Search This Blog

14.8.09

நான்கு வருணத்தைப் படைத்தது கிருஷ்ணனா? பிரம்மாவா?


எது உண்மை?நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் அவற்றை, படைத்தவனாகிய நானே நினைத்தால் கூட மாற்றியமைக்க முடியாது என்று கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணன் கூறுவதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக மனு தர்மசாஸ்திரம் ஸ்லோகம் 87இல் பிர்மா தன் முகத்திலிருந்து பிராமணர்களையும் (பார்ப்பனர்கள்) தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையிலிருந்து வைசியர்களையும் பாதத்திலிருந்து சூத்திரர்களையும் படைத்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆக 4 வருணத்தையும் தானே படைத்தாக கிருஷ்ணன் கூறுவது உண்மையா? அல்லது பிரம்மா படைத்தாகச் சொல்வது உண்மையா?


கிருஷ்ணரின் காலம் புத்தர் காலத்திற்கு பிறகு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் அவ்வாறாயின் கிருஷ்ணன் நான்கு வர்ணத்தை எந்த வருடத்தில் உண்டு பண்ணினார். ஏற்கனவே இருந்த மக்களிடம் வர்ணபேதத்தை உண்டு பண்ணினாரா? இது உண்மையாயின் பிரம்மா தன் உடம்பின் பல்வேறு பாககங்களிலிருந்து நான்கு வர்ணத்தினைஉண்டு பண்ணினார் என்று கூறும் கூற்று அப்பட்டமான பொய் அல்லவா?

பிர்மா தன் முகத்திலிருந்து பிராமணர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், பாதத்திலிருந்து சூத்திரர்களையும் படைத்தார் என்று சொல்பவர்கள் எந்த ஆண்டு, எந்த மாதம் அவ்வாறு பிரம்மா படைத்தார். ஒவ்வொரு வருணத்திலும் எத்தனை எத்தனை பேரை படைத்தார். அதாவது என்ன விகிதத்தில் படைத்தார். அதில் ஆண் எவ்வளவு? பெண் எவ்வளவு? குழந்தைகளாக படைத்தாரா? பெரியவர்களாகவே படைத்தாரா? போன்ற விவரங்கள் சொல்ல வேண்டாமா? அவ்வாறு பிரம்மா படைப்பதற்கு முன் பூமியில் மனித இனம் இருந்ததா? இல்லையா? பிரம்மா நான்கு வர்ண மக்களை படைத்தார் என்றால் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா போன்ற இதர நாட்டு மக்களை யார் படைத்தது? அங்கெல்லாம் நான்கு வர்ண பேதம் இல்லாதது ஏன்? கங்கைக் கரையை தவிர வேறு நாடுகள் உலகத்தில் உள்ள விவரம் பிரம்மாவிற்கும், கிருஷ்ணனுக்கும் தெரியாததாலா?


ஆக பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத திராவிட மக்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்பொழுது புதிது புதிதாக கதை கட்டி அதை மக்களை நம்பச் செய்வதற்காக அவ்வப்பொழுது ஆட்சியிலிருப்பவர்களின் தயவைப் பெற்று பரப்பி வந்தததுடன் மாற்று கருத்துக் கொண்டவர்களை அதிகார வர்க்கத்தினை கொண்டு மிரட்டியும், சாதுக்கள் போர்வையில் கொலைகள் செய்தும் வந்துள்ளனர், வருகின்றனர்.

எனவே நான்கு வர்ணங்களை பிரம்மா/கிருஷ்ணன் படைத்ததாக கூறும் கூற்று அப்பட்டமான பொய் என்பது புரிகிறதா?

------------- ஆர்.டி. மூர்த்தி, திருச்சி - 17 - "உண்மை" ஜனவரி 1_15 2008

6 comments:

hayyram said...

வீரமணி கூறுகிறார்:-

பெரியார் அவர்கள் துவேஷம் பாராட்டியதில்லை என்று இன்று சொல்லுகிறார்கள் ஒன்றை தெளிவாகக் கேட்கிறோம். ‘‘பார்ப்பனனே வெளியேறு’’ என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்கள்.
(நூல்:- சங்கராச்சாரி யார்?)

