Search This Blog

14.8.09

பெரியார் பார்வையில் "சுதந்திர தினம்"

சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான்,பறையன்,சூத்திரன் மற்ற எந்தச் ஜாதியுமே இருக்கக் கூடாது.மனிதன் தானிருக்க வேண்டும்.எப்படிக் கடவுளும் மதமும் கோயிலும் நம்மை மடையர்களாக்கி,இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றுதான் சுயராஜ்ஜியம்,சுதந்திரம்,ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.

--------------தந்தைபெரியார்- “விடுதலை” 22-5-1971


இந்த நாட்டு மனிதச் சமுதாயம் பார்ப்பனர்-சூத்திரர், மேல் ஜாதி-கீழ்ஜாதி என்ற படியான நிலை சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும் இருக்கிறது என்றால் இந்தத் தேசம் – நாடு சுதந்திரம் பெற்ற தேசம்- நாடு ஆகுமா? இதற்கு மேலும் நமது சுதந்திரத்தை – சுதந்திர நாள் விழாவைப் பற்றி விளக்குவது என்றால் நம் மனம் மிகுந்த பரிதாப்படுகிறது, இரக்கப்படுகிறது.
-------------------- தந்தைபெரியார்- “உண்மை” 14-8-1972


இன்று இந்தியாவில் எங்காவது உண்மையான சுதந்திரமும் ஜனநாயகமும் இருக்கின்றன என்று யாராவது அறிவு பூர்வமாக,ஆதரபூர்வமாக சொல்ல முடியுமா? இன்றைய சுதந்திரத்தில் 100 க்குத் 90 மக்கள் அடிமை வாழ்வில்தான் வாழ்கின்றார்கள்…
எஜமான் - சம்பளக்காரன், முதலாளி-தொழிளாளி, பண்ணையார்-கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட்டில் சுதந்திரம்,சமத்துவம் என்று பேசுவதெல்லம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா?


--------------தந்தைபெரியார்- “விடுதலை” 15-8-1972

சுதந்திர நாடு என்றால் அந்த நாட்டில் வாழும் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும் அல்லவா? சூத்திரனாக இருப்பதுதான் சுதந்திரமா? அதற்கு முடிவு கட்டுவதில் தான் என் வாழ்நாளின் எஞ்சிய பகுதியைக் கழிக்கப் போகிறேன்.


--------------தந்தைபெரியார்- “விடுதலை” 6-11-1973

8 comments:

பரிமள ராசன் said...

THOLAR OVIYA,periyar kolkaiyai nan mattumthan parapuvaen endru sonna veeramani,viduthalaiyai 4 natkalaaga inaiya thalaththil update seiyyavillai.ithuthan periyar kolkaiyai parappum latchanama?karunanithiudan vilakkalil(kannadan silai thirappu ulpada)kummaalam poduvathuthan periyar kattiya pathaiya?iyyavin karuththukkalai parppan ilivu seigiran.veeramani irutadippu seigirar.

hayyram said...

5-12-1958 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

‘‘கிறிஸ்தவர், முகமதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்?’’

இந்த ஆதாரங்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை போலியானவை என்பதைத்தானே காட்டுகிறது! கடவுளே இல்லை என்று சொல்கின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் அன்பான தெய்வமே கிறிஸ்து என்று சொல்லுகிறார் என்றால் அது போலி கடவுள் மறுப்புக் கொள்கையைத் தானே காட்டுகிறது! ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை இந்து மதத்திற்கு மட்டும்தான். அதுவும் போலி கடவுள் மறுப்புக் கொள்கைத்தான்.

இதிலே மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். கடவுள் இல்லை என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக பல இடங்களில் பேசியிருக்கிறார்; எழுதியும் இருக்கிறார்.

‘‘நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல; கடவுளை நம்பவேண்டாம் என்று சொல்லவும் இல்லை… அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுள் நான் வேண்டாமென்று சொல்லவில்லை’’
(விடுதலை 10-09-1956)

‘‘கடவுளைக் கும்பிடவேண்டாம் என்று கூறவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளை கும்பிடுங்கள், வேண்டாம் என்று கூறவில்லை.’’
(விடுதலை 04-06-1959)

கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம் மாதிரி கும்பீடு’’
(விடுதலை 04-05-1959)

இது போன்ற முரண்பட்ட கருத்துக்களை பல தடவை ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியிருக்கிறார். கடவுள் இல்லவே இல்லை; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், ஒரே கடவுளை கும்விடு; கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை என்று பல்டி அடித்து முரண்பட்டவாதமல்லவா?-இப்படி நாம் கூறும் போது இதற்கு பதிலாக பகுத்தறிவுவாதிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஒரே ஒரு கடவுளை கும்பிடு என்று சொன்னது ‘‘கடவுள் வேண்டும் என்று சொல்லுகின்ற, கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான்’’ என்று பகுத்தறிவுவாதிகள் கூறுகின்றனர்.

hayyram said...

ஆனால் இந்த பதில்கூட பலமில்லாததுதான். ஏனென்றால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாத்திகர்களாக்குவதுதானே ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வேலை. அதைத்தானே அவர் செய்து வந்தது. அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கருத்துப்படி சாதியை ஒழிக்க வேண்டுமானால் பிராமணர்களை ஒழிக்கவேண்டும். பிராமணர்களை ஒழிக்க வேண்டுமானால் மதத்தை ஒழிக்க வேண்டும். மதத்தை ஒழிக்கவேண்டுமானால் கடவுளை ஒழிக்க வேண்டும். இப்படி கடவுளை ஒழித்தால்தான் எல்லாவற்றையும் ஒழிக்க முடியும் என்று சொல்கின்றபோது சிலருக்கு மட்டும் கடவுளை கும்பிடு என்று சொன்னால் அது தான் பகுத்தறிவா? அதுதான் கடவுள் மறுப்புக் கொள்கையா? இது முரண்பட்டவாதம்தானே!

கடவுள் வேண்டும் என்று சொல்கின்ற-கடவுளை விடமுடியாதவர்களுக்குத்தான் என்பது சரி என்றால் சாதி வேண்டும் என்று சொல்லுகின்ற-சாதியை விடமுடியாதவர்களுக்கு சாதியை கடைபிடியுங்கள் என்று கூறுவீர்களா? சாதியைவிட்டுவிட வேண்டும் என்று சொல்கின்றபோது சாதியை விடமுடியாதவர்களுக்கு மட்டும் சாதியை கடைபிடியுங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு மூடத்தனமோ அதேபோலத்தான் கடவுள் இல்லை என்று சொல்கின்றபோது கடவுளை விடமுடியாதவர்களுக்கு மட்டும் கடவுளை கும்பிடுங்கள் என்று சொன்னால் அதுவும் பகுத்தறிவற்ற மூடத்தனம் ஆகும். ஆனால் இப்படி பகுத்தறிவற்ற முறையில் பேசிய ஈ.வே. ராமசாமி நாயக்கரைத் தானே பகுத்தறிவு பகலவன் என்று சொல்லுகின்றார்கள் பகுத்தறிவுவாதிகள்!

hayyram said...

பெரியாரின் பல புத்தகங்களை படித்திருக்கிறேன் அப்போதும் சரி, இப்போதைய தி.க நடவடிக்கைகளையும் பார்க்கும் எனக்கு இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு மற்ற மதங்களில் உள்ள தவறுகளை இவர்கள் ஏன் சுட்டிக்காட்டுவதில்லை!!!!! சுட்டிக்காட்டியிருந்தால் என்னவாயிருக்கும்… ஏன் இவர்களுக்கு தைரியம் இல்லாமல் போனது… நூறு சதவீதம் தூய்மையான மதம் என்று எதுவும் கிடையாது.

உலகத்திலேயே யூதர்கள்தான் புத்திசாலிகள் என்று கூறுவார்கள் அது தவறு. உலகிலேயே மிக புத்திசாலிகள் தமிழ்நாட்டில் உள்ள பகுதறிவாளர்கள்தான். யாரைத்திட்டினால், யாரை விமர்சனம் செய்தால் திருப்பித்திட்ட மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும் எனவே அவர்களை மட்டும்தான் திட்டுவார்கள்.

hayyram said...

பாரதபுத்ரன்
11 July 2009 at 7:45 pm

பெரியார் என்ற பெயரில் அவர் செய்த கூத்துக்கள் அனைத்தும் எல்லோருக்கும் தெரியும்..இதுவரை செவி வழிச் செய்திகளாகவே தெரிந்த அனைத்தையும் இன்று ஆதாரங்களுடன் அடுக்குகிறார் வெங்கடேசன் அவர்கள். அருமை.. இனியாவது அடுத்த தலைமுறை ராமசாமி நாயக்கரை பெரியார் என்றழைக்காதிருக்கட்டும்

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பற்றி வெங்கடேசன் எழுதிய நூலுக்கு ஆதாரபூர்வ மறுப்புக் கட்டுரை விரைவில் வெளிவரும்.

தமிழ் ஓவியா said...

விடுதலை இணையதள சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சரி செய்து கொண்டிருக்கிறார்கள். சர்வர் சரியானவுடன் விடுதலை வழக்கம் போல் வெளிவரும் Parimala .

அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளிக் கொட்ட வேண்டாம் Parimala

bala said...
This comment has been removed by a blog administrator.