Search This Blog

15.8.09

திராவிடர் கழகத்திற்குக் கடவுள், மதம், சாஸ்திரம், தேசம், மொழி இவற்றில் பற்று கிடையாது!


கோயில் விழாக்களுக்கான செலவைத் தடுத்து
விஞ்ஞான ஆராய்ச்சிக்கு நிதி
5.9.1970 முதல் 10.9.1970 வரை மதுரை மாவட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு:-நம் இயக்க பிரசாரம் தான் மக்களை மாற்றமடையச் செய்து வருகிறது. மற்ற இயக்கங்களுக்கு எல்லாம் வேறு வேலை இருக்கிறது. தேர்தலில் ஈடுபடுவது, பதவிக்குச் செல்வது என்பது இருக்கிறது. நம் இயக்கம் ஒன்றுதான் தேர்தலுக்கு நிற்காமல் பிரசாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் செய்கிறது. இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் நம்பிக்கைக்கு, நடப்பிற்கு விரோதமான கருத்துகளை எடுத்துச் சொல்லிவருவது நம் இயக்கம் ஒன்று தானாகும். இதனால் எந்தச் சிறு பலனும் நாம் அடைவது கிடையாது.

1925-இல் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று நம் கொள்கை எதுவோ அது தான் இன்றைக்கும் நம் கொள்கையாகும். இடையில் நம் மக்களின் நலனை முன்னிட்டுக் காமராஜரை ஆதரிக்க நேர்ந்த போது, சமுதாயக் கொள்கைகள் தீவிரமாக பிரச்சாரம் செய்யாமல் இருக்க வேண்டியதாயிற்று. தற்போது நம் கொள்கை உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பதால் சமுதாயக் கொள்கைகளைத் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றோம். இந்தியாவிலேயே சமுதாயத்திற்காக இருக்கிற இயக்கம் திராவிடர் கழகம் ஒன்றுதான் ஆகும். அது அரசியலில் ஈடுபடுவது கிடையாது-பதவியை இலட்சியம் செய்வது கிடையாது.

திராவிடர் கழகத்திற்குக் கடவுள், மதம், சாஸ்திரம், தேசம், மொழி இவற்றில் பற்று கிடையாது. மனித சமுதாயப் பற்று ஒன்று தான் உண்டு. தேசப்பற்று, மதப்பற்று, மொழிப்பற்று, கடவுள் பற்று என்பது எல்லாம் வாய்ப்பால் ஏற்படுதே ஒழிய, இயற்கையானதல்ல. இதெல்லாம் காலப் போக்கில் சுயநலக்காரர்களின் பிரசாரத்தால் ஏற்பட்டதேயாகும்.

என்னைப் பொருத்தவரை இந்நாட்டை இந்நாட்டுக்காரன் ஆள வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும், நம்மை மனிதனாக மதித்து நடத்தக் கூடியவனாக இருந்தால் அவனை நான் வரவேற்பேன்.

நாம் மனிதர்களாக வாழ்வது பெரிதா? நம் மதம், நம் மொழி, நம் நாடு, நம் கடவுள் என்று சூத்திரர்களாக, இழிமக்களாக அறிவற்றவனாக இருப்பது பெரிதா? நம்மை நாய்க்கன், மராட்டியன், சேரன், சோழன், வெங்காயம் எல்லாம் ஆண்டிருக்கின்றான். அதன் பயன் என்ன? நாம் சூத்திரர்களாகத் தானே இருக்கின்றோம்?

நம் இழிவை நீக்குகிறவன் எவன் ஆட்சி செய்தாலும் அவனை வரவேற்பேன். நம் மக்களுக்கு அறிவை கொடுக்கக்கூடிய மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழியை வரவேற்பேன். பொதுவாக நம் மக்களுக்கு நமக்கு என்ன தேவையோ, அதை எது கொடுக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்தாகும்.

இப்போது இந்தியா சுதந்திரம் அடைந்து- அது ஏற்படுத்திக் கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசமைப்புச் சட்டம் என்ன என்றால், மதம் பாதுகாக்கப்பட வேண்டும் அவனவன் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்தச் சட்டத்தைக் கொண்டு நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியாது. இந்த சட்டத்தை மதிக்காத வேறு எவனாவது வந்தால் தான் இந்த இழிவு ஒழிக்கப்பட முடியும். அடுத்து நம் மக்களின் இழிவிற்குக் காரணமாக இருப்பது, அவர்கள் நம்பி வணங்குகின்ற கடவுளே ஆகும். அறிவோடு பார்த்தால் எந்த மனிதனுமே கடவுளை நம்புவது கிடையாது. பட்டை அடித்துக் கொள்பவன், நாமம் போட்டுக் கொள்கிறவன் எல்லாம், தம் மடத்தனத்தால் போட்டுக் கொள்கின்றவனே தவிர பக்திக்காகப் போட்டு கொள்வது கிடையாது.

