Search This Blog

23.8.09

தமிழறிஞர்கள் பார்வையில் பார்ப்பனர்கள்


பார்ப்பனர்பற்றி...

உழைக்கின்ற செந்தமிழர் குருதி தன்னை
உறிஞ்சியே தன் வாழ்வை நடத்துகின்ற
பழிகாரக் கும்பலினை ஒழிக்கும் நாளே
பைந்தமிழர் வாழ்வினில் ஓர் திருநாளாகும்.

------------------புரட்சிக்கவிஞர்

************************************



பிராமணர் வெளிநாட்டினின்று வந்தேறிகளின் வழியினராதலாலும், சிறுபான்மையராதலாலும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்பதாலும், ஆரியம் திராவிடத்தின் திரிபாதலாலும், ஆரிய மந்திரங்களெல்லாம் தமிழர் அறியாத சிறு தெய்வக் கொலை, வேள்வி, வழிபாடு பற்றியனவாதலாலும், சமஸ்கிருதம் வேதமொழியும் தமிழும் கலந்த இலக்கிய மொழியாதலாலும், ஆரிய மொழி தேவ மொழியென்றும் பிராமணர் நிலத் தேவரென்றும் ஏமாற்றப்பட்டதனாலேயே இடைக்காலத் தமிழர். பிராமணர் ஆரிய மந்திரங்களைக் கொண்டு திருக்கோவில் வழிபாடு செய்ய இடந்தந்தனராதலாலும், அவ்வேமாற்று இன்னுந் தொடர இம்மியுந்தகுதியில்லை என அறிக. பிராமணர் தமிழுக்கு உண்மையாயிருந்து தமிழிலேயே வழிபாடு நடத்தின், அவர் பூசைத் தொழிலைத் தொடர்ந்து செய்யலாம்.

---------- ஞா. தேவநேயப்பாவாணர் (கழகக் குரலில்எழுதியது.)

***************************************



கோயமுத்தூர் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு பெரிய கிராமத்தில், பெரிய பார்ப்பனப் பணக்காரர் வீட்டில் கலியாணப் பாட்டுக்கச்சேரி நடந்தது. அதில் சம்பந்தப்பட்ட மூன்று வித்வான்களில் இரண்டுபேர் பார்ப்பனர். ஒருவர் பார்ப்பனர் அல்லாதார்.- கச்சேரி முடிந்ததும் இரண்டு பார்ப்பனர்களுக்கும் மாலை போட்டார்கள்.- சூத்திரன் என்னும் காரணத்தால் மற்றவருக்கு மாலை போடாமல் விட்டுவிட்டார்கள். அவர் யார் என்றால் மிருதங்கம் திரு. அழகநம்பிப்பிள்ளையவர்கள்.இவை சபையில் நடந்த விஷயம்.

------------------------- கைவல்யம் கட்டுரை குடிஅரசு

*****************************************

சொர்க்கம், மோட்சம், ஆத்மா, பரலோகம் என்று எதுவும் கிடையாது. வர்ணாசிரம தர்மங்கள் அத்தனையும் வெறும் புரட்டு. சிரார்த்தம் போன்ற சடங்குகளுக்கு எந்தவிதமான பயனும் கிடையாது. அக்கினி ஹோத்திரம், ஹோமம், வேதங்கள், திரிதண்டகம்,திருநீறு, முட்டாக்கு - இவையெல்லாம் அறிவும் ஆண்மையும் இல்லாதவர்கள் தம் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்திருக்கிற எட்டு வழிகள் என்று பிரகஸ்பதியே சொல்லியிருக்கிறார். ஆட்டைக் கொன்றால் (யாகத்தில் பலியிடுவதால்) சொர்க்கம் கிடைக்கும் என்பது நிதர்சனமானால் யாகம் செய்கிறவன் தன் தகப்பனையே ஏன் கொல்லாமல் விடுவான்?-ஆட்டைவிட உயர்ந்த அப்பனையே கொன்றால், சொர்க்கத்துக்கும் மேலான கதி கிடைக்குமே! வேதங்களை இயற்றியவர்கள் யார் தெரியுமா? வெளிவேஷக்காரர்களான கோமாளிகளும், சூழ்ச்சி நிறைந்த போக்கிரிகளும், எதற்கும் துணிந்த மனிதப் பேய்களும் ஒன்று கூடித்தான் வேதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்


------------------ஆதாரம்: "ஸர்வதர்ஸன ஸங்க்ரஹம்" என்ற நூலிலிருந்து.

1 comments:

தமிழநம்பி said...

///நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன்///

அவர்கள் இப்படி ஓர் எழுத்து வேறுபாடு காட்டி வலைப்பதிவைத் தொடங்கி இருப்பது ஏதோ குழப்பம் செய்வதற்காக இருக்குமானால் அவர்கள் கடுமையான கண்டனத்திற்குரியவர்களே!

நடுநிலையாளர் எவரும் அவரைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள்.