Search This Blog

16.8.09

கர்மா தத்துவத்தையே புரட்டிப் போட்ட கர்மவீரர் காமராசர்
பொங்கலா?

பச்சைத் தமிழர் காமராசரின் 107 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டதாம்.

அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. காமராசரை நேரில் பார்த்த, அவர்தம் நடவடிக்கைகளை நேரில் அறிந்த தலைமுறையினர் வாழும் காலத்திலேயே இத்தகைய கண்ணராவிக் காட்சிகளா?

காமராசர் ஒரு மனிதர் ஆம்! கம்பீரமான மாமனிதர்! தோற்றத்தில் மட்டுமல்ல, தோற்றுப்போன மக்கள் சமுத்திரத்தை தோளில் தூக்கி நிமிர்த்திய தந்தை பெரியார் அவர்களின் தளகர்த்தர்களில் ஒருவர்.

அவர் முகாம் இன்னொன்று. ஆனாலும், அவர் யார் என்பதை இன எதிரிகள் அடையாளம் காட்டிவிட்டனர்.

அந்தக் கருப்பு மனிதர் அணிந்திருப்பது வெறும் கதர்ச்சட்டை என்று கருதிவிடாதீர்கள் _ அதற்குள்ளிருப்பது கருப்புச்சட்டை என்று கல்கி கூட்டம் கார்ட்டூன் போட்டு அடையாளம் காட்டியது என்றால், சாதாரணமா?

நாம் கல்லாதது கர்மபலன் என்று கருதிக் கருகிப்போன ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து, தலையெழுத்தா, அது என்ன? எவன் எழுதினான்? இங்கு வா நான் மாற்றி எழுதுகிறேன் என்று கர்மா தத்துவத்தையே புரட்டிப் போட்ட கர்மவீரர் தான் காமராசர்.

அவருக்குப் போய் பொங்கல் வைத்துப் படைத்து கடவுளாக்க ஆசைப்படுகிறார்களே! அவர் ஒன்றும் கடவுளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவில்லைதான். மதத்தை வரிந்துகட்டி மல்லுக்கு இழுத்தவரும் அல்லர்தான்.

ஆனாலும், எந்த ஒரு காலகட்டத்திலும் கோயிலுக்குப் போவது தேரிழுப்பது, நெற்றியிலே மதக் குறிகளை இடுவது போன்ற கசுமாலங்களோடு அவரை இணைத்துப் பார்த்திருக்க முடியாதே!

ஈரோட்டிலே காந்திக்குக் கோயில் கட்டி பாலாபிஷேகம் செய்தார்கள் என்ற ஒரு செய்தி வெளிவந்தது. இப்பொழுது காமராசருக்கு பொங்கல் வைத்துப் படைத்தனர் என்கிற செய்தி வெளிவந்துள்ளது.

மதவெறியால் மரணக் குழிக்குத் தள்ளப்பட்டவர் காந்தியார். மதவெறிக் காவிக் கும்பலால் உயிருக்குக் குறி வைக்கப்பட்டவர் காமராசர்.

இவற்றின் காரணமாக கடவுளின்மீதும், மதத்தின்மீதும் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை, வெறுப்பை மடைமாற்றம் செய்வதுதான் அவர்களைக் கடவுளாக்கிக் காட்டுவது.

ஏற்படவேண்டிய எதிர்ப்புணர்ச்சியைத் தலைகீழாகப் புரட்டி மீண்டும் ஆரியத்துக்குச் சேவை செய்யவேண்டுமா? கடவுளை மறந்து மனிதர்களுக்காகப் பாடுபட்டவர்களை தயவு செய்து கடவுளாக்கி மீண்டும் ஒருமுறை கொன்று விடாதீர்கள்!

--------------------- மயிலாடன் அவர்கள் 12-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

6 comments:

hayyram said...

சோ: கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா?

வீரமணி: மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….

