Search This Blog

17.8.09

சூத்திரன் என்றால் யார்? உங்கள் மனுதர்மம் என்ன சொல்கிறது?
துவேஷம்


தமிழக முதல்வர் கருணாநிதி: ஜாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல், ஒன்றுபட்டு நின்று, சுதந்திரத்தின் பயன் முழுவதையும் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்க, அனைவரும் உறுதியேற்போம்.

டவுட் தனபாலு: என்னது... ஜாதி, மத வேறுபாடுகளுக்கு இடம் கொடாமலா... அப்படின்னா... இனிமே, இந்துன்னா திருடன்னு அர்த்தம்னும், சிங்கங்கள் நடமாடலாம்; சிறுத்தைகள் நடமாடக்கூடாதான்னும், அவாள், இவாள் பற்றியும் பேச மாட்டீங்களா?

--------------------_ தினமலர், 15.8.2009


தென்னாட்டுப் பார்ப்பனர்களைப்பற்றி லாலாலஜபதிராய் கூறுவார்: தாங்களே துவேஷிகளாக இருந்து மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள், துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று.

அது இன்றைக்கும் பொருந்தக்கூடியதாகும். ஆழ்கடல் மூழ்கி அந்தரத்தில் பாய்ந்து பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை இதற்கு.

தினமலர், தினமணி, இந்து, துக்ளக் ஏடுகளைப் புரட்டினாலே போதும். பார்ப்பனர்கள் கக்கும் ஆலகால விஷம் எத்தனை டிகிரியில் கொப்பளிக்கும் என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்து என்றால் திருடன் என்று ஏதோ கலைஞர் அவர்கள் தன் விருப்பத்திற்கேற்ப கோருவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்ப்பதிலும்கூட பார்ப்பன விஷம் பளிச்சென்றே தெரிகிறது!


உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமலபதி திரிபாதியின் நூலிலிருந்து எடுத்துக்காட்டியுள்ளார்.

திரிபாதி என்ற பார்ப்பனர்மீது அல்லவா கோபம் கொப்பளித்துக் கிளம்பவேண்டும். சாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஞான சூரியனிலும் இந்த விவரம் தரப்பட்டுள்ளதே. உண்மை இவ்வாறு இருக்க முதல்வரோடு முட்டிக்கொள்வதில் துவேஷம் இருக்கிறதே தவிர, உண்மை சிறிதும் இல்லையே!

ஆண்டுதோறும் ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, அதன் பொருள் என்ன? நாங்கள் பிராமணர்கள் - துவி ஜாதியினர் _ இரு பிறப்பாளர்கள் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள். நீங்கள் எல்லாம் சூத்திரர்கள் என்று சொல்லாமல் சொல்வதுதானே?

சூத்திரன் என்றால் யார்? உங்கள் மனுதர்மம் என்ன சொல்கிறது?

யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், விபசாரி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் என்று கூறும் கூட்டம் இனத் துவேஷிகளா? இந்த இழிவை எதிர்த்துத் தன்மானக் குரல் கொடுக்கும் திராவிடர் இயக்கமும், அதன் தலைவர்களும் இனத் துவேஷிகளா?

நீங்கள் பூணூல் போட்டுக்கொண்டு திரிவது மட்டுமல்லாமல், சாமி சிலைகளுக்கும் பூணூல் போட்டுள்ளீர்களே! சமீபத்தில் திருப்பதி வெங்கடாசலபதிக்குக்கூட மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் போட்டாரே _ இதன் பொருள் என்ன?

பூணூலைக் கழற்றித் தூக்கி எறிந்துவிட்டு மனுதர்மம், இராமாயணம், வேதங்களைக் கொளுத்தி எறிந்துவிட்டு, அதற்குப்பின் முடிந்தால் எங்களைக் குறைகூற முயற்சியுங்கள்.


----------------- மயிலாடன் அவர்கள் 17-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

9 comments:

Suresh V Raghav said...

கடவுள் மறுப்பும் பார்பனீய எதிர்ப்பும் தான் தன்னை ப்ராஜெக்ட் செய்யும் என்று சில பதிவுலக மேதைகள் எண்ணி கொன்டுள்ளனர் போலும்....
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி....
முற்போக்கு எழுத்து என்பது Uplifting a society என்பதை மீறி
Degrading a sect என்பதிலேயே இருக்கிறது....
உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் . ...ஏதோ ஒரு அளவிற்கு எனக்கும் பெரியாரை தெரியும்...

