Search This Blog

23.8.09

பார்ப்பனர்எதிர்ப்பு பார்ப்பனர்களைத் தாக்குதல்தான் திராவிடர் கழகத்தின் வேலையா?


திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறதா? கிறித்து,இஸ்லாம் மதங்களை விமர்சிக்கவில்லையா?

சங்கராச்சாரிகள் தாழ்த்தப்பட்டவகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

சங்கராச்சாரியார் பேச்சைகேட்டு துக்ளக் “சோ” ஆள்காட்டி வேலை பார்த்தது உண்மையா?

சங்கராச்சாரி வேண்டிக் கொண்டதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு காய்ச்சல் வந்ததா?

இவ்வளவுக்கும் பிறகும் பெரியார் தொண்டர்களின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும்,

இது போல் பல உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள


("எதிரொலி" நாளேட்டில் அன்றாடம் சுயமரியாதைக் கருத்துக்களை கட்டுரைகளாக வடித்து வரும் சின்னக் குத்தூசி - ஞானி அவர்கள் - கஞ்சி சங்கராச்சாரியை நேரில் கண்ட கருத்தாழ மிக்க பேட்டி)

1983 ஆம் ஆண்டு உண்மை நாடுவோர் வெளியிட்டுள்ள சங்கராச்சரியாரின் முகத்திரையை கிழித்தெறிந்த “சின்ன சங்கராச்சாரி –யார் ?” என்ற நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப் படுகிறது. நமது வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிய வேண்டுகிறோம் -

நன்றி

*************************************************************************************
சின்ன சங்கராச்சாரி - யார்?


பகுதி - 2



ஸ்வாமிகள்: "யார் சொன்னது நாங்கள் தீண்டாமை அனுஷ்டிக்கிறோம் என்று; என்னோடு வந்து பாருங்கள் நான் ஒவ்வொரு ஊரிலும் சேரிகளுக்குச்செல்வதையும் சேரி ஜனங்களுக்கு நன்மை செய்வதையுமே பெரிய பணியாக ஏற்று நடத்தி வருகிறேன்."

சி.கு.: "அய்யா சொல்வதைக் கேட்க ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், ஸ்வாமிகள் சேரிக்கு போவதாலும், சேரி ஜனங்களுக்கு சிலநன்மைகள் செய்வதாலும் என்ன பெரிய மாறுதல் வந்துவிட முடியும்?

காந்தியடிகள் நடத்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை விடவா? ஆலயப் பிரவேசம் என்றூ ஊரூருக்கும் நடத்தினார்களே; அதனால் அரிஜனங்களின் நிலைசமூகத்தில் உயர்ந்துவிட்டதா? இப்போதும் மாலை நேரங்களில் எல்லாக் கோயில்களிலும் போய்ப் பார்க்கலாம். எத்தனை அரிஜனங்களை தங்களோடுமற்ற மக்கள் சமமாக நடத்துகிறார்கள். மேல்சாதி அமைப்புகள் உயர்சாதி மனோபாவம் ஆகியவைகளை அப்படியே போற்றிப் பாதுகாத்துவைத்துக் கொண்டு சேரி ஜனங்களுக்கு நன்மை செய்கிறேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

ஏன் தங்களையே எடுத்துக் கொள்வோம்; அரிஜனங்களுக்கு நன்மை செய்வதாக சொல்கிறீர்கள். ஆனால் அதே அரிஜனங்களும் அர்ச்சகர் ஆகலாம்என்றால் குறுக்கே நிற்கிறீர்கள்."


ஸ்வாமிகள்: "நான் எங்கே குறுக்கே நிற்கிறேன்; யாரோ வழக்குப் போட்டால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பு?"

ஞாநி: "வழக்குப் போட்டவர்கள் யார்? உங்களைப் பின்பற்றுபவர்கள்தானே; நீங்கள் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே!"

ஸ்வாமிகள்: "ஏன் சொல்ல வேண்டும்? அது அவர்கள் இஷ்டம். ஆகமங்களுக்கு விரோதமானது என்பதால் அவர்கள் கோர்ட்டுக்குப்போகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பு அப்படி வந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"

சி.கு.: "இந்து லா என்பதுதானே பெரும்பான்மை மக்களின் உரிமைக்கும் விருப்பங்களுக்கும் எதிராக இங்கே இப்படி எல்லாம் ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் வேதம், ஆகமம், சாஸ்திரம் என்ற பேரால் நடத்தப்படும் இப்படிப்பட்ட அக்கிரமங்களை எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது."

ஸ்வாமிகள்: "நாம் என்னதான் அரிஜனங்களுக்காக பாடுபட்டாலும் சில இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளூம் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. நான்தமிழ்நாட்டை சொல்லவில்லை. வடக்கே பம்பாய் போன்ற இடங்களில் தலித்பந்தர் போன்ற இயக்கங்கள் பயங்கர வன்முறையில் ஈடுபடுகின்றன. அதுதேவை அற்றது."

சி.கு.: ஸ்வாமிகள் இப்போது நாம் ஆரம்பத்தில் சொன்ன ஒரு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். வடக்கே பெரியார் தோன்றாததாலும் ஜாதி ஒழிப்புஇயக்கங்கள் இல்லாததாலும் இன்னமும் அங்கு சாதிவெறி கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. ஆகவே அங்கு வன்முறையும் இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சமூக மாறுதல் இவ்வளவு அமைதியாக நடந்து வருகிறதே; அதற்குக் காரணம் யார்? பெரியார்தான். பெரியாரின்அய்ம்பது ஆண்டு காலத்திற்கும் மேலான சாதி ஒழிப்புப் பணிகளால்தான் தமிழகத்தில் இவ்வளவு பெரிய மாறுதல், வன்முறை துளியும் இன்றிஏற்பட்டிருக்கிறது."

ஸ்வாமிகள்: "அது வாஸ்தவம்தான். பெரியாரைப் பற்றி எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவர் யாரிடமும் துவேஷம் பாராட்டினதில்லை.ரொம்ப நாகரீகத்தோடு நடந்து கொண்டார். ஆனால், இப்போது அவரைப் பின்பற்றுபவர்கள் அப்படி இல்லை.

கருணாநிதியை எடுத்துக் கொள்ளூங்கள். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனதுபீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும். எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலேதான்அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்!"


சி.கு.: கருணாநிதி தங்களையோ தாங்கள் சார்ந்துள்ள காமகோடி பீடத்தையோ தனிப்பட்ட முறையில் எதுவும் தாக்கிப் பேசவே இல்லை.

தாங்கள் தவறாகச் சொன்ன ஒரு கருத்துக்கு பதிலளித்துத்தான் அவர் பேசினார். தாங்கள் சொன்னீர்கள் 'தமிழர்களுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் இரண்டுகண்கள் போன்றவை. தமிழ் தாய்மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி' என்று.

இது எப்படி சரியாகும்? வழக்கு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் யதார்த்தத்திலும் தாங்கள் சொன்னது பொருந்தவே பொருந்தாத ஒன்று.தாய்மொழி என்றுதான் இருக்க முடியுமே தவிர தந்தை மொழி என்று ஒன்று ஏது?


அப்படியே தாங்கள் சொல்வது போல தமிழர்களுக்கு சமஸ்கிருதம் தந்தை மொழி என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டே பேசுவோம்!

தமிழர்கள் எல்லோருக்கும் சமஸ்கிருதம் தந்தை மொழி என்றால் 97 பேரான மக்கள் அந்த மொழியைப் பயின்று பாண்டித்யம் பெற்றால்கூடகோயில்களில் அர்ச்சகராக முடியாது என்கிறீர்களே!

தமிழன் தனது தாய்மொழியான, தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது; புரியாது என்கிறீர்களே!

