Search This Blog
10.8.09
பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுமா?முதலமைச்சர் கலைஞர் பதில்
பெரியார் நூல்கள் நாட்டுடைமை
ராஜாஜியின் நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை
நீங்கள் வீரமணிக்குச் சொன்னது ராஜாஜிக்கும் பொருந்துமா?
செய்தியாளர் வினாவுக்கு முதலமைச்சர் பதில்
தந்தை பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதுபற்றி செய்தியாளரின் கேள்விக்கு, ராஜாஜியின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படவில்லை. நீங்கள் வீரமணிக்குச் சொன்னது ராஜாஜிக்கும் பொருந்துமா? என்று திருப்பிக் கேட்டார் முதலமைச்சர் கலைஞர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:-
செய்தியாளர்:- பெங்களூருவில் நீங்கள் திருவள்ளுவருடைய சிலையைத் திறந்து வைத்ததின் முக்கியத்துவம் என்ன? இதன் காரணமாக இரு மாநிலங்களுடைய உறவு சீர்படுமா? ஒகனேக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதுபற்றி அவர்கள் ஏதாவது உறுதி கொடுத்திருக்கிறார்களா?
கலைஞர்:- ஒகேனக்கல் பற்றியோ வேறு பிரச்சினைகளையோ பேரமாக வைத்து இந்தச் சிலைகள் அங்கும் இங்கும் திறக்கப்படவில்லை. மாநிலங்களுக்கிடையே உருவாக வேண்டிய அல்லது உருவாகி இருந்தால் நிலைக்க வேண்டிய ஒற்றுமை, நட்புணர்வு என்ற இந்த அடிப்படையிலே தான் திருவள்ளுவர் சிலை 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பெங்க ளூருவில் திறக்கப்பட்டிருப்பதும், 13ஆம் தேதியன்று சென்னை, அயனாவரத்தில் சர்வக்ஞருடைய சிலை திறக்கப்படவிருப்பதும் ஆகும்.
செய்தியாளர்:- இதன் காரணமாக இரு மாநிலங்களின் உறவு சீர்படும் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
கலைஞர்:- நம்பிக்கையை நோக்கித் தான் யார் ஒருவரும் முன்னேற வேண்டும்.
செய்தியாளர்:- இலங்கையில் தமிழர்களுக்கு மறு வாழ்வுப் பணி எப்படி நடக்கிறது? உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
கலைஞர்:- அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே இன்னும் வேகம் தேவை என்பது எங்களுடைய கருத்து.
செய்தியாளர்:- பல அறிஞர்களுடைய நூல்களை நீங்கள் தொடர்ந்து நாட்டுடைமையாக ஆக்கிக் கொண்டு வருகிறீர்கள். ஆனால் பெரியாரை மட்டும் நீங்கள் வீரமணிக்கு நண்பர் என்பதால் விட்டு வைத்திருக்கிறீர்களா?
கலைஞர்:- ஒரு நூலை நாட்டுடைமையாக்குவது என்பது குறிப்பாக உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமே யானால் மூதறிஞர் ராஜாஜி, கல்கி, வாரியார் போன்றவர்கள் எழுதிய நூல்களையெல்லாம் நாங்கள் நாட்டுடைமையாக்க முயன்றபோது, அதை நாட்டுடைமை ஆக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையாளர்கள் மறுத்து விட்டார்கள். மூதறிஞர் ராஜாஜியின் நூல்கள் நாட்-டுடைமையாக்கப்படவில்லை. கல்கி ராஜேந்திரன் பிறகு ஒப்புக் கொண்டார். நீங்கள் வீரமணிக்குச் சொன்னது எல்லாம் ராஜாஜிக்குப் பொருந்துமா?
செய்தியாளர்:- இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
கலைஞர்:- வீரமணியின் கருத்து; பெரியாரின் கருத்துக்களை யாரும் சிதைத்துவிடக் கூடாது என்பதாகும். ஆகவே பெரியாரின் பெயரால் அமைந்துள்ள சுயமரியாதை ஸ்தாபனம் இருக்கின்றது. அதன் மூலமாக வெளியிட்டால்தான், பெரியாரின் கருத்துக்கள் அதிலே இடம் பெற முடியும். ஆகவே அதை பலரும் வெளியிட்டு, அதை நீர்த்துப் போகச் செய்து விடக் கூடாது என்பது வீரமணியின் கருத்து. அரசைப் பொறுத்தவரையில் மரபுரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த நூல்களையும் நாட்டுடைமை ஆக்குவதில்லை என்பது தான்.
------------------நன்றி:-"விடுதலை" 10-8-2009
Labels:
நேர்காணல்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கொள்ளைக்குப் பெயர் மரபுரிமையாம்! ஹி..ஹி.. கலைஞர் சொல்றாராம். கேட்கிறவன் கேணையா இருந்தா என்ன வேணாலும் சொல்லலாம். நீங்க என்ன வேணாலும் எழுதலாம். ராஜாஜி நூல்கள் நாட்டுடமை ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன? பெரியார் அப்படியா? தழிமினத்துக்கு அவர்மட்டும்தான்யா தந்தையாக இருக்கிறார். விதிவிலக்கா வீரமணி கும்பலுக்கு மட்டும் அடிமை.
இதே மரபுரிமையை பார்ப்பான் சொன்னால்? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகமுடியுமா? ஆண்டைகளை மீறி தாழ்த்தப்பட்டவர்கள் மீடேற முடியுமா? எல்லா மரபுகளையும் உடைத்துப்போட்ட பெரியாரையும் மரபுக்குள் திணிக்கிறானே ஆட்டுக்கண்ணன்?
Post a Comment