பூணூல் அணிந்த பிராமணனை... அவன் தன் உபாகர்மம்(Daily duties) செய்கிறாயா என்று கேட்டு, அவன் இல்லை என்று சொன்னால் தான், பூணலை அறுத்து எறிவாரம்....- இது உண்மை... 1970'sil NLC யில் vaelai பார்த்த யாரையும் நீங்கள் கேட்கலாம்...

பெரியார் என்பவர் ஒரு சித்தாந்தம் கொண்டு வந்தார்...பார்பனீயம் என்ற ஒரு கான்செப்டை ஒடுக்க சொன்னாரே அன்றி...
பிராமணர்களை ஒடுக்க சொல்லவில்லை... அப்படி சொல்லி இருந்தால்... ராஜாஜியுடன் அவர் இறுதி வரை நட்பாய் இருந்ததும், ராஜாஜியின் பூணல் அறுபடாமல் இருந்ததையும் நாம் காண முடிகிறது..
சக மனிதனையே.. நாய் என்றும், நா கூசும் வார்த்தைகளால் திட்டும் நீங்கள்..
யார் விடுதலைக்காக பாடு படுகிறீர்கள்...

பிராமணன் rationalism பேச கூடாதா? பெரியாரை படிக்ககூடதா ?
Revelution என்பது ஒரு இயக்கத்தில் சேர்ந்து, ஒரு வர்கத்தை திட்டி வருவது அல்ல...
அவன் அவன் சமுகத்தில் நின்று கொண்டே, மாற்ற மனிதர்களையும் மதிப்பதில் தான் உண்டு...

பெரியாரிசம் is not hating anyone but its
Loving all...

மாறுங்கள்...மாற்றாதீர்கள்...
மறுமலர்ச்சி தானே வரும்....

தமிழ் ஓவியா said...

//சக மனிதனையே.. நாய் என்றும், நா கூசும் வார்த்தைகளால் திட்டும் நீங்கள்..
யார் விடுதலைக்காக பாடு படுகிறீர்கள்..//

அடித்தவனை விட்டு விட்டு அடிவாங்கியவனுக்கு புத்தி சொல்வது சரியா? Suresh V Raghav

//பூணூல் அணிந்த பிராமணனை... அவன் தன் உபாகர்மம்(Daily duties) செய்கிறாயா என்று கேட்டு, அவன் இல்லை என்று சொன்னால் தான், பூணலை அறுத்து எறிவாரம்....- இது உண்மை... 1970'sil NLC யில் vaelai பார்த்த யாரையும் நீங்கள் கேட்கலாம்...//

பூணூல் எதற்காக அணிய வேண்டும்?
இது குறித்து இதே வலைப்பூவில் பல முறை விவதிக்கப்பட்டுள்ளது .அருள்கூர்ந்து அந்த பதிவுகளை தேடி படிக்கவும்.

//பெரியார் என்பவர் ஒரு சித்தாந்தம் கொண்டு வந்தார்...பார்பனீயம் என்ற ஒரு கான்செப்டை ஒடுக்க சொன்னாரே அன்றி...
பிராமணர்களை ஒடுக்க சொல்லவில்லை... அப்படி சொல்லி இருந்தால்... ராஜாஜியுடன் அவர் இறுதி வரை நட்பாய் இருந்ததும், ராஜாஜியின் பூணல் அறுபடாமல் இருந்ததையும் நாம் காண முடிகிறது..//

பெரியார் சொன்னது பெரியாரியல், அம்பேத்கர் சொன்னது அம்பேத்கரியம். மார்க்ஸ் சொன்னது மார்க்சியம். பார்ப்பனியம் யார் சொன்னது ?Suresh V Raghav
பார்ப்பனர்கள் தானே.

அப்ப பார்ப்பனர்களை எதிர்க்காமல் பார்ப்பனியத்தை எப்படி எதிர்ப்பது.
இது குறித்து இதே வலைப்பூவில் விவாதிக்கப்பட்டுள்ளது. தேடிப் படிக்கவும்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நான் said...

ஐ.......உரையாடல் இவ்வளவு டீஸண்ட் ஆ இருக்கு

Thamizhan said...

இணையத்தில் அறிவுடன்,கருத்துக்களை எழுதி சிந்திப்பது நல்லது.
அதைச் சிலர் அசிங்கப் படுத்தும் போது அநாகரீகமான பதில் தரவேண்டியுள்ளது.