சோ: மூட்டிவிடவேண்டும் என்பதற்காக அல்ல, உங்களிடமிருந்து ஒரு ‘கமிட்மெண்ட்’ வேண்டும் என்பதற்காகத்தான்.

வீரமணி: நீங்கள் எதற்காக கேட்டாலும் சரி, தத்துவம் அதுதானே?

சோ: நீங்கள் நேரடியாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்

வீரமணி: நேரடியாகச் சொல்ல நான் தயார். ஆனால் நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

சோ: இதுகூடவா எனக்குப் புரியாது?

வீரமணி: நீங்கள் கேட்கவேண்டிய அவசியமே இல்லையே…. நாங்கள் சொல்வது தெளிவாக இருக்கிறதே. அதன் அர்த்தமே அதுதானே?

சோ: நீங்கள் ஹிந்துமதத்தைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் இந்தச் சந்தேகம் வருகிறது. நான் உங்களிடம் மிகவும் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. ‘முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கடவுளை நம்பினால் பரப்பினால், வணங்கினால் அவர்களும் காட்டு மிராண்டிகளா?, முட்டாள்களா? அயோக்கியர்களா?’ என்பதுதான் என் நேரடியான கேள்வி…

வீரமணி: ‘கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும்’ என்ற அடிப்படையில் நீங்கள் கேட்டிருக்கலாம், நீங்கள் குறிப்பிட்டுக் கேட்பதன் நோக்கம் என்ன?

சோ: நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாததுதான் நான் குறிப்பிட்டுக் கேட்பதற்குக் காரணம்.

வீரமணி: நாங்கள்தான் தெளிவாகச் சொல்கிறோமே இதன்மூலம் எங்களுக்கும் அவர்களுக்கும் சண்டையை உண்டாக்கிவிட உங்களால் முடியுமா என்ன? இதில் நாங்கள் ஒன்றும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. எங்களுக்கு தயவு தாட்சண்யம் கிடையாது. யாராக இருந்தாலும் எங்கள் கருத்து இதுதான். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டுதானே அவர்களும் ‘நாத்திகர்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள், அப்படிபட்டவர்கள்’ என்று சொல்கிறார்கள்.

-பக் 87, 88, 89 இவர்களைத் தெரிந்துகொள்வோம் / சோ / பரந்தாமன் பதிப்பகம்

விடாக்கண்டன் சோ-வின் கேள்விகளுக்கு பிடிகொடுக்காத கி. வீரமணியின் பதில்கள் இவை.

‘கடவுள் இல்லை’ என்று சொல்லவேண்டும். ஆனால் கடைசிவரை முஸ்லிம், கிறிஸ்துவக் கடவுள்களைத் தாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் வீரமணி.

மத்த மதத்தை பத்தி தைரியமா பேச தைரியமில்லாத பொட்டை நாய்கள் இந்து மதத்தை மட்டும் பேசி கூவுவது கேவலம்

தமிழ் ஓவியா said...

அய்யோராம் வீரமணி அவர்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருக்கிறார்.சங்கராச்சாரியர் சொல்லித்தான் வீரமணியிடம் சோ கேள்வி கேட்டிருக்கிறார். இந்து மதத்தை எதிர்ப்பது ஏன் என்பது பற்றி கீழ் கண்ட விளக்கம் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும்.

"

காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துறவு பூண்டு 50 ஆண்டுகள் ஆனதை சினிமாவின் நூறாவது நாள் விழா மாதிரி கொண்டாடிவருகிறார்கள். "அடுத்த பிரதமர் ஜெயேந்திரர் என்று சிலர் கிண்டலடிக்கும் அளவுக்கு அவரது அரசியல் பாணி துறவறம் வளர்ந்து கொண்டிருப்பதுவருத்தத்துக்குரியது. இப்படிச் சொல்வதால் அந்த பீடத்தின் மீது நமக்குள்ள மதிப்பு இம்மியும் குறைவுபட்டு விடாது" என்று கல்கி இதழ் எழுதுகிறது.