‘‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பைவிட்டுவிடு பார்ப்பானை அடி என்றார் பெரியார்’’
(நூல்:- இந்துத்துவாவின் படையெடுப்பு)

‘‘சாதிப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கு, அரசியல் சட்டம், காந்தியார், நேரு படத்தை கொளுத்தவேண்டும். இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்கமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடைபெறவேண்டும்’’.
(நூல்:- தமிழர் தலைவர்)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த மனிதநேயதில்லாத, வெறித்தனமான பேச்சால்தான் தூத்துக்குடி, புதுக்கிராமத்தில் உள்ள அக்கிரகாரத்தில் புகுந்து பூணுல்கள் அறுக்கப்பட்டு பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள்.

‘‘திருச்சி காவிரி, தில்லை ஸ்தான படிக்கட்டு அருகில் தாக்கப்பட்டு பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டது’’

“சில வருடங்களுக்கு முன் சென்னையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு பூணூல்கள் அறுக்கப்பட்டது’’

அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நா யக்கர்தான் மனிதநேயவாதியா? ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய்யான மனிதநேயம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே. ராமசாமி நாயக்கர் யாரை தங்களுடைய எதிரியாக நினைத்தாரோ- யாரை ஓழித்தால் சாதி ஓழியும் என்று சொன்னாரோ-அந்தப் பார்ப்பனரை தேர்தலிலே ஆதரிக்கவும் செய்திருக்கிறார். இது அவருடைய முரண்பாடுகளை அல்லது தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள செய்த தந்திரத்தைத்தான் காட்டுகிறதே ஒழிய மனிதநேயத்தைக் காட்டாது.
1957-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘காஞ்சிபுரத்தில் (அண்ணா போட்டியிட்ட இடம்) டாக்டர் சீனிவாச அய்யரையும், சென்னையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரி, கிருஷ்ணாராவையும் ஆதரிக்கிறேன். பிராமணர்கள் இந்த நேரத்தில் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். காமராஜ் வெற்றி பெற்றால் பிராமணர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். ‘‘
(நூல் : தேர்தல் அரசியல்-தி. சிகாமணி)

ஆனால் அதே ஈ.வே. ராமசாமி நாயக்கர் 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூறுகிறார்:- “தேர்தல் தினத்தன்று பிராமணர்கள் வாக்களிக்க வரக்கூடாது’’
(நூல் : தேர்தல் அரசியல்)

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! ஒரு முறை காமராசருக்கு ஓட்டுப்போடுமாறு வேண்டினார். பின்பு வாக்களிக்க வரக்கூடாது என்று மிரட்டுகிறார். 1957 ஆம் ஆண்டு பிராமணர்கள் உதவி வேண்டும். 1962 -வேண்டாம். இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய தந்திரம்.

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏ. பாலசுப்பிரமணியம், பி. ராமமூர்த்தி போன்ற பிராமணர்களையும் தேர்தலிலே ஆதரித்தார்.

பார்ப்பனர்களை ஒழித்தால்தான் சாதி ஒழியும் என்று சொன்னாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் - பின் ஏன் பார்ப்பனர்களை தேர்தலிலே ஆதரிக்க வேண்டும்? இது ஒரு சந்தர்ப்பவாதமல்லவா?

hayyram said...

தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசூரனுக்கு (திராவிட தலைவனுக்கு) வாழ்த்துக்கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காகத் துக்கப்பட வேண்டியதை விளக்கித்துக்க நாளாகக் கொள்ளவேண்டும்.
(விடுதலை 17-10-1965)

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த பேச்சை படிக்கின்ற போது நமதுக்கே சிரிப்புதான் வருகின்றது. ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கிருஷ்ணர் கதை ஒரு கட்டுக்கதை, புராணங்கள் கட்டுக்கதை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வந்தார். அவர் வாதப்படி கிருஷ்ணன் கதை கட்டுக்கதை என்றால் நரகாசூரனும் கட்டுக்கதைதான். நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும்பட்சத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் கட்டுக்கதையாகதான் இருக்கும்.