பெரியார் எந்த ஒரு தனிப்பட்ட பார்ப்பனரையும் தாக்கவில்லை.தாக்கச் சொல்லவும் இல்லை.
பார்ப்பனர்கள் (பார்ப்பனர்கள் அனைவரும் பிராமணர்கள் அல்லர் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்)மாறிவிட்டார்கள் என்று நம்பும் தமிழர்களுக்குத்தான் பார்ப்பனீயம் இன்னும் மாறவில்லை என்பது விளக்கப் பட்டுள்ளது.
இதில் உண்மையில்லையென்று சொல்கிறீர்களா?

பார்ப்பனர்கள் மனிதர்களாக அனைவரும் சமம் என்று கூறி ஒத்து வாழ வேண்டும் என்று சொல்லி எழுதி,நடக்கச் சொல்லுங்கள்,பெரியார் தொண்டர்களுக்கு வேலை இருக்காது.
பெரியார் மனித நேயவாதி.
அவரை மிகவும் கேவலாமாகப் பேசியதை அலட்சியப் படுத்தியவர்.
இன்று படித்ததாகக் கூறிக்கொண்டு இவ்வளவு கேவலாமாக எழுதுவதில் தான் வம்பும்,வீண் வேலையும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிறுக்கன் (பெயரை மாத்துங்க ... இது எனது வேண்டுகோள் தான்)

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா.

நயத்தக்க நாகரிகத்துடன் நடந்து கொண்டிருக்கிறோம். பார்ப்பனர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பதை அன்பர்கள் அறிந்துதான் வைத்துள்ளார்கள்.

இணையத்தில் பார்ப்பனர் செல்வாக்குடன் விளங்கி வருகிரார்கள். இதில் அவர்கள் வைத்ததே சட்டமாக இருந்தது.
நம்மைப் போல் ஓரிருவர் இதில் நுழைந்தது அவர்களுக்கு பிடிக்க வில்லை. நம்மை அசிங்கப்படுத்தினால். இழிவு படுத்தினால் ஒதுங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் ஒதுங்குவதும் ஓடுவதும் இனி நடக்காது என்பதை அவாளுக்கு நாம் உணர்த்தியாக வேண்டும்.

எனது மாநாட்டுக்கு பிரச்சார பலமே பார்ப்பனர்கள் தான் என்று அய்யா பெரியார் சொல்லுவாரே அது போல் அவர்கள் நம்மை இழிவுபடுத்த படுத்த பெரியார் அய்யாவின் கொள்கை அகிலம் முழுவதும் பரவ வாய்ப்பு ஏற்படும்.

நன்றி அய்யா.

Suresh V Raghav said...

அடித்தவனை விட்டு விட்டு அடிவாங்கியவனுக்கு புத்தி சொல்வது சரியா? Suresh V Raghav--
உங்கள் நடையில் நயம் இருக்கிறது. ஆனால்.. நாய் நரி என்று மற்றவர்கள் சொல்வதை நியாயப்படுத்த முயல்வது எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று புரியவில்லை. சரித்திரத்தை மாற்ற முயல வேண்டுமே தவிர.... எதிர்வினை செய்வது எந்த வகையில் சரி என்று என் அறிவிற்கு எட்டவில்லை.

பூணூல் எதற்காக அணிய வேண்டும்?
அடையாளங்களை பற்றி பேசி நாம் திசை திரும்புகிறோம் என்று நினைகிறேன்...மீண்டும் ராஜாஜி பெரியார் நட்பிற்கு வருகிறேன்...பெரியார் சொன்னது ," நீ எந்த அடையாளத்தை சுமக்கிரயோ அதற்கு நீ ந்யாயமாக நடக்க வேண்டும் என்பது தானே? தவறு இருந்தால் திருத்தவும்... பூணூல் அணிவதால்... நன்மையும் இல்லை கெடுதலும் இல்லை.Its just a symbol closed within shirts. இது என் கருத்து... மாற்றம் தேவை எனில் வழிநடத்தவும்...

பெரியார் சொன்னது பெரியாரியல், அம்பேத்கர் சொன்னது அம்பேத்கரியம். மார்க்ஸ் சொன்னது மார்க்சியம். பார்ப்பனியம் யார் சொன்னது ?Suresh V Raghav
பார்ப்பனர்கள் தானே.

அப்ப பார்ப்பனர்களை எதிர்க்காமல் பார்ப்பனியத்தை எப்படி எதிர்ப்பது.

