Search This Blog

11.8.09

இரு சிந்தனையாளர்களின் சிலை திறப்பும்-சிந்தனையும்!




கருநாடக மாநிலத் தலைநகரமான பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு இருப்பது கருநாடகத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் இன்ப அலைகளை எழுப்பியிருக்கிறது.

18 ஆண்டுகால சோக இருளுக்கு விடிவு ஏற்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் அணுகுமுறைக்குக் கிடைத்திட்ட சிறப்பான வெற்றி இது என்றே சொல்லவேண்டும்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசும்போது ஒன்றை அழுத்தமாகவே சொன்னார்.

தமிழ்நாட்டின் தலைநகரில் கவிஞர் சர்வக்ஞரின் சிலையைத் திறக்கக் கூடாது என்று எந்தத் தமிழரும் கூறவில்லை என்று குறிப்பிட்டார் தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டின் நிலையை இதன்மூலம் கருநாடக மக்களுக்கு விளங்கும்படிக் கூறியுள்ளார்.

இப்பொழுதுகூட கருநாடகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிராக சில கூச்சல்கள் கிளம்பின; நீதிமன்றம்வரை எட்டிப் பார்த்தனர் ஆனாலும் நல்ல வாய்ப்பாக அவர்கள் வெற்றி பெறவில்லை.

18 ஆண்டுகளுக்குமுன் திருவள்ளுவர் சிலை திறக்க அழைப்புகள் அச்சிடப்பட்டு வெளியான நிலையில் கடைசி நேரத்தில் இடைக்காலத் தடை உத்தரவை நீதிமன்றத்தின் வாயிலாகப் பெற்று, விழா நடைபெறாமல் செய்துவிட்டனர்.

இந்த முறையும் அந்த முயற்சியை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை.

ஆகஸ்ட் 9 இல் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா என்றால் ஆகஸ்ட் 13 இல் சென்னை அயனாவரத்தில் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மிகச் சரியாகச் சொன்னதுபோல இரு மாநில மக்களின் நல்லுறவு வளர்ச்சிக்கு இவ்விரு நிகழ்ச்சிகளும் பயன்பட்டால் தான் அவ்விரு சமத்துவச் சிந்தனையாளர்களின் எண்ணங்கள் நிறைவேறுகின்றன என்று பொருள்.

சிலைகள் வழிபடுவதற்காக அல்ல; அந்தச் சிலைக்கு உரியவர்களின் சீலங்கள் போற்றப்படவேண்டும். பின்பற்றப்படவேண்டும் அதுதான் அவர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதையும்கூட!

இவ்வளவுக்கும் இன அடிப்படையில் பார்த்தாலும் கருநாடகத்தில் வாழும் கன்னடம் பேசுவோரும், தமிழ்நாட்டில் வாழும் தமிழ் பேசுவோரும் இனத்தால் திராவிடர்களே! ஆனால், சமஸ்கிருத மொழியின் ஊடுருவலால் ஏற்பட்ட கலாச்சார மாற்றத்தால் ஒரே திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களான தமிழர்களும், கன்னடர்களும் இரு மாறுபட்ட இனம்போல மோதிக்கொள்ளும் ஒரு நிலை தோற்றுவிக்கப்பட்டு விட்டது.

ஆரியம் ஒரு வழி இரு வழியல்ல; அனைத்து வழிகளிலும் திராவிட இனத்தைக் கூறுபோட்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் முரண்பாட்டின் பக்கம் தள்ளிவிட்டது.

கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் முழுக்க முழுக்க சமஸ்கிருத வரி வடிவத்தையும், இலக்கணத்தையும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக உருச் சிதைந்து போய்விட்டன. எங்கோ மொழியில் ஏற்பட்ட கலப்பு ஒரே இனத்தை பல கூறுகளாகச் சிதறச் செய்ததோடு அல்லாமல், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை அளிப்பதிலும், குடிநீர்ப் பிரச்சினையிலும்கூட (ஒகனேக்கல்) மனிதாபிமானமற்ற முறையில் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் ஒரு வெறுப்புணர்வை மூட்டிவிட்டதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

இங்குள்ளவர்கள் பார்த்தீர்களா, பார்த்தீர்களா? திராவிடத் தேசியம் தமிழ்த் தேசியத்தை அழித்துவிட்டது என்று இதுதான் சந்தர்ப்பம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு மோதுதலை முன்னிலைப்படுத்தாமல், அந்த மோதுதலுக்குக் காரணமான மூல பலம் எங்கிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதுதான் முக்கியமான ஒன்றாகும்.

மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியார் அவர்களின் போர் முறை என்று அறிஞர் அண்ணா சொன்னார்கள் அல்லவா அதனைத்தான் முன்னிறுத்திச் செயல்படவேண்டும்.

இரு மாநில மொழி அறிஞர்களும், கலை, பண்பாட்டு உணர்வு கொண்டோரும், சமுதாயவியல் ஆய்வாளர்களும் ஆரியத்தால் ஏற்பட்ட ஆபத்தினை எடுத்துக்காட்டி அடிப்படையான இனவுணர்வினை வளர்த்து, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகப் பகிர்ந்துண்டு வாழவேண்டும்.

திருவள்ளுவரும் ஆரியத்தின் பிறப்பின் அடிப்படையிலான வருணாசிரமத்தை ஜாதியைச் சாடினார் சர்வக்ஞரும் அவ்வாறே நெற்றியடியாகக் கவிதை புனைந்துள்ளார்.

திருவள்ளுவர், சர்வக்ஞர் ஆகிய இருவரின் சிலை திறப்பு தமிழர் _ கன்னடர் ஆகிய திராவிட இனத்தவரின் ஒற்றுமை உணர்வை வளர்க்கட்டும்!

----------------"விடுதலை"தலையங்கம் 11-8-2009

2 comments:

bala said...
This comment has been removed by a blog administrator.
bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

இந்த மஞ்ச துண்டு ஏன் நம்ம தாடிக்கார தீவிரவாதி ஏசிய திருவள்ளுவர் சிலையை பங்களூரில் வைத்தது?கன்னடம் நமக்கு பார்சல் செய்து அனுப்பிய தாடிக்கார தீவிரவாதியின் சிலையை அல்லவா வைத்திருக்க வேண்டும்.கன்னடம் நமக்கு அனுப்பி வைத்த தாடிக்கார கழிசடையால் தமிழக அரசியல் மிகவும் கீழ்த்தரமான லெவலுக்கு போனது.ஆகவே நாம் கன்னடர்களுக்கே தாடிக்கார தீவிரவாதியின் சிலையை பரிசாக அளித்து வஞ்சம் தீர்த்துக் கொண்டிருக்கலாமே.அந்த கழிசடையின் சிலை அங்கு இருப்பது தானே முறை.

பாலா