இந்த நாட்டு மக்களின் இழிவினைப் போக்க வேண்டுமானால் அது நம் இயக்கம் ஒன்றினால் தான் ஆகும். நம் மக்களின் இழிவை நிலை நிறுத்துவதற்குக் கடவுள், மதம், சாதி, சமீப காலம் வரை இருந்த ஆட்சி, அரசியல் கட்சிகள் யாவும் பாதுகாப்பாக இருக்கின்றன. நம் இயக்கம் ஒன்று தான் இவை யாவும் ஒழிக்கப்பட்டு நம் சமுதாய இழிவு நீக்கத்திற்காகப் பாடுபட்டு வருகிறது. நம் நாட்டில் தோன்றிய சமுதாய சீர்திருத்தவாதிகள் என்போர்கள் அனைவரும் கடவுள், மதம், சாதி, பழைமை காப்பாற்றப்பட வேண்டும்,- அதில் கைவைக்கக் கூடாது என்று சொல்லி அவற்றைக் காப்பாற்றுவதை சீர்திருத்தமாகக் கொண்டிருந்தவர்களே ஆவார்கள்.

இந்தக் காந்தி, மகாத்மா என்று பார்ப்பானால் பட்டம் சூட்டப்பட்டவர். அவரை அறியாத பாமரப் பொது மக்கள் இவரை பெரிய மகாத்மா என்று சொல்வார்கள். எங்களைப் பொருத்தவரை அவர் சாதாரண மனிதர் தான். அவர் பெயரைச் சொல்லி ஓட்டிற்கும், பதவிக்கும் நிற்பவர்கள் தான் அவரைப் பெரிய மனிதராக்கிக் காட்டுகிறார்கள். மக்களிடையே அவருக்குச் செல்வாக்கு இருப்பதால், இன்றைய ஆட்சியாளரும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அதன் மூலம் பலன் பெறப் பார்க்கின்றனர். இந்தக் காந்தி வருணாசிரமம்,- ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லி அதற்காகத் தொண்டாற்றி வந்தவரே ஆவார். தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனி கோயில், தனிப் பள்ளிக் கூடம், தனிக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்தான். அதன்படி நடந்து கொண்டவர்தான். மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லாதவர் ஆவார்.

காங்கிரசில் ஜாதி முறை காப்பாற்றப்படவேண்டும். ஜாதி முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாலேயே நான் அதை விட்டு வெளியேறினேன். நமக்கிருக்கிற சூத்திரத் தன்மையைப் பற்றி, இழிஜாதி- ஈனஜாதித் தன்மையைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. நம் பண்டார சன்னதிகள் முதற் கொண்டு இதை ஏற்றுக்கொண்டு இருப்பவர்களே ஆவார்கள். இந்த இழிநிலைக்கு 4-ஆம் ஜாதித் தன்மைக்கு அடிப்படையாக இருப்பது கடவுள் ஆனதால், அதை ஒழிக்கவேண்டும் என்று நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். சுயமரியாதை இயக்கம் ஒன்று தான் இதற்காகத் தொண்டாற்றி வருகிறது. தி.மு.கழகத்தின் கொள்கையும் இது தானாகும். அரசியலில் ஈடுபட்டிருப்பதால் வெளியில் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கோயில்களை எல்லாம் இடித்துத் தரைமட்டம் ஆக்க வேண்டும், அதில் உள்ள குழவிக் கற்களை எல்லாம் உடைத்து ரோட்டிற்கு ஜல்லியாகப் போட வேண்டும். பார்ப்பானை எல்லாம் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும். அல்லது அவன் நம்மோடு சேர்ந்து மண்வெட்ட, மூட்டை சுமக்க, ஏர் உழ வரவேண்டும். அரசாங்கம் நாம் சொல்கிறபடி நடக்கக்கூடியதாக இருக்கவேண்டும். கோயில்களை இடிக்க, சிலைகளை உடைக்க, கோயில் கட்டுவதைத் தடுக்க அரசாங்கம் ஆதரவு கொடுப்பதாக இருக்க வேண்டும். தேர்த் திருவிழா- உற்சவங்களை எல்லாம் தடை செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தக் கோயில்களுக்கு உற்சவங்களுக்கு, திருவிழாக்களுக்கு செலவழிக்கிற பணத்தைக் கொண்டு மக்களுக்கு விஞ்ஞான, அதிசய அற்புதங்களைக் கண்டு பிடிக்கச் செலவிட வேண்டும். அப்படிச் செய்தால் நாம் மற்ற மேல் நாட்டுக்காரனைவிட, சிறந்த விஞ்ஞானச் சாதனங்களைச் செய்ய முடியும்.
இப்போது நாம் மேல் நாட்டுக்காரன் கண்டு பிடித்த சாதனங்களைக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 3.9.1970

4 comments:

bala said...
This comment has been removed by a blog administrator.
தமிழ் ஓவியா said...

விமர்சனம் என்பது நாகரிகமாகவும், சான்றுகளுடனும் இருந்தால் தான் அதற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.

நமது கருத்தை எதிர் கொள்ள முடியாத ஒரு சில பார்ப்பனர்கள் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் ,கொச்சைப்படுத்தியும் பின்னூட்டம் போடுகிறார்கள்.