--
ஒரு தத்துவத்தை எதிர்க்க அதை உருவாக்கியவரை எதிர்க்க வேண்டும் என்பது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை... உங்கள் எதிர்ப்பு தத்துவத்திற்கு எதிரானதா இல்லை தனிமனிதனுக்கு எதிர் ஆனதா?
கருத்து மோதல்கள் இருக்கலாம்... கர்த மோதல்கள் தேவையா??
மீண்டும் இது ஒரு திசை மாற்றம் போல தோன்றுகிறதே, நண்பரே....(உங்களை நண்பன் என்று அழைப்பதில் objection இருக்காது என்ற நம்பிக்கையில்...)

தமிழ் ஓவியா said...

//பூணூல் அணிவதால்... நன்மையும் இல்லை கெடுதலும் இல்லை.Its just a symbol closed within shirts. இது என் கருத்து... மாற்றம் தேவை எனில் வழிநடத்தவும்...//

இப்பதிவில் நீங்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் ஏற்கனவே இவ்வலைப்பூவில் பதில் அளிக்கப்படுள்ளது.

தமிழ் ஓவியா வலைப்பூவின் முகப்பில் தங்களுக்கு தேவையான சொல்லைக் கொடுத்து தேடிப் படிக்க வேண்டுகிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நம்பி said...

//பிராமணன் rationalism பேச கூடாதா? பெரியாரை படிக்ககூடதா ?
Revelution என்பது ஒரு இயக்கத்தில் சேர்ந்து, ஒரு வர்கத்தை திட்டி வருவது அல்ல...
அவன் அவன் சமுகத்தில் நின்று கொண்டே, மாற்ற மனிதர்களையும் மதிப்பதில் தான் உண்டு...

பெரியாரிசம் is not hating anyone but its
Loving all...//suresh V Raghav...

இதற்கு முன்னே பார்ப்பனரான் கோரா(கோபால் ராஜூ ராமச்சந்திர ராவ்) (தெலுங்கு பார்ப்பனர்) தெலுங்கு பெரியார் என் அழைக்கப்படுவபவர் காந்தி கூடவே இருந்த நாத்திகர்....சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்படம் பெற்றவர்...அவர் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் அவர் எப்படி எல்லாம் பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் இளமையிலேயே வெறுத்தவர் என்பது சுட்டி காட்டப்பட்டுள்ளது...பூணூலை அணிய மறுத்தற்காக தன் வீட்டினாலேயே துரத்தப்பட்டவர்...இருந்தும் தன்கொள்கையில் சற்றும் மனம் தளராத நாத்திகராகவே வளம் வந்தார் பார்ப்பினீயத்தையும் பார்ப்பனர்களையும் எதிர்த்தவர் தான்...இவர் Rationalist ஆக இருந்ததால் தான் இன்று பார்ப்பனர் அல்லாதவர்கள் விரும்பும் மகனாக விளங்குகின்றார்..எல்லோருக்கும் இவர் பார்ப்பன எதிர்ப்பாளர் தான்...பெரியாரும் இவரும் சந்தித்து உரையாடியதுண்டு....அவருக்கு எண்ணிக்கையில் அதிக வாரிசுகள் அவருடைய வாரிசுகளும் பகுத்தறிவை வளர்த்து வருகிறார்கள்..பார்ப்பனரை எதிர்த்து வருகிறார்கள்....அதன் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இப்படி பலரை கூற முடியும்...WR வரதராஜன்...பூணூலை கழற்றி எரிந்தவர்...இவர் எல்லாம் பார்ப்பனர்க்ளை அவர் பண்ணும் அட்டூழியங்களை வெளிப்படையாகவே கூறியவர்கள்...இவர் பற்றி 1989 ஆண்டே குங்குமத்தில் கட்டுரை வந்துள்ளது. இந்த ரேஷனலிசம் தான் இப்போது தேவை...பார்ப்பனர்கள் செய்ததை பார்ப்பனர்கள் கேட்டாலே பொங்கி எழவேண்டும். இந்த புரட்சி தான் இப்போது தேவை...சமரசம் இல்லை.
பார்ப்பனர்களிடம் பரிதாப பச்சாதாப உணர்ச்சிகள் எனபது என்று எதுவுமே கிடையாது...தனக்கு ஆபத்து என்றால் எதையும் செய்வார்கள் இதை பார்ப்பனரகளே கூறியுள்ளனர்.

ச்சாதி மதம் என அனைத்தையும் துறந்தவர் இன்று அவர் பிள்ளைகளும் அவர் வழியில்....அணுகளவும் பிசகாமல் இருப்பதாக் தகவல்.