அப்புறம் எப்படி தமிழர்களுக்கு தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்பானேன்? எந்தத் தகப்பன் 'எனது மூன்று குழந்தைகள் மட்டுமேஉயர்வானவர்கள். பாக்கி 97 பேர் மட்டம்' என்பான்?

ஸ்வாமிகள்: "நீங்கள் சொல்வது சரி அல்ல. இப்போதே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள்தான் பூஜை செய்துவருகிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழில்தான் பூஜை நடத்துகிறார்கள்; அவர்களில் ரொம்பப் பேருக்கு தமிழ்கூட சரியாகத் தெரியாது..."

சி.கு.: "தமிழே தெரியாதவர்கள் ஆயிரக்கணக்கான கோயில்களில் பூஜை நடத்துகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தமிழை நன்றாகத் தெரிந்தவர்மீதமிருக்கிற கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்தால் என்ன தவறு?"

ஸ்வாமிகள்: "இன்னும் பத்துப் பதினைந்து வருடம் போனால் நிலைமை அப்படித்தான் ஆகப் போகிறது. இப்போதே பல கோயில்களில் உள்ள படாச்சாரியார் சிவாச்சாரியார்கள் எல்லாம் தங்கள் வீட்டுக் குழந்தைகளை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் இந்தவேலைக்கு யார் வரப் போகிறார்கள்?"

சி.கு.: பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்து வேறு வேலைகளுக்கு அனுப்புகிறார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள்!அப்படியானால் பிராமணன் என்று நீங்கள் குறீப்பிடுகிற ஜாதியினருக்கும் பிராமணரல்லாதார் என்று சொல்லப்படுகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பிராமணன் பிரம்மத்தை அறிந்தவன்; காசு பணம் சம்பாதிக்க ஆசைப்படாதவன்; சமூகத்திற்கே வழிகாட்டியாக உயர்ந்த ஒழுக்க சீலங்களை தனதுசொந்த வாழ்க்கையில் அனுஷ்டித்து சமூகத்திற்கே உதாரணமாக இருப்பவன் என்று பெரியவாளின் 'தெய்வத்தின் குரல்' புத்தகம் கூறுகிறது.

ஸ்வாமிகள் சிரிக்கிறார்! "பெரியவாள் புஸ்தகங்களை எல்லாம் நன்றாக படித்திருக்கிறார்" என்று சீனிவாசனிடம் கூறுகிறார்.

நாம் தொடர்ந்து சொல்கிறோம்

"இன்றைக்கு பிராமணர்கள் எல்லாம் பெரியவாள் தொகுத்துக் காட்டியிருக்கிற இலக்கணப்படிதான் இருக்கிறார்களா? நீங்களே சொல்லுகிறீர்கள்;பிராமணர்கள் வேறு வேலைக்குத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள் என்று!

அப்படியானால் 'பிராமணன்' என்று ஏன் அவர்கள் தங்களை இன்னமும் அழைத்துக் கொள்ள வேண்டும்? அவர்களுக்கு எதற்காக பிராமணர் சங்கம்என்று ஒன்று?"

ஸ்வாமிகள்: "நாடார் சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம் எல்லாம் இல்லையா? அதுபோல பிராமணர்களும் தங்களுக்கு என்று சங்கம் வைத்துக்கொள்வதில் என்ன தவறு?

சி.கு.: "தவறு என்று நான் சொல்லவில்லை. நாடார் குலப் பெருமக்கள் சங்கம் வைத்து என்ன கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் தமிழகத்தின் மொத்தஜனத்தொகையில் இத்தனை சதவீதம் பேர் இருக்கிறோம். அவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இத்தனை சதவீத இடங்களை கல்வித்துறையிலும்உத்தியோகத் துறையிலும் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். வன்னியர்கள் ஆனாலும், நாயுடுகள் ஆனாலும், எல்லோருமேமக்கள் தொகை அடிப்படையில் எங்கள் விகிதாச்சாரத்துக்கு ஒதுக்கீடு கொடு என்றுதான் கேட்கிறார்கள்.

