Search This Blog

21.8.09

பதில் சொல்ல முடியாத பெரியாரின் கேள்விகள்?








பகுத்தறிவுவாதி:

மதங்கள் யாரால்உருவாக்கப்பட்டவை?

ஆஸ்திகன்:


மதங்கள் கடவுளால் உண்டாக்கப்பட்டவை?

பகுத்தறிவுவாதி:

அல்ல, அவை மனிதர்களால் உண்டாகியவை.

ஆஸ்திகன்:

என் அப்படிச் சொல்லுகிறாய்?

பகுத்தறிவுவாதி:


சொல்லுகிறேன் கேள். மதங்கள் எத்தனை உண்டு?

ஆஸ்திகன்:


பல மதங்கள் உண்டு.

பகுத்தறிவுவாதி:


உதாரணமாகச் சில சொல்லும்.


ஆஸ்திகன்:


எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த மதம், கிறிஸ்து மதம், முகம்மதிய மதம், சீக்கிய மதம், பார்சி மதம், சவுராஷ்டிர மதம் முதலியவைகளும் இவற்றுள் பல உட்பிரிவுகளும் உண்டு.

பகுத்தறிவுவாதி:


கடவுள்கள் எத்தனை உண்டு?

ஆஸ்திகன்: ஒரே கடவுள்தான் உண்டு.

பகுத்தறிவுவாதி:


இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை?

ஆஸ்திகன்:

மனித வர்க்கத்துக்காகத்தான்.

பகுத்தறிவுவாதி:

மதத்தால் ஏற்படும் பயன் என்ன?

ஆஸ்திகன்:

மனிதன், கடவுளை அறியவும், கடவுளுக்கும் தனக்கும் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும், கடவுள் கருணைக்குப் பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.

பகுத்தறிவுவாதி:

அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன்?

ஆஸ்திகன்:


இது மிகவும் சிக்கலான பிரச்சினையாய் இருக்கிறது. பல பெரியோர்களைக் கண்டு பேசிய பிறகு பதில் சொல்லுகிறேன்.

------------------- தந்தைபெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியகட்டுரையிலிருந்து...

5 comments:

Unknown said...

Who is listening to yur so called Bigman's questions.
Aalilaatha teekadaiyila yaarukku tea athurappu.

தமிழ் ஓவியா said...

pirabha ஆளில்லாத டீகடைப் பக்கம் உங்களுக்கு என்ன வேலை?

Jawahar said...

ஒருவர் உங்க வீட்டுக்கு வர வழி கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆள் ஒரு தண்ணி வண்டி, அவருக்கு எப்படி வழி சொல்வீர்கள்? பிரியா வயின்ஸ் தாண்டி மூணாவது லெப்ட் என்பீர்கள். சினிமாக் குஞ்சு என்று வைத்துக் கொள்ளுங்கள், ராஜா டாக்கீசுக்கு எதிர்த்த தெரு என்பீர்கள். சதா கோயில் குளம் என்று போகிறவரானால் காளியம்மன் கோயில்லேர்ந்து அஞ்சாவது வீடு என்பீர்கள். சாப்பாடுப் பிரியர் என்றால் முனியாண்டி விலாசுக்குப் பின்னால் என்பீர்கள்.

யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ அப்படிச் சொல்லவே இத்தனை மதங்கள்.

http://kgjawarlal.wordpress.com

தமிழ் ஓவியா said...

தண்ணி வண்டி

சினிமாக் குஞ்சு

சதா கோயில் குளம் என்று போகிறவர்

சாப்பாடுப் பிரியர்.

நீங்கள் மதங்களை ஒப்பிட்ட முறையைப் படிக்கும் போது என்னையும் அறியாமால் சிரிப்புத்தான் வந்தது.

இறுதியில் விளக்கெண்ணைக்குத்தான் கேடே தவிர பிள்ளை பிழைக்காது.

எப்படியிருப்பினும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நம்பி said...

//Jawarlal said...

ஒருவர் உங்க வீட்டுக்கு வர வழி கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆள் ஒரு தண்ணி வண்டி, அவருக்கு எப்படி வழி சொல்வீர்கள்? பிரியா வயின்ஸ் தாண்டி மூணாவது லெப்ட் என்பீர்கள். சினிமாக் குஞ்சு என்று வைத்துக் கொள்ளுங்கள், ராஜா டாக்கீசுக்கு எதிர்த்த தெரு என்பீர்கள். சதா கோயில் குளம் என்று போகிறவரானால் காளியம்மன் கோயில்லேர்ந்து அஞ்சாவது வீடு என்பீர்கள். சாப்பாடுப் பிரியர் என்றால் முனியாண்டி விலாசுக்குப் பின்னால் என்பீர்கள்.

யாருக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ அப்படிச் சொல்லவே இத்தனை மதங்கள்.

http://kgjawarlal.wordpress.com
August 22, 2009 10:09 PM //

வெரிகுட்... உங்கள் வீட்டு வர வழி கேட்பவருக்கு வழி சொல்லுகிறீர்கள் சரி...எங்கள் வீட்டுக்கு போவதற்கு நீங்கள் ஏன் வழி சொல்லுகிறீர்கள்...? எங்கள் வீடு தான் எங்களுக்குத் தெரியுமே...? அது எங்கேயிருக்கும் என்றும் தெரியும். எப்படி போகணும் என்றும் தெரியும். அது எப்பவுமே இருக்க வேண்டிய இடத்துல அப்படியே இருக்கும்.

அவங்கவங்க வீட்டுக்கு போறதுக்கு அவங்கவங்களுக்கு வழி தெரியுமே!...அதை எல்லாம் எதற்கு நீங்கள் சொல்ல வேண்டும்? என்று போலிஸ் புடிச்சுக்கும்..அப்புறம் ஸ்டேஷன்ல லாடம் தான்....

எவ்வளவு காலமா? அடுத்தவங்க வீட்டை நோட்டம் விட்டுகிட்டு இருக்கே என்று? எப்ப தேட்டை (திருடறதுக்கு) போடுறதுக்கு நோட்டம் விடற...இது ரொம்ப தப்பு...

இப்ப மதம் என்ன பண்ணுது என்று தெரியுதா? தான் வேலையை விட்டுட்டு வீணான வீம்பு வேலையை எல்லாம் பார்க்குது. திருட்டு வேலையை பார்க்குது. வம்பு சண்டையை வளக்குது...நாட்டுல கலவரத்த வளர்க்குது...என்ன நான்ஞ் சொல்றது.