Search This Blog

5.8.09

தந்தை பெரியார் நெறிகள் பத்து









1. ஜாதி மறுப்புத்திருமணம், விதவை மறுமணம், மணவிலக்குப் பெற்றோர் மறுவாழ்வுத் திருமணம் செய்துகொள்வேன். வர(ன்) தட்சணை வாங்குவது சுயமரியாதை இழக்கும் கொத்தடிமை முயற்சி _ என்னை நான் ஒருபோதும் விற்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.

2. கடவுள், மதம், ஜாதி, சினிமா, மது, மருந்து என்ற பலவகைப் போதைகளும், மூடநம்பிக்கைகளும் அண்டாத பெரு நெருப்பாக வாழ்வேன்.

3. சுற்றுச் சூழலைத் தூய்மையாக்குவதிலும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படாது காக்கும்பொழுது, ஒழுக்கத்தை நிலைநாட்டவும் என்னையே நான் ஒரு சமூகக்காவலனாக ஆக்கிக்கொண்டு வாழ்வேன்.

4. நல்ல உடல் நலமே, நல்ல உள நலத்திற்கான ஊற்றுக்கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன் ஊர்நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மைத் தொண்டனாக என்னையே நான் அர்ப்பணித்துக்கொள்வேன்.

5. கடவுளை மற, மனிதனை நினை என்று அறிவு ஆசான் வழிப்படி மனிதநேய மாண்பாளனாகவே எனது வாழ்வை அமைத்து, சொல்வதைச் செய்வதும், செய்வதை மட்டுமே சொல்வதுமே சுயமரியாதை சுகவாழ்வு என நான் வாழ்ந்து காட்டுவேன்.

6. வேலை கேட்டு விண்ணப்பம் போட்டு அலுக்காமல், வேலை தரும் நிலைக்கு உயரும் வகையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையே எனது கடமையாகக் கருதி வாழ்வேன்.

7. எளிமை, சிக்கனம், பிறபாலரிடம் பண்புடன் பழகும் பான்மையை என்றும் வளர்த்துக்கொள்வேன்.

8. பண்பாட்டுப் படையெடுப்புகளினால் பாழான எனது இனத்தின் மீட்புக்கான களப்பணியாளனாக என்றும் இருப்பேன்.

9. இளமை என்பது வளமைக்காக என்று நினைக்காமல் தொண்டுக்காக அதுவும் சமுதாயத் தொண்டுக்கான வாய்ப்பே என்று கருதி என்றும் உழைப்பேன்.

10. மற்றவர் உன்னை எப்படி நடத்தவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அப்படி நீ பிறரிடம் நடந்துகொள் அதுவே ஒழுக்கம் என்ற தந்தை பெரியார்தம் உயர் ஒழுக்க நெறி மனிதநேயப் பண்புடன் என்றும் சிந்தையில் ஏற்றுச் செயலாற்றி புதிய உலகினை உருவாக்கும் தூதுவனாக வாழ்வேன்.

0 comments: