெரிய மனுஷர்கள், அறிவு ஜீவிகள் இதுபற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லையே ஏன்? இதுதான் இவர்களின் பொறுப்புணர்ச்சியா?

பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை, நாயை இழுத்துக் கட்டு என்பதுபோல பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துச் சொல்லாவிட்டாலும் மூடத்தனத்தை நீர் ஊற்றி வளர்க்காமலாவது இருக்கக் கூடாதா?


நம் நாட்டுப் படிப்பு என்பது வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ் என்றாரே தந்தை பெரியார் _ ஆகா, எத்தகைய அருமையான கணிப்பு!


--------------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 24-8-2009 நாளிதழில் எழுதிய கட்டுரை

4 comments:

When it is high time said...

ரொமப சரி.

பக்தியின் ஒரு பக்கம் இருண்டதுதான். மற்றொரு பக்கமும் உண்டு. அது நல்வெளிச்சமாகத்தான் இருக்கும்.

கட்வுளை வைத்து வியாபாரம் என்பது இன்று நேற்று விடயமல்ல. தொன்றுதொட்டு வருவது. ஏமாற்றுபேர்வழிகள் எப்போதும் உண்டு.

கையில் சிரங்கு வந்தால் கையை வெட்டுபோடுவார்களா? குணப்படுத்தத்தான் வேண்டும்.

நிற்க.

நீங்கள் போட்ட புகைப்படத்திலுள்ள கோயில் தமிழ்நாட்டில் எங்கேயுள்ளது?

Sethu Maathavan said...

ரயிலில் போவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது அதனால் நாட்டில் ரயில்களே ஓடக்கூடாது என்பது போல் இருகிறது உங்கள் தர்க்கம் ... மனிதன் உருவாகிய அவல நிலைக்காக மதத்தை பழிக்காதீர்கள் ... எந்த மதத்திலும் சாமியார்களை வழிபட கூறவில்லை... பணத்திற்காக மனிதன் செய்த இழி செயல்களுக்கு மதம் எப்படி காரணமாகும் ... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மிக்கது .. இவைகளுக்கு அறிவியல் அதரமும் உண்டு.. பணத்திற்காக சில வீணர்கள் செய்வதை கொண்டு எல்லாமே இப்படி தான் என முடிவு செய்யாதீர்கள் ... பெரியாரே "கோவில்கள் கூடாது என நான் சொல்லவில்லை அது கொள்ளையர்களின் கூடாரமாக இருக்ககூடாது" என்று தான் சொன்னார்...

நம்பி said...

//Blogger Sethu Maathavan said...

ரயிலில் போவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது அதனால் நாட்டில் ரயில்களே ஓடக்கூடாது என்பது போல் இருகிறது உங்கள் தர்க்கம் ... மனிதன் உருவாகிய அவல நிலைக்காக மதத்தை பழிக்காதீர்கள் ... எந்த மதத்திலும் சாமியார்களை வழிபட கூறவில்லை... பணத்திற்காக மனிதன் செய்த இழி செயல்களுக்கு மதம் எப்படி காரணமாகும் ... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மிக்கது .. இவைகளுக்கு அறிவியல் அதரமும் உண்டு.. பணத்திற்காக சில வீணர்கள் செய்வதை கொண்டு எல்லாமே இப்படி தான் என முடிவு செய்யாதீர்கள் ... பெரியாரே "கோவில்கள் கூடாது என நான் சொல்லவில்லை அது கொள்ளையர்களின் கூடாரமாக இருக்ககூடாது" என்று தான் சொன்னார்...

August 27, 2009 3:07 PM//

மதவாதி சேதுமாதவன் (மதம் வேண்டுமென்றால் மதவாதி தான்)...ரயில்ல ஏறவேக்கூடாது...என்று கூறிய மதம் தான் இந்து மதம். நீர் ரயில் நம்ம மேல ஏர்றத பத்தி தத்துவம் சொல்ற ...அதெல்லாம் பார்த்து முடிஞ்ச பிறகும் நீர் இன்னும் எப்படி மதவாதியாக இருக்கமுடியுது என்பது தெரியவில்லை..மதம் யானைக்கு வரவேண்டியது...மனுஷனுக்கு வரவேண்டியது அல்ல...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கோயிலை யார் கட்டினார்கள்?, பார்ப்பனன் கட்டினானா...? ஒடுக்கப்பட்வன் கட்டினான்...கட்டியவனை உள்ளே விட்டார்களா...? விடாமல் செய்தவன் சோம்பேறி பார்ப்பனன்...சரி கட்டச் சொன்னவனாவது உள்ளே சென்றானா..? அவனையும் உள்ளே விடவில்லை அந்த பார்ப்பனன்...


பகுத்தறிவு வாதி கண்டுபிடித்த அறிவியல் ஆதாரத்தை மூடநம்பிக்கைக்குள் எப்படி? புகுத்த முடிந்தது. அறிவியல் தான் இப்போது எல்லாமே என்றவுடன் , அறிவியலை கொஞ்ச நாளாகவே துணைக்கு அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஜோசியத்துக்கும் அழைத்துக்கொண்டுவிட்டனர். எப்படி வியாபார யுக்தி பாருங்கள்.

கோயிலே பணம் சம்பந்தப்பட்டது தான் அய்யா....அதில் பணிபுரிபவர்கள் எல்லாம் பணத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் தான். கோயிலே பணம் (கருப்பு பணம்), நகை எல்லாம் உள்ள ஒன்று தான். இதற்கெல்லாம் அறிவியல் பூச்சு பூசாதீர்கள்.

பெரியார் இப்படி சொல்லவில்லை...நான் நம்புகிறேன் அதை நீங்களும் நம்பவேண்டும் என்று அட்வர்ட்டைஸ்மென்ட் பண்ணி திணிக்க சொல்லவில்லை. இதை முற்றிலும் எதிர்த்தார்.

கடவுளின், மதத்திற்கு ஏஜென்டாக எவனையும் ஆக சொல்லவில்லை...
உனக்கு பயமிருக்கிறதா நீயே கடவுளை உருவாக்கி கும்பிட்டு கொள் இன்னும் ஆயிரம் கடவுளைக்கூட உருவாக்கி கொள்...இது பிடிக்கவில்லை என்றால் தூக்கியெறிந்து கொள், என்று நம்பிக்கை தான் வேறுவழியில்லை, எனக்கு மரணபயமுண்டு என்பவர்களுக்கு சுயமரியாதையுடன் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள கூறியது.

கடவுளை வைத்து யாருக்கும் அடிமையாகாதே...எவன் காலிலும் விழாதே..மூடநம்பிக்கையை பின்பற்றாதே...நீ பின்பற்றும் மூடநம்பிக்கையை பிறருக்கு புகட்டாதே.. (புகட்டினால் பகுத்தறிவு வாதி கண்டிப்பாக வருவான் அதை தடுக்க முடியாது...ஏன்னா போலி நம்பிக்கை வெளியே தெரிஞ்சு போச்சுல்ல)

இந்த ஆரியப் பார்ப்பன கோயில்களை சொல்லவில்லை...யாகம் நடத்துவதை சொல்லவில்லை...யாகம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கானோர் ஒரு வேளை சோற்றுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களை, பசியில் தவிக்கவிட்டு பழங்களையும். பட்டு சேலையையும் நெருப்பில் போட்டு பொசுக்க சொல்லவில்லை...பசித்த வயிறுகள் பாலுக்காக ஏங்கும் குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு மாட்டின் பாலையும் தயிரையும் சிலைக்கு ஊற்ற சொல்லவில்லை...அதை வீணாக்க சொல்லவில்லை...

அடிக்கடி பெரியாரிசத்தை தவறாக தற்காப்பு கேடயமாக பலரும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

நம்பி said...

//கையில் சிரங்கு வந்தால் கையை வெட்டுபோடுவார்களா? குணப்படுத்தத்தான் வேண்டும்.//

கையில் சிரங்கு வந்தால் கோயிலுக்கு ஏன் போகிறாய் மருத்துவரிடம் செல்...இதை சொல்வது தான் பகுத்தறிவு.


எங்கே? பழைய உளுத்துப்போன தத்துவத்தை துணைக்கு இழுத்தாச்சா...உன்னுடைய மூடநம்பிக்கைக்கு எதை வேணும்னாலும் இழுத்துப்ப...

சாதரணமாகவே கோயில்ல சேர்க்கமாட்டானுங்க...கையில்ல சிரங்கு வந்தா சுத்தமாக கோயில் வாசலிலேயே தடுத்து நிறுத்திடுவானுங்க. சாமிக்கு தொத்து வியாதி வந்துடும்னு தெரியுமா? அந்த விஷயம் பத்தி...வேற ஒன்னுமில்ல குஷடரோகி என்று...உங்களோட பெரிய குஷடமப்பா...ச்சீ பெரிய கஷ்டமப்பா...