ஒருவர்துறவியானதைக் கொண்டாட வேண்டுமா என்றால் ஜயேந்திரர் விஷயத்தில் அவசியம்தான். ஏனென்றால் 16 வருடங்களுக்கு முன்பு துறவியின் தண்டத்தைப்போட்டுவிட்டு நள்ளிரவில் மடத்தை விட்டு ஓடிப் போனவர் அவர். பிறகு திரும்பிவந்து தொடர்ந்து துறவியாக இருப்பது கொண்டாட்டத்துக்குஉரியதுதானே! கல்கி வர்ணிக்கிற 'அரசியல் பாணி துறவறம்' எப்படிப்பட்டது என்பதற்கு வரலாற்றிலிருந்து இதோ 'சாம்பிள்! 1983ல் ஜயேந்திரர்அழைத்ததன் பேரில் அவரை சந்தித்த சின்னக்குத்தூசி, உடன் சென்ற ஞாநி இருவரும் 'எதிரொலி'யில் எழுதிய கட்டுரைகள், அதற்கு 'சோ'வின் மறுப்பு,மறுப்புக்கு மறுப்பை வெளியிட மறுப்பு முதலியவை இதோ:

'தவறாமல் விடுதலை படிக்கிறேன்'

- சின்னக்குத்தூசி கட்டுரை

"ஆச்சார்ய ஸ்வாமிகள் உங்களைப் பார்க்க விரும்புகிறார்" என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன். நமக்கு அதிசயமாக இருந்தது.

கெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள் பிற்பகல் வந்தார். அவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின்அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை சந்திக்கப் புறப்பட்டோம்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில் வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள். வசந்த மண்டபத்தின் வாயிலில்நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.

கார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார். உடனடியாக நாங்கள் சுவாமிகள்தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ சமுக்காளமோவிரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.

இரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார். நாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம். ஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்துஅமர்ந்தார். ஒரு ஊழியர் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவரும் ஸ்வாமிகளும் மட்டுமேஇருந்தோம்.

"என்ன இதெல்லாம்" என்றார்.

"இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் பெரியார் எழுதிய நூல்களும் இதில் இருக்கின்றன"என்றோம்.

"இதெல்லாம் எதற்காக?" என்றார் ஸ்வாமிகள்.

"சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம். சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறானமனோபாவத்தை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை எல்லாம் படித்தால் உண்மை தெரியும்"என்றோம்.

ஸ்வாமிகள் வாய்விட்டுச் சிரித்தார்.

பின்னர்,

"நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும் 'விடுதலை' பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு,

"என்ன உங்கள் கட்சியின் வேலை? ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே..." என்றார்.

சின்னக்குத்தூசி: "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல"

ஸ்வாமிகள்: "ஏன் இல்லை? எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடிகாட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள்."

சி.கு.: "தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர் கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் தங்கள் வருகைக்கும் தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர,தனிப்பட்ட முறையில் இருக்காது."----நூல்:-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

தமிழ் ஓவியா said...

தொடர்ச்சி...

"
ஸ்வாமிகள்: "திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப்பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்."

சி.கு.: "தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால்,அதையெல்லாம் வைத்துக்கொண்டு, "எல்லாமும் வன்முறைதான்" என்று முடிவுகட்டக் கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லாஇயக்கங்களுக்கும் பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன.சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு காந்திஜியின் இயக்கமே வன்முறைஇயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட முடியுமா?"

நான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச்சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? என்னால் முடியும்! பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒருபிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம் அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக் கூறப்பட்டது.தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.

அய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரியவிஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் பெரியார் தொண்டர்களால் இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்தஉயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.

ஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி, இந்துமத ஒற்றுமை என்ற பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகுஎத்தனை கலவரங்கள் நடந்து இருக்கின்றன? எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு,புத்தநத்தம், புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்துவிட்டன.

இந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் கலவரங்கள் மத எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும்நடந்ததில்லை.."

------நூல்;-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

தமிழ் ஓவியா said...

தொடர்ச்சி..
"பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,

"பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே" என்று கேட்டார்.

நண்பர் ஞாநி சொன்னார்:

"எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள் எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றுகாட்டுகிறோம்.

'வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ஆக்குவோம்' என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்."

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானேஇருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே" என்றார்.

சி.கு.: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."

ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம்சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.

'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்."

சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவமதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.

மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.

எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்துஎன்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே;இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.

கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும்ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்துமுற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள்வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின்பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்."

---நூல்;-சன்னியாசப் பொன்விழா காணும் சங்கராச்சாரி-யார்?

தமிழ் ஓவியா said...

இன்னும் இது போல் ஆதாரக் குவியல் நிறைய இருக்கிறது.

நாங்கள் எங்கள் மேல் சுமத்தப் பட்ட இழிவு ஒழிக்கும் வேலையைச் செய்து வருகிறோம்.

எங்களை மீண்டும் இழிவு படுத்துவதாக நினைத்து அசிங்கமான ஆபாசமான் பின்னூட்டம் இட்டு வரும் பாலா, பிருகு, அய்யோராம் போறவர்களுக்கு என்னைப் பொறுத்தவரையில் நாகரிகமாக சான்றுகளுடன் பின்னூட்டம் இட்டு வருகிறேன்.

எந்த மதத்துக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. எந்த மதமும் எங்களுக்கு தேவையில்லை என்பது தான் எனது நிலை.

பெரியாருக்கு பிறந்த நாள் ஏன்?எதற்கு? என்பது பற்றி இஸ்லாமிய நண்பர்களுடன் விவாதித்துள்ளேன். கிறித்து இஸ்லாம் மதங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரை தமிழ் ஓவியா வலைப் பூவில் இடம் பெற்றுள்ளது.தேடிப் படித்து உண்மையை அறிந்து கொள்ளவும்.

மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் பின்னூட்டம் இட்டு உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

ஆரோக்கியமான, நாகரிகமான, சான்றுகளுடன் கூடிய விவாதத்தை முன்னெடுப்போம். சமத்துவ சமுதாயம் படைப்போம்.

நன்றி

நம்பி said...

Blogger hayyram said..

// மத்த மதத்தை பத்தி தைரியமா பேச தைரியமில்லாத பொட்டை நாய்கள் இந்து மதத்தை மட்டும் பேசி கூவுவது கேவலம்
August 17, 2009 6:34 AM //

நீ இந்து மதத்தின் அட்டூழியங்களை ஒத்துக்கொள்ளாத, ஊத்தை ஆம்பளை நாயாக இருக்கும் பொழுது மத்த மதத்தை பத்தி கவலைப்படுவானேன். தைரியமிருந்தால்....சொல்லேன்...

"இந்து மதத்தில் அட்டூழியம் செய்பவன் நான்(பார்ப்பனன்) தான்". அதை உருவாக்கிய அயோக்கியன் (பார்ப்பனன்) நான் தான் என்று கூறேன்! அதற்கப்புறம் கேள்! பதில் வரும்.

//சோ: நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாததுதான் நான் குறிப்பிட்டுக் கேட்பதற்குக் காரணம்.//

ஹி ஹி...சோ...நாங்க குறிப்பிட்டு சொல்லாமல் எல்லா மதத்திற்கும் பொருந்துவனவாக சொன்னதை, வேண்டுமென்றே நோண்டி நோண்டி குறிப்பிட்டு கேட்பது எதற்காக? சண்டை மூட்டறதிற்குத்தானே!...உனக்கு என்ன? "புடலங்கா கமிட்மெண்ட்"

இந்த புடலங்கா கமிட்மெண்ட்டைத் தவிர உனக்கு என்ன பெரிய பொது நலம் இருக்கப்போகிறது.