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார்?

hayyram said...

பெரியார் என்று சில மூடர்களால் போற்றப்படும் ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதரின் வெற்றுக் கூச்சல்களையும், போலித் தத்துவங்களையும், சந்தர்ப்பவாத அரசியலையும் மிக அழகாக விளக்கி வருகிறீர்கள். அதற்கு எம் நன்றி!

இந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்பவர் அதிகார வெறி, பணத்தாசை பிடித்தவர். பிராமணர்கள் அதிகாரப் பதவியில் இருப்பதால் அது கண்டு பொறாமல், முதலியார், நாயுடு, நாயக்கர், ரெட்டியார் என பிற ஜாதியினரைத் தூண்டி பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்கியவர். அவருக்கு தன் சொல் கேட்பவன், தனக்கு ஜால்ரா தட்டுபவன் தான் தமிழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காக அவர் மேற்கொண்ட மலிவான தந்திரங்களும், பேச்சுக்களுமே பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத த்வேஷம் போன்றவை.

ஜாதிவெறி பிடித்த அம் மனிதருக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் மீது எள்ளளவும் அக்கறையில்லை. அவர்கள் வாழ்வை உயர்த்த எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. பார்ப்பானை அதிகார பதவியில் இருந்து துரத்தி விட்டு அதில், தான் அல்லது தன்னைச் சேர்ந்தவர்கள் அமர வேண்டும் என்பது தான் அவரது லட்சியம். அதற்காகத் தான், மற்ற ஜாதியினரை பிரிவுபடுத்தத் தான் அவர் பார்ப்பன எதிர்ப்பையும், ராமன், கிருஷ்ணன், விநாயகர் போன்ற கடவுள்களையும் இழிவுபடுத்த ஆரம்பித்தார்.

அவருக்கு தைரியமிருந்திருந்தால் ஒரு கருப்பசாமிக்கோ, அய்யனாருக்கோ, முனீஸ்வரனுக்கோ, சுடலைமாடனுக்கோ, அங்காள பரமேஸ்வரிக்கோ செருப்பு மாலை போட்டிருக்கலாமே, சிலைகளை உடைத்திருக்கலாமே? செய்தாரா? ஏன் இன்றைக்கும் கூட அவர்கள் இயக்கித்தனர் அதைச் செய்யலாமே, செய்வார்களா? செய்யமாட்டார்கள். ஏனென்றால் தமிழகத்து கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவார்கள். சிவனையோ, ராமனையோ, கிருஷ்ணனையோ, விநாயகரையோ இழிவுபடுத்தினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற தைரியம்தாம் இதற்கெல்லாம் காரணம். எனது ஆசான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மட்டும் இன்னும் சிறிதுகாலம் வாழ்ந்திருந்தால் இந்த ஆசாமிகளது கொட்டமெல்லாம் அடங்கியிருக்கும். என் செய்வது, தமிழகத்தின் தவக்குறைவு அன்னார் சீக்கிரத்திலேயே காலமாகி விட்டார்கள்.

hayyram said...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்.

(இராமாயணக் குறிப்புகள் -பக். -3)

அதே புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.
(இராமாயணக் குறிப்புகள் - பக். -5)

தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்பன இராமாயணத்தில் வரையறுக்கப்படவில்லை.
(இராமாயணக் குறிப்புகள். பக்.. 5)

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லாதபோது திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படி சொல்ல முடியும்?

தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்று வரையறுக்ககப்படாதபோது நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர் என்று சொல்வது பொய் அல்லவா?

passerby said...

இக்கட்டுரை, இந்துக்கட்வுள் ஜாதிகளைப் படைத்தாரா? என்பதுவே. அதைப்பற்றி ஹைய்யாராம் என்ன் சொல்கிறார்?

bala said...
This comment has been removed by a blog administrator.