Search This Blog
4.7.08
இராமாயணம் பொய்க் கதை என்று ஆரிய நேசர்களே அறிவித்திடுக!
சென்னை, ஜூலை 4- இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், ஆரிய நேசர்கட்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. இராமாயணமே பொய்க் கதை என்று அறிவித்து விடுவதுதான் நல்லது. வேறு மார்க்கம் இல்லை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய கருத்தை எடுத்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இராவண காவிய முன்னுரையில் அண்ணா அவர்கள் எழுதியிருக்கின்றார்.
இராம நவமி கொண்டாடும் நாட்டிலே
இராவண காவியம் புரட்சிக் கவிஞரின் புதுக் கவிதைபோல் புதிய தமிழகத்தின் ஓவியம். இதனுடைய நோக்கம் முன்னுள்ள ஏடுகளின் மூலம் ஏற்பட்ட கேடுகளைக் களைந்து இந்நாள் நினைவுக்கேற்ப அவற்றினை ஆராய்ந்து புது உருவாக்கித் தருவது, பழைய உருவிலே பற்றுக் கொண்டோருக்கு இது பயங்கரப் புயலாகத் தோன்றும், இதனை ஆக்கியோர் அறிவார். மனித இயல்பறிந்தோர் ஆச்சரியமும் கொள்ளார். இராம நவமி கொண்டாடும் நாட்டிலே இராவண காவியம் ஆக்கப்படுவது அதிசயம் என்று கருதிப் பயனில்லை, அறிவிப்பு என்று கொள்ளவேண்டும். பழமை மடிகிறது என்பதற்கான அறிவிப்பு. ஜாரின் கொடுமை உண்டாக்கிய சூழ்நிலையிலேதான் - ஒரு லெனின் தோன்ற முடிந்தது. தோன்றியதால்தான், யார் தேவகுமாரன் என்று தேயத்தினரல் வணங்கப்பட்டு வந்தானோ அவன், மக்களின் இரத்தத்தை உறிஞ்சிடும் பேயன் என்று ஏற்பட்டது. ஜார் இல்லையேல் லெனின் இல்லை. அவசியம் இராது. அஃதே போல் இராமாயணத்திற்கு ஆக்கந்தேட முனைவோரும், சித்திரம் தீட்டிடுவோரும் சிறு கட்டுரை யாக்கிடுவோரும் இன்று புதுக் கூத்தாட முற்பட்டிருக்கவில்லை யானால், இக்காவியமும் எழுந்திராது. ஒன்றின் விளைவு மற்றொன்று - விளைவு மட்டுமல்ல - ஒன்றுக்கு மற்றொன்று மறுப்பு.
இராமனை தெய்வமாக்க, இராவணன் அரக்கனாக்கப்பட்டான்
இராமன் தெய்வமாக்கப்பட்டான்; இராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக இராவணன் அரக்கனாக்கப்பட்டான். கோவிலுக்கு ஓர் உரு தேவை என்பதற்காக கொற்றவன் மகனாக மட்டுமே குறிக்கப்பட வேண்டிய இராமன் கையில், மகத்துவம் பொருந்திய கோதண்டத்தையும், இராம தூதனின் வாலுக்கு நினைத்த அளவில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும் கவி கற்பித்துக் கொண்டார். வாலும் வில்லும் வணக்கத்திற்குரிய பொருள்களாக்கப்படவே, தோள் வலியும் மன வலியும் படைத்த ஒரு மன்னன் மிலேச்சனாக்கப்பட்டான். இராமனுக்குச் செந்தாமரைக் கண் அமைத்தார் கவி; எனவே, இராவணன் கண் செந்தழலை உமிழ்ந்தன என்று தீட்டலானார். அவருடைய நோக்கம் இராமனைத் தேவனாக்கவேண்டும் என்பது. அதற்கேற்ற படி கதை புனைந்தார்.
நெஞ்சழுத்தம் அதிகம்
இராவண காவியம் முன்னாள் கவி, தம் நோக்கத்துக்காக இராவணன் மீது ஏற்றிய இழிகுணங்களையும், கொடுஞ்செயல் களையும் களைந்தெறியவும், அஃதே போல, இராமனுடைய குணம் செயல் ஆகியவற்றிலே காணக் கிடைக்கும் தவறுகளைத் தெளிவுபடுத்தவும் தோன்றிய நூலாகும். இராமன் கோவில் எங்கும் காணப்படும் இக்காலத்தில், இம் முயற்சியில் ஈடுபட ``நெஞ்சழுத்தமும் அதிகம் வேண்டுமல்லவா? அஃது ஆசிரியருக்கு அப்படியே அமைந்திருக்கிறது. எங்ஙனம் எனில் அவர் முன்னாள் கவிபோல ஆரியரின் போற்றுதல் அரசர்களின் மாலை மரியாதை ஆகியவற்றினைப் பெறும் எண்ணம் கொள்ளாமல் மக்கள் மன்றத்திற்கு, மனதிற்பட்ட உண்மையை எடுத்துரைப் பதே தமிழன் மாண்பு என்ற கொள்கையினராவர். அவர் தன்மான இயக்கத்தவர். எனவே தகுமா? முறையா? ஏற்றதா? என்ற கேள்விகளை அல்ல, சொல்லித்தீர வேண்டும் - உண்மை வெல்லும் - இன்று அல்லது நாளை என்ற உறுதியைத் துணைக் கொண்டு இந்நூலைச் செய்துள்ளார்.
தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை
இராமனும் இராவணனும் - உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல கற்பனைகள். இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால் அவர்தம் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர் இராமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரே யொழிய, மற்றைப் போதினில் இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர் - மதிப்பர் - வணங்குவர் ஆய்ச்சிக் கூடத்தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே.
தன்மான இயக்கத்தவர் - இராவண தாசர்களல்லர். இராவ ணனுக்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வித்துப் பூஜாரிகளாக வேண்டும் என்பதற்காக அல்ல இக்காவியம் புனைந்தது. பழி சுமத்தினரே பண்டைக் கவிஞர்கள் இராவணன் மீது. இது முறையல்லவே, துருவிப் பார்க்குங்கால் விஷயம் முற்றிலும் வேறாகவன்றோ உளது என்று எண்ணித் தீட்டியதே இந்த ஏடு.
இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே
இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராம தாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்கு மருந்து இது. ``தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது.
இராமாயணம் தீட்டப்பட்ட காலம். இந்தப் பரந்த பூபாகத்திலே இருவேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய நேரம். இது பண்பாடு, மக்கள் உளநூல் நாட்டுநிலை அறிவோர், அறிந்தோர் கண்ட உண்மை. திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவரு மில்லை. நாம் நமது கருத்துக்கு மாறானவர்கள், இரு சாராரும், இதனில் மாறுபட்டோமில்லை. ஏனெனில் இது மறைக்க முடியாத உண்மையாகிவிட்டது.
இதோ ஆரியம்! இதோ திராவிடம்!!
திராவிடம், ஆரியம் எனும் இரு வேறு பண்பாடுகள் இருந்தன, கலந்தன. இதனை அவர்களும் கூறுகின்றனர். எது திராவிடம், எது ஆரியம் என்று பிரித்துக்காட்டக் கூடாதவாறு கலந்துவிட்டது என்று புன்முறுவலுடன் கூறுவர். பிரித்துக்கூறக் கூடாது என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது மட்டுமல்ல, அவர்தம் ஆராய்ச்சியாலும் தெரிவது. பிற்காலத்தில் பிரிக்கக் கூடாதவாறு, `சர்வ ஜாக்கிரதையாக` மிகத் திறமையுடன் அந்நாளிலே ஆரியத்தைத் திராவிடத்தில் குழைத்திருக்கிறார்கள் என்ற உண்மையும் தெற்றென விளங்குகிறது. கண்டுபிடிக்கவே முடியாத கனவு! வெளிக்குத் தெரியாமல் நடைபெறும் விபச்சாரம்! ஓசைப்படாமல் கடிக்கும் நாகம்! - இவைபோல் இது பிரிக்கவே முடியாதபடி கலந்து போயிருக்கக் கூடும். இஃதோ புதைபொருள் தோண்டப்படும் காலம். மொகஞ்சதரோக்கள் காணப்படும் காலம்! மனித அறிவுக்கு எட்டாதது என்று எண்ணப்பட்ட எண்ணற்ற விஷயங்களை எளிதில் அறியக்கூடிய வழிவகை கண்டகாலம். எனவேதான் எது ஆரியம், எது திரா விடம் என்று பிரித்துக் காட்டக்கூட முடியாத அளவு கலந்து போய்விட்டது என்று கூறப்படும் தன்மையை மாற்றிட முடிகிறது. மாற்றாரின் கோபத்துக்குக் காரணம் அதுவே. எவ்வளவு முன்னேற்பாடாக திராவிடக் கலையினைச் சிதைத்தும் குறைத்தும் ஆரியத்தை அத்துடன் இணைத்தும் இழைத்தும் ஒட்டியும், கட்டியும், பூசியும் தாவியும் பலவகையாலும் பல காலமாகப் பாடுபட்டுக் கலந்தும் இன்று இந்தப் ``பாவிகள் எப்படியோ துப்புக் கண்டுபிடித்து துருவித் துருவிப் பார்த்துச் சலித்தும் படைத்தும் புடம் போட்டுப் பார்த்து, இதோ ஆரியம், இதோ திராவிடம், இன்னது இன்ன அளவு உள்ளது என்று பிரித்துக் காட்டுகின்றனரே! அந்தநாள் தொட்டு நாம் செய்த முயற்சிக்கு இந்நாள் வந்ததே விபத்து! என்றெண்ணிக் கவலைப் படுகின்றனர். அவர்கள் கவலைப்படுகிறார்களே என்பதற்காகக் காலவேகம் வேலை நிறுத்தம் செய்யுமா? தடையும், எதிர்ப்புப் படையும் அந்த வேகத்தை அதிகப்படுத்துகின்றன என்று அண்ணா அவர்கள் சொல்லுகின்றார்.
ஆதாரங்கள் இராமாயணத்திலிருந்து சலித்து எடுக்கப்பட்டவை
இராவண காவியத்தை இந்த மனநிலையின் கனியயெனக் கொள்ள வேண்டும். இதுவும் அந்நாள் இராமாயணம் போலக் கலைப்போர் முரசுதான் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது, இராவணனைத் தேவனாக்க வல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க! முன்னதற்குக் கவி, வானையும் வானிலுறைவோரையும் துணைக் கொள்ள நேரிட்டது. இந்நூலுக்கு அது தேவையில்லை. முன்னூலில் புதைந்துள்ளவைகளைக் கொண்டே இராவணனின் உருவம் இத்தன்மையது என்று எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர். சம்பராகர யுத்தம் என்று முன்னூல் கூறுகிறது. அசுரன் அவன் என்று பயங்காட்டுகிறது. இராவண காவியத்திலே சம்பரன் அசுரனல்லன், பாண்டியன் எனப்படுகிறது. எதைக் கொண்டு இம்முடிவு காட்டுகிறார் ஆசிரியர்? முன்னூலிலே சம்பராசுரன், மீனக்கொடியோன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, மீனக்கொடி பாண்டியனுக்குரியது. எனவே சம்பரன் அரனென்று ஆரியரால் நிந்திக்கப்பட்ட பாண்டிய மன்னனாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டுகிறது இந்நூல். இஃதே போலவே இந்நூலின்கண் காணப்படும் பல்வேறு நிகழ்ச்சிகட் கும் ஆதாரங்கள், இராமாயணத்திலிருந்து சலித்து எடுக்கப் பட்டவையே யாகும். இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், ஆரிய நேசர்கட்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. இராமாயணமே பொய்க்கதை. அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்துவிடுவதுதான். வேறு மார்க்கம் இல்லை.
பொல்லாத குழந்தை இடந்தரவில்லை
கதை கிடக்கட்டுமய்யா, காவிய ரசனை இருக்கிறதே! அது கம்பனின் இராமாயணத்தில் பொங்கி வழிகிறதே! அஃதிருக் கட்டும் - அச்சம் ஏன்? கொச்சைத் தமிழிலே எதேதோ கூறிடுவார் கூறட்டும். அழகு கவிதையில் ஆரிய இராமன் மிளிர்கிறான் என்று கூறுவதற்கும் இந்தப் பொல்லாத குழந்தை இடந்தர வில்லை. கூற வேண்டியதைக் காவியச் சுவை குறைவுபடா வண் ணம் கூறிவிட்டிருக்கிறார். அங்கு ஆறு ஓடும் விதம் எவ்வளவு அழகுபட... உளதோ, அவ்வளவ அழகுபட இங்கு முளது. அங்கு இயற்கைக்குத் தமிழ் ஆபரணம் பூட்டப்பட்டிருப்பது போலவே, இராவண காவியத்திலும் பொலிவுறப் பூட்டப்பட்டுள்ளது. அதிலாவது தேவாம்சம் புகுந்து தமிழின் இனிமைக்கு ஊறு தேடுகிறது. இதன்கண் அக்குறையும் கிடையாது. அது ஆரியங் கலந்த கடுந்தமிழில் புலவர்க்காக ஆக்கப்பட்டது. இது எளிய இனிய தனித்தமிழில் எல்லா தமிழ் மக்களுக்கும் இயற்றப்பட்டது. எடுத்துக்காட்டாகச் சில கூறுவோம்!
அளித்தகை யில்லா வாற்ற லமைந்தவன் கொடுமை யஞ்சி
வெளிப்பட வரிதென் நுன்னி வேதனை யுழக்கும் வேலை
களித்தவர் களிப்பு நீங்கக் காப்பவர் தம்மைக் கண்ணுற்
றொளித்தவர் வெளிப்பட் டன்னக் கதிரவ னுதயஞ் செய்தான்
கம்பராமாயணம், அணி வகுப்புப் படலம் -24
சூரியன் இராவணன் கொடுமைக்கு அஞ்சி வெளி வரமுடியாமல் வருந்திக் கொண்டிருக்கும்போது, இராமன் படையைக் கண்டு வெளிப்பட்டான்!
இருண்டபேரிருளை நீக்கி இளங்கதிர்ச் செல்வன் துப்பில் திரண்டுமே பொருது வென்று சென்றவர் போக மண்ணிற்
புரண்டுமே யுயிரை நீத்துப் போனமா மறவர்க் கின்றோ
டிரண்டுநா ளாயிற் றென்ன எண்ணுவான் போல வந்தான்
இராவண காவியம்: இரண்டாம் போர்ப் படலம் -1 (துப்பு - வலி துப்பில் திரண்டு - வலிமிக்கு கதிரவன் மறைவு
தன்றனிப் புதல்வன் வென்றித் தசமுகன் முடியில் தைத்த
மின்றனித் தனைய பன்மா மணியினை வெளியிற் கண்டாள் ஒன்றொழித் தொன்றா மென்றவ் வரக்கனும் ஒளிப் பான் போல
வன்றனிக் குன்றுக் கப்பால் இரவியும் மறையப் போனான்...
கம்பராமாயணம் மகுடபங்கப் போனாள் -41
(சூரியன் மகனான சுக்கிரீவன் இராவணனது மணிமுடியைச் சிதைக்க இராவணன் அங்கு நின்று சென்றதுபோல, மகன், வெற்றி கண்ட மகிழ்வால் சூரியனும் மறைந்து சென்றான்)
குருதி யாடிக் குவிபிணக் காடணர்
பரவை போலப் படர்செங் களத்தினை
பரிதி காணப் படாதெனச் செல்லவே
இரவு வந்த தினுங்கொலு வேனெனா
இராவண காவியம் முதற்போர்ப் படலம் -77)
(அணர்தல் - மேல் நோக்கி எழுதல் பரவை - கடல்)
விரிக்கிற் பெருகும் - புலவர் குழந்தை பெருங்காப்பியத் திற்குள்ள இலக்கண முறை சிறக்கச் செய்துள்ளார். கவிச்சுவை, ஓசை, உவமைகள், அணிகள் அழகுடன் அமைந்துள்ளன. அகம் - புற இலக்கணங்களில் கூறப்படும் களவு, கற்பு, போர் முறை, வீரம் முதலியவற்றிற்கோர் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றது இது. எனவே சிறந்ததோர் காவியமாக அமைந்துள்ள இராவண காவியம் தமிழில் இனிமை கண்டு கொள்ளுவோருக்கு விருந்தாக அமையுந்தகைமைத்து.
இராமாயணம், ஆரிய ஆதிக்கத்துக்குப் பயன்பட்டதென்பது மறுக்கொணாத உண்மை. பண்டித நேரு அவர்கள் நம் திருமகளாருக்குத் தீட்டிய திருமுகத்திலேயும் இதனைக் குறித்துள்ளார். நோக்கமே அந்நூலுக்கு அதுதான்.
தோழர் புலவர் குழந்தை, தமிழர். தமிழ் இனம் விழிப்புற்று வீறு கொண்டு விடுதலை பெற்று வீரமக்களாய் தன்னாட்சித் தனியரகரிமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்குடையார்; எனவே அவர் தமது அறிவுத்திறனை , ஆராய்ச்சி அனுபவத்தை தமிழை, தமிழர் கவிப்புவமையை இந்த நோக்கத்துக்குப் பின் பயன்படுத்தியுள்ளார். காவியத்திலே - தமிழ்நாடு தமிழ், தமிழர் தன்மை ஆரியர் வருகை, அவரைத் தமிழர் ஆதரித்தமை, ஆரியரின் உட்கருத்து, அவர் தம் உணவு முறை கெடுநினைப்பு தீயசெயல் ஆகியவற்றினை விரித்துரைத்திருக்கிறார்.
கருங்கக் கூறுமிடத்து இந்நூல், பழமைக்குப் பயணச்சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு; தன்மான இயக்கத்தார். தமிழ்ப் பகைவர்கள், காவியச் சுவை யறியாதார், கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்; தமிழ் மறுமலர்ச்சியின் தலை சிறந்த நறுமலர்; நெடுநாள் ஆய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம், தமிழரின் புதுவாழ்வுக்கான போர் முரசு; காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம். எனவே இது அழிந்துபடாது என்று இறுமாந்திருப்போருக்கு ஓர் அறைகூவல்; தமிழருக்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்.
இவ்வரிய நூலை, மிகச் சிரமப்பட்டு, தமிழரின் தன்மானம் தழைக்கவேண்டும் என்ற பெருநோக்குடன் எழுதியுள்ளமைக்குப் புலவர் குழந்தைக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன், நந்தமிழ் மக்கள் இதற்குப் பேராதரவு தருவர் என்று அவர்க்கு உறுதி கூறுகிறேன். தமிழராகிய நீவிர், உமக்கென ஆக்கப்பட்ட இத்தனித் தமிழ்க் காவியத்தைப் போற்றியாதரிப்பீர் என்ற நம்பிக்கையை ஈடேற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.
காஞ்சிபுரம் ---அன்பன்,அண்ணாத்துரை
15-9-1946
என்று அண்ணா அவர்கள் எழுதியுள்ளார். அண்ணா அவர்களின் இந்த முன்னுரையே தனியாக ஒரு ஆய்வுச் சொற் பொழிவு, ஆற்றக் கூடிய அளவிற்கு அவ்வளவு சிறப்பான முன் னுரை. அவ்வளவு ஆராய்ச்சி முன்னுரையாக அண்ணா அவர்கள். இதைச் சொல்லும்பொழுது ஆழமாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
-------------------சென்னை பெரியார் திடலில் 27.6.2008 அன்று நடைபெற்ற தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
தமிழ் ஓவியா அய்யா,
திராவிடம் என்ற கொடிய அரக்கனை அண்ணதுரை அய்யாவே புதைத்து சமாதி கட்டிவிட்டாரே?பிறகு ஏன் இன்னும் திராவிடம் என்ற பழமைக்கு வக்காலத்து வாங்கி பகுத்தறிவுக்கு எதிராக நடந்துகொள்கிறீர்கள்?விளக்கமா சொல்லுங்கய்யா.
பாலா
பாலா அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் அளித்து வரும் பின்னூட்டத்தை படித்து வருகிறேன். தங்களின் அய்யப்பாட்டை போக்கவேண்டியது எமது கடமை. ஆரோக்கியமான எந்த விமர்சனத்தையும் எடுத்து வைக்கலாம். தக்க பதில் கண்டிப்பாக கொடுக்கப்படும்.
திராவிடம் பற்றி நீங்கள் கேட்டுள்ளீர்கள். அது பற்றி பெரியார் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். படியுங்கள். தெளிவு பெறுங்கள்.
பெரியாரின் விளக்கம் இதோ:
திராவிடமொழிபேசும் திராவிடரைப்பற்றி சிறிது கூற ஆசைப்படுகிறேன். திராவிடம் என்பது நாட்டினுடைய பெயராகும். திராவிடர் என்பது இந்நாட்டின் பழங்குடி இனத்திற்கு எற்பட்ட உலகப் பெயராகும். திராவிடர் என்பதை நம்மில் சிலர் மறுக்கிறார்கள். வெறுக்கிறார்கள். திராவிடர் என்பது என்ன? நாம் கற்பித்த ஒரு பெயரா? இது இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. ஆரியர் என்ற பெயர் தோன்றிய அன்று ஏற்பட்ட பெயர்தானே திராவிடர் என்பது. நீக்ரோ, மங்கோலியர் என்ற பெயர்கள் ஏற்பட்டதும் அன்றுதானே. திராவிடர் என்ற பெயரை மனுதர்ம நூலில் காணலாமே. இராமாயணத்தில், பாரதத்தில்கூட இதற்கு ஆதாரமுண்டே. இந்த நாட்டை பொறுத்தவரையில் இதுவரைக்கும் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர் திராவிடர் போராட்டமே ஒழிய வடமொழி - தென்மொழி போராட்டமல்லவே. இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே.
வடநாட்டு- தென்னாட்டுப்போராட்டம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. புராணகாலம் முதற்கொண்டு இருந்துவந்திருக்கிறது. இதிகாசங்களுக்கெல்லாம் முந்தியது புராணம். புராணங்களுக்கெல்லாம் முதன்மையானது கந்தபுராணம். கந்தபுராணத்திலேயே இந்த வடநாடு தென்நாடு போராட்டம் துவக்கப்பட்டுவிட்டது. அதிலுள்ள சிறு கதையை கேளுங்கள். கதை கற்பனையாக இருந்தாலும்; அதிலுள்ள கருத்தை கவனித்துப்பாருங்கள். ஆரியக்கடவுளாகிய சிவனுக்கும் (ஆரியர் தலைவன்) பார்வதிக்கும் வடநாட்டில் திருமணம் நடக்கிறது. அப்போது தேவர்கள் (வடநாட்டவர்- ஆரியர்கள்) தென்னாடு உயர்ந்துவிட்டதையும், வடநாடு தாழ்ந்துவிட்டதையும் சிவனிடம் வருத்தத்துடன் கூறுகிறார்கள். சிவன் தென்நாட்டை தாழ்த்த வேண்டி அகத்தியனை அனுப்புகிறார். அகத்தியன் தெற்கு நோக்கி வருகிறான்: திராவிடநாட்டின் வடக்கெல்லையான விந்தியமலை அவனை தடுக்கிறது. அகத்தியன் சினந்து அம்மலையை அழுத்திவிடுகிறான். ( அங்குள்ள மக்களை வென்று விடுகிறான்) மேலும் தெற்கு நோக்கி செல்கிறான். வாதாவியும், வில்வனும் தடுக்கிறார்கள். அவர்களையும் வென்று கொண்டுபோய்த்தென்னாட்டில் இராவணனுடைய ஆதிக்கத்தை தகர்ததெறிந்து, தமிழை உண்டாக்கினான். அதாவது, முதலில் மொழியில்தான் அகத்தியன் கை வைத்தான்: மொழியை ஒழிக்கும் வேலைதான் அவர்களின் முதல் வேலை: இதுதான் அவர்களின் நடைமுறைப்பழக்கம்.
இந்த வடநாட்டுப் போராட்டம் நான் துவக்கியது அல்ல. கந்தபுராண காலத்திலே வாதாவியில் துவக்கப்பட்டது. இது ஆரியப்புராணம் கூறுவது. அன்றுதொட்டு இடைவிடாது இருந்துவரும் இயற்கைப் போராட்டம்தான் இது. ஆரியம் ஒழிந்து, ஆரியர்கள் அத்தனைபேரும் திராவிடர்களாகும் வரையிலும், அல்லது அவர்கள் அத்தனைபேரும் திராவிடநாட்டை விட்டு வெளியேறும் வரையிலும் இப்போராட்டம் இருந்தே தீரும். உடற்கூற்று வல்லுனர்கள் அந்தந்த நாட்டுத் தட்பவெப்பத்திற்கேற்ப அமைந்த அங்க, மச்ச அடையாளங்களைக்கொண்டு பாகுபடுத்திக்ககொடுத்த இனப்பெயர்கள்; தாமே ஆரியர் - திராவிடர் என்பவை! இப்பிரிவுகள் தேவர்களாலோ,கடவுளாலோ, உண்டாக்கப்பட்ட பிரிவுகள் அல்லவே. அறிவுள்ள மக்களால் பிரிக்கப்பட்டு, மற்றவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, வழக்கத்தில் இருந்துவரும் பெயர் தாமே இவை? இவர்களைப் பிரிக்க இரத்தப்பரிச்சை செய்யவேண்டியதில்லையே. ஆடையின்றி பிறந்தமேனியாய் நிறுத்தினால்கூட இவன் ஜப்பானியன். இவன் நீக்ரோ, இவன் திராவிடன், இவன் ஆரியன் என்று பிரித்துவிடலாமே. நாய்களைப் பிரிக்கவில்லையா நாம்.? இது கோம்பை, இது புல்டாக், இது சிப்பிப்பாறை, இது இராஜபாளையம்: இது சீமை என்று? குதிரையைப் பிரிப்பதில்லையா? நாம். இது அரபிக்குதிரை: இது ஆஸ்திரேலியக்குதிரை: இது வேதாரணித்தட்டு என்று! இவற்றையெல்லாம் பிரிக்கும்போது மக்களைத்தானா பிரிக்கமுடியாது? இது போகட்டுமே! நாம் பிறவி பார்த்து இனப்பிரிவினை செய்யும்படி கேட்கவில்லையே? அவரவர் கொண்டாடும் உரிமைகளைக்கொண்டுதானே பிரிக்கும்படி சொல்லுகிறோம்.
தமிழர் என்பது மொழிப்பெயர். திராவிடர் எனபது இனப்பெயர். தமிழ்பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ்பேசும் அத்தனைபேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்த சமயத்தை சார்ந்தவனாயிரந்தாலும் எந்த மொழி பேசுபவனாய் இருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால் திராவிடமொழி தமிழ் என்ற காரணத்திற்காக தமிழ்பேசும் திராவிடனல்லாத ஒருவன் மொழிகாரணமாக மட்டுமே தன்னை திராவிடன் என்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழன் என்று கூறிக்கொண்டு நம்முடன்; கலந்துகொண்டு நம்மை கெடுக்கப்பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னை திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான். அப்படி முன்வந்தாலும் அவனுடைய ஆச்சார அனுஷ்டானங்களையும் பேத உணர்ச்சியையும் விட்டு திராவிடப்பண்பை ஒப்புக்கொண்டு அதன்படி நடந்தால் ஒழிய நாம் அவனை திராவிடன் என்று ஒப்புக்கொள்ளமாட்டோம்.
பண்டைத் திராவிடமக்களின் பழக்கவழக்கங்களை ஒட்டி அதில் ஏதாவது தவறு இருக்குமானால் அதையும் களைந்துவிட்டு ஒரு திராவிடன் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று ஏற்பாடு செய்தால் அந்த ஏற்பாட்டுக்கு உட்பட்டு நடக்க ஒப்புக்கொள்பவனைத்தான் திராவிடன் என்று கூறுவோமே அல்லாது சி.பி. இராமசாமி அய்யரையும், இராசகோபாலாச்சாரியாரையும் கூட அவர்களின் பண்பு திராவிடபண்பாக மாறும் வரை திராவிடஇனத்தில் சேர்த்துக்கொள்ளமாட்டோமே. தமிழர் என்பதில் இவ்வளவு நிபந்தனைகள் உண்டா? இதைத் தவிர திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்? எங்கள் நடத்தையிலோ, அன்பிலோ உங்களுக்கு சந்தேகம் எழத்தான் என்ன காரணம் இருக்கமுடியும்.? தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனைபேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த, நமக்கு மாறுபட்ட கலச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா?
இழிவுக்கும், தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறாக இவ்விழிவிற்கே காரணமான உயர்சாதி மக்களையும் ஒன்றாக்கிக்கொண்டால் அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும். பிறகு எல்லோரும் ஒன்றாவோம்.
இந்நாட்டு கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும் தம்மை திராவிடர் அல்லர் என்று கருதுவார்களானால் தம்மை சூத்திரர் அல்லர் என்று கருதுவார்களானால் அதைப ;பற்றியும் நமக்கு கவலையில்லை. ஆனால் உண்மையில் ஆரியம் அவர்களை சூத்திரருக்கும் தாழ்ந்தவராக அதாவது மிலேச்சர்கள் என்பதாகத்தான் கருதிவருகிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். வைசியன் தன்னை ஆரிய வைசியன் என்று கூறிக்கொண்டாலும் ஆசாரி தன்னை விஸ்வ பிராமணன் என்று கூறிக்கொண்டாலும், பள்ளர்கள் தன்னை தேவேந்திரகுல வேளாளன் என்று கூறிக்கொண்டாலும், படையாட்சி தன்னை வன்னியகுல சத்திரியன் என்று கூறிக்கொண்டாலும், ஆரியம் இவர்கள் அத்தனை பேரையும் சூத்திரன் என்ற பிரிவில் ஒன்றாகத்தான் கருதிவருகிறது என்பதையும், கோவிலில் ஒரு குறிப்பிட்ட வரையில்தான் இவர்கள் அத்தனைபேரும் போகமுடியும் என்பதையும் இவர்கள் உணரவேண்டுகிறேன்.
பிராமணர், பிராமணமகாசபை வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும், உரிமையும் கிடைக்கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக்கொண்டால் உயர்சாதியானுக்கு அடிமையாய் இருக்கும் உரிமைதான் கிடைக்கும். பார்ப்பானின் தாசிமக்கள் என்ற பட்டம்தான் கிடைக்கும். அந்த சூத்திர தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக்கொண்டிருப்பதால்தான் அப்பெயரால் எவ்விதச்சலுகையோ, உரிமையோ கிடைக்காததால்தான் அப்பெயரில் உள்ள இழிவு காரணமாகத்தான், அத்தலைப்பில் அதே இழிதன்மையுள்ள திராவிடராகிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், வைஷ்யர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்கள் எல்லாம் ஒன்று சேர மறுத்துவிடுவார்கள். ஆதலால்தான் நம்மை சூத்திரர் என்று கூறிக்கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக்கொள்கிறோம். சூத்திரர் என்பவர்களுக்கு திராவிடர் என்பது தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக்கேட்டுக்கொள்ளவும் தயாராய் இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே கூறிய அத்தனைபேரும் ஒன்றுசேர வசதியிருக்கவேண்டும். அதில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூட புகுந்துகொள்ள வசதியிருக்கக்கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்கவேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ளமுடியாது. நாம் ஒழிக்கப்பாடுபடும் பிறவி காரணமான இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே அவர்களை சேர்த்துக்கொள்வதற்கு காரணம் இல்லை.
ஆரியராவது திராவிடராவது அதெல்லாம் இன்றில்லை என்பீர்கள் இங்கே வாருங்கள் பேசாமல் மேல்துண்டு போட்டுக்கொண்டு நால்வருணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன். பார்ப்பான் உங்களை
எல்லாம் ஒரே இடத்தில் விட்டுவிட்டு உள்ளே நுழைகிறானா இல்லையா பாருங்களேன்.
(ஈ.வெ.ரா.சி.பக்கம்547-549).
//திராவிடம் பற்றி நீங்கள் கேட்டுள்ளீர்கள். அது பற்றி பெரியார் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். படியுங்கள். தெளிவு பெறுங்கள்.//
தமிழ் ஓவியா அய்யா,
அண்ணதுரை அய்யா அறுபதுகளில், திராவிடீயத்தை புதைத்து விட்டாரே என்று கேட்டால் நீங்க தாடிக்கார அய்யா உளறியதை கட் அண்ட் பேஸ்ட் செய்து போட்டு விட்டீர்கள்.இந்த அழகுல படித்து விளக்கம் பெறுங்கள் என்ற உபதேசம் வேற.இது பம்மாத்து அல்லாமல் வேறு என்ன கேட்கிறோம்.
சரி, தாடிக்கார அய்யா சொன்னதுக்கே வருவோம்.அய்யா சொன்னது போல் மலையாளத்தாரோ,கன்னடரோ,தெலுங்கரோ,யாரையாவது நீங்க யார் என்று கேட்டால் யாராவது "நான் திராவிடன்", என்று சொல்லிக்கொண்டு, திரிகறார்களா?இல்லையே."நான் தெலுங்கன்,இந்தியன்,கேரளத்தவன்" என்று சொல்லிக் கொள்வார்கள்.இவர்களால் மேலே துண்டு போட்டுக் கொள்ள முடியலயா என்ன?ஏன், தமிழ் நாட்டில் தீவிரவாத கருப்பு சட்டை கும்பலையும்,தி மு க கும்பலையும்,சுப வீ போன்ற டெர்ரரிஸ்ட்களைத், தவிர யார் திராவிடம் என்ற பம்மாத்தை இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள்,என்றும் கேட்கிறோம்.
வடக்கு,தெற்கு,ஆரியன்,திராவிடன் என்று பிரிவினை பேசியது வெறுப்பை வளர்ப்பதற்கல்லாமல் வேறு எதற்காக என்று கேட்கிறோம்..
சிலை உடைப்பு,டும்மி அறுப்பு போன்ற டாலிபான் செயல்கள் வன்முறை அல்லாமல் வேறூ என்ன என்று கேட்கிறோம்.
அடால்ஃப் ஹிட்லர் யூதர்கள் ஆரியர்கள் அல்ல,வந்தேறிவர்கள் என்று கூறி,ஜெர்மானியர்களிடம் வெறுப்பை வளர்த்து, ல்ட்சக் கணக்கில்,யூதர்களை கொன்று குவிக்க வைத்தான்.ஜெர்மானியரை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றான்.அது போல இங்கும் ஒரு பிரிவினரை இவன் கைபர் வழியாக வந்தேறியவன்(மத்த கும்பல் சோமாலியவிலிருந்து வந்தேறியதோ?)என்று அடையாளம் காட்டி வன்முறை செய்ய தூண்டிவிட்டது முறையானதா என்று கேட்கிறோம்.கேட்டால் சாதி வேறு பாடுகளை களைகிறோம் என்று கூசாம பொய் சொல்லாதீர்கள்.திராவிடீய தமிழ் நாட்டில் சாதியம் தலைவிரித்தாடுவது போல்,பீஹாரில்கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.சாதியத்தை வளர்த்து விட்டதில் திராவிடீயத்தின் பங்களிப்பு அதிகம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறோம்.
தாடிக்காரரின் வாய் 24x7 திறந்தே இருந்தது.என்ன பயன்?யாரையாவது எதற்காகவாவது திட்டிக் கொண்டிருந்தது.வெறுப்பை வளர்த்து வந்தது.வேறு உருப்படியாக என்ன செய்தது என்று கேட்கிறோம்?
இந்த மூஞ்சியால் ஆதாயம் பெற்றது,மஞ்ச துண்டு,மானமிகு,ஓரளவுக்கு தமிழ் ஓவியா போன்ற ஆட்கள் தவிர சாதாரண தமிழர்கள் பெற்ற (ஆனால் ஏனைய இந்தியர்கள் பெறாத)ஆதாயம் என்ன என்று கேட்கிறோம்.
தாடிக்காரரிடம் பெரிதாக இருந்தது,அயோக்யத்தனம்,அராஜகத்தனம்,அகம்பாவம்,மற்றும் தாடி தவிர வேறு என்ன என்று கேட்கிறோம்.இவையெல்லாம் பெரிதாக இருந்ததால் இவர் தான் பெரியார்,இவர் தான் நம் தந்தை என்று சொல்லி பெரியாரியசத்தை பரப்புவது அயோக்யத்தனம் அல்லாமல் வேறு என்ன கேட்கிறோம்.
இன்னும் நிறைய கேட்க இருக்கிறது.
பாலா
நீங்க வேறு எந்த மாநிலத்திற்கும் இதுவரை போகவில்லை போலும். அதைவிட செய்திகளைக்கூட சரியாக படிக்க மாட்டீர் போலும். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் போடுக்கொண்டிருந்த ஜாதி வாலை ஒட்ட நறுக்கியவர் பெரியார். அது அயோக்கியதனம் அராஜகம் என்றால் அதை நாங்கள் எப்போதும் செய்யத் தயார்.
உருப்படியா பெரியார் என்ன செஞ்சார் என்று கேட்கிறார் நரகல்நடை பாலா.
புகைவண்டி நிலையத்தில் பார்ப்பான் சாப்பிடும் இடம், இதராள் சாப்பிடும் இடம் என்று இருந்த நிலையை மாற்றி அமைத்தது உங்கள் பார்வையில் தீவிரவாதியான பெரியார்தான்.
இன்றைக்கு பார்ப்பனரல்லாத தமிழர்கள் கல்வி வேலை வாய்ப்பில் முன்னேறியுள்ளார்கள் என்றால் அதற்கு காரணமாக இருந்தது உங்கள் பார்வையில் அராஜகம் செய்த பெரியார்தான்.
இது போல் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஓரளவுக்கு தமிழ் ஓவியா ஆதாயம் அடைந்துள்ளதாக சொல்லியுள்ளீர்கள்.
ஆம் ஆதாயம் அடைந்துதான் உள்ளேன். பார்ப்பானின் அடிமையாகவாழ்ந்து அவனைச் சாமி என்று கூப்பிட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றி நீயும் மனிதன் அவனும் மனிதன் அனைவரும் சமம் என்று எங்களது சுயமரியாதையை காப்பாற்றிகொடுத்த சுட்டெரிக்கும் சுயமரியாதைச் சூரியன் பெரியாரினால் அடைந்தது ஆதாயம்தான்.
பார்ப்பானின் வைப்பாட்டி மகன் சூத்திரன் என்ற நிலையை மாற்றி,சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்று பார்ப்பனரின் ஆதிக்கத்தை அடக்கி எங்களை மனித நேயக்காரனாக மாற்றியது தான் பெரியாரிடம் இருந்து நாங்கள் பெற்ற ஆதாயம்.
ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியாருக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று ஒரு சவுண்டிப்பார்ப்பான் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாராம். ஒரு கட்டத்தில் அந்தப் பார்பானின் எழுதுகோலில் எழுத முடியாத சூழ்நிலை. அதைக் கவனித்த பெரியார் தன்னுடைய எழுதுகோலைக் கொடுத்து கேள்விகளை எழுதுமாறு சொன்னாராம். பார்ப்பான் வெட்கித் தலை குனிந்தாராம். அப்படிப்பட்ட பெரியாரின் தொண்டர்களிடம் உங்கள் ஜம்பம் பலிக்காது. இது என்ன எதையும் சந்திக்க தயார்.
//இன்றைக்கு பார்ப்பனரல்லாத தமிழர்கள் கல்வி வேலை வாய்ப்பில் முன்னேறியுள்ளார்கள் என்றால் அதற்கு காரணமாக இருந்தது உங்கள் பார்வையில் அராஜகம் செய்த பெரியார்தான்//
அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
பார்ப்பனரல்லாத தெலுங்கர்கள்,கன்னடியர்கள்,பஞ்பாபிகள்,மாராத்தியர்கள்,பெங்காலிகள் என்ற பலர் முன்னேறியிருக்கின்றனர்.தமிழர் மட்டுமல்ல.தாடிக்காரனால் முன்னேறியவர்கள்(பணம் கொள்ளை அடிப்பதில்) மஞ்ச துண்டு,வீரமணி போன்ற பலே மோசடி பேர்வழிகளும்,தமிழ் ஓவியா போன்ற பிரியாணி குஞ்சுகளும் தான்.ஓசி பிரியாணி வகையாக கிடைக்கிறது என்பதாலேயே தாங்கள் முன்னேறி நல்ல நிலையில் இருப்பதாக நம்பும் அரை வேக்காடுகள் தான் பழனி தமிழ் ஓவியா போன்ற கருப்பு சட்டை அடியாட்கள் கும்பல்.உங்களை மாதிரி ஜல்லி கும்பல் தமிழ் நாட்டில் அதிகமாக இருப்பதால் தான்,தமிழனைக் கண்டாலே மற்றவர்கள் "எலே திராவிடா" என்று கேவலமாக விளிக்கிறார்கள்.தமிழனுக்கு எங்கு சென்றாலும் உங்களைப் போன்றவர்களால் இழுக்கு தான்.அவமானம் தான்.என்ன செய்வது?
பாலா
//தீவிரவாதியான பெரியார்தான்.//
தமிழ் ஓவியா அய்யா,
தாடிக்கார சகுனி மாமா தீவிரவாதி தான்;ஆனால் நீங்கள் சொல்கிறபடி உலகம் முழுவதும் பேசப்படுகிற தீவிரவாதி அல்ல.லோக்கல் தாதா என்கிற லெவெலில் இருந்தவர் தான்.உலகம் முழுவதும் பேசப்படுகிற தீவிரவாதி என்றால் ஒசாம பின் லேடன் அய்யாவை சொல்லலாம்.நம்ம தாடிக்காரரோ ஒரு பங்