இது அரோக்கியமான விவாதத்தை திசை திருப்பும் பார்ப்பனிய பித்தலாட்டமாகும்.

வாசகர்கள் இது போன்ற பின்னூட்டங்களை இனியும் அனுமதிக்காதீர்கள் என்று தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமூம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது வரை அனுமதித்திருந்தேன்.

இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் இனி நமது பார்வைக்கு வந்த பின்பே வலைப்பூவில் பதிவு செய்யப்படும்.
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

bala said...

//இனியும் அசிங்கமான ஆபாசமான பின்னூட்டங்களை அனுமதிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் பின்னூட்டங்கள் //

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ந்ம்ம திராவிட சொன்டி தமிழர்களின் தந்தை பெரிய தாடிக்கார அய்யா உளறிவிட்டுப் போன ஆபாசங்களையும்,அபத்தங்களையும் பதிவுல போடூவீங்க;மேலும் நம்ம பெரிய தாடிக்கார அய்யாவை அவர் செத்த பிறகு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வரும்,கயவன்,கொள்ளைக்காரன் சூரமணீ,மற்றும் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்,மின்சாரம்,மயிலாடன், கழிசடை.பூங்குன்றன்,விளக்குமாறு,துடப்பைக்கட்டை போன்ற பாசறை சீனியர் நாய்கள் ஆபாசமாக குரைப்பதை பதிவில் ஏற்றும் நீயா ஆபாசம், அசிங்கம் என்று பகுத்தறிவில்லாமல் குதிப்பது?

நேர்மையான கேள்விகளுக்கோ,எதிர் கருத்துகளுக்கோ பதில் தெரியவில்லை என்றால் "எனக்குத் தெரியாது;எனக்குத் தெரிந்ததெல்லாம் தாடி,சூரமணீ,மயிலாடன்,மின்சாரம்,விலக்குமாறு போன்ற பெரிய நாய்கள் குரைப்பதையெல்லாம் விழுங்கி மீண்டும் வலையில் வாந்தியெடுப்பது மட்டுமே" என்று ஒத்துக் கொண்டு போவதுதானே.அதை விட்டு விட்டு "ஆபாசம்,அசிங்கம்" என்று சப்பைக் கட்டு கட்டுவது தாடிக்கார சிஷ்யனுக்கு அழகா என்று சொல்.

என்னிக்குடா உங்களுக்கு பகுத்தறிவோடு சிந்திக்கும் திறன் வந்து,சுயமரியாதையோடு மனுஷனாக வாழப்போகிறீர்கள் முண்டங்களே.

பாலா

நீ பதில் குரைக்க முடியாமல் விழிக்கும் போதெல்லாம் பாய்ந்து குரைத்து வரும் சும்பை.இளங்கோவன் என்ற தமிழன் நாய் கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஓடிப்போன பிறகு நீ ரொம்பவே நொந்து நூலாய் போய் விட்டாய் போலும்;அதனால் தான் இப்படி புலம்புகிறாய் என்று புரிகிறது,பேசாமல் நீயும் பாரிஸ் யோனியம்மா என்ற திராவிட மோகினி நாயின் காபரே ஆட்டத்தில் மயங்கி கொளத்தூரான் பாசறைக்கு ஓடிவிட வேண்டியது தானே.இங்கே ஏன் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறாய்.

Unknown said...

பெரியாரின் சிலையின் பீடத்தில் கடவுள் மறுப்பு வாசகம் எழுதிவைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை என்று அரசே சொல்லிவிட்டது அதன் பின்னும் பார்ப்பன பொறுக்கி பாலா போன்றவர்கள் பெரியாரை வம்புக்கிழுப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். அது மட்டுமல்லாது பெரியாரைப் பற்றி கொச்சைப் படுத்தி பின்னூட்டம் இடுவது என்பது ஒரு தந்தைக்கு பிறந்தவன் செய்யக்கூடிய காரியமல்ல.
அந்த பின்னூட்டத்தை ஆதரிப்பவனும் அவன் அப்பனுக்கு பிறந்தவன் இல்லை என்பதும் உண்மை .


பார்ப்பன பாலா வின் தாயார் விபச்சாரி,
பார்ப்பன பாலா வின் சகோதரி கண்டவனுடன் கலவி செய்தவள்

பார்ப்பன பாலாவின் மனைவி
மணியைக் காட்டினால் மயங்கி விடுவாள் என்றா எழுதி வைத்திருக்கிறார்கள்? இல்லையே

பெரியாரின் சிலையின் பீடத்தில் பெரியாரின் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைதானே எழுதி வைத்துள்ளார்கள்.

அப்புறம் ஏண்டா பார்ப்பன பொறுக்கி பரதேசி நாய்களா? உங்களுக்கு பெரியார் மேல் கோபம்?

மாமிகளை வைத்து விபச்சாரம் செய்யும் மாமாப் பயல்களே பெரியார் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கடா வெங்காயங்களா?