ஆனால் ஜனத்தொகையில் 3 சதவீதத்தினர் பிராமணர்கள் சங்கம் வைத்து என்ன கேட்கிறார்கள். ஒதுக்கீடு என்பதே கூடாது; எல்லா இடங்களையும்திறந்து விடுங்கள். தகுதி திறமை பேரால் நாங்களே வந்துவிடுகிறோம் என்கிறார்கள் இது எப்படி நியாயம் ஆகும்?

கருணாநிதியும் வீரமணியும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள பொதுஇடத்தில் ஒரு பத்து சதவீதஇடத்தை முற்பட்டோருக்கு என்று ஒதுக்கீடு செய்யலாம் என்ற அளவிற்குக் கூறுகிறார்களே. அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மறுத்து"ஒதுக்கீடே கூடாது, தகுதி, திறமைதான் அடிப்படை" என்றூ பேசுகின்றவர்கள், "மற்ற சாதியினர் சங்கம் அமைக்கவில்லையா?" என்று கேட்பதில்அர்த்தம் இருக்கிறதா? மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார ஒதுக்கீடு கேட்கும் மற்ற சாதி சங்கங்களும், "ஒதுக்கீடே கூடாது; எல்லாம்எங்களுக்கே" என்று கூறும் பிராமணர் சங்கமும், அடிப்படையிலேயே வேறுபட்டவை ஆயிற்றே!

ஸ்வாமிகள்: "நீங்கள் என்னதான் சொன்னாலும் வெறும் பிராமணர் எதிர்ப்பு பிராமணர்களைத் தாக்குதல்தான் திராவிடர் கழகத்தின் வேலையாகஇருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது."



ஞாநி: "ஸ்வாமிகள் அப்படி நினைப்பது தவறு. வீரமணி, கருணாநிதி போன்றவர்களையே அழைத்து ஸ்வாமிகள் பேசலாம். ஸ்வாமிகள் சொல்கிற சாதி ஒழிப்பு,தீண்டாமை ஒழிப்பு போன்ற காரியங்களில் அவர்கள் கண்டிப்பாக ஒத்துழைப்புத் தருவார்கள்."


ஞாநியின் இந்த யோசனைக்கு ஸ்வாமிகளிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.

சி.கு.: "சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவைகளில் கூட ஸ்வாமிகள் கருத்துக்கும் சீனியர் ஸ்வாமிகள் பெரியவாள் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பெரியவாள் "சாதிகள் ஒழியவேண்டியதில்லை". வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில், வகுக்கப்பட்ட சாதிகள் அப்படியே நீடிப்பதுதான் நல்லது என்றுதிட்டவட்டமாக கூறுகிறார்கள். ஆனால், தாங்களோ சமீப காலமாக சாதி ஒழிப்புப் பணிகள் பற்றியும் பேசி வருகிறீர்கள்"

உரையாடல் நீண்டுகொண்டே போனது. ஒண்ணே கால் மணிநேரம் போனதே தெரியவில்லை.

வெளியே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. நிறைய பேர் கதவருகே நின்று உரையாடல்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்கு மேலும் ஸ்வாமிகளின் நேரத்தை எடுத்துக் கொள்வது அவ்வளவு சரியாகப் படவில்லை. ஆகவே,

"அய்யா! தங்களை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம்; இன்னொரு சமயம் மறுபடியும் வந்து சந்திக்கிறோம்" என்று சொல்லி எழுந்தோம்.

ஸ்வாமிகள் ஒரு ஊழியரை பெயர் சொல்லி அழைத்தார். அவரிடமிருந்து 'கல்கண்டு' வாங்கி எங்களுக்கெல்லாம் புரசை இலையில் வைத்து பிரசாதமாகவழங்கினார். பெற்றுக் கொண்டு விடைபெற்றோம்.

-----------------------நூல்:- சின்ன சங்கராச்சாரி-யார்? பக்கம்:- 8-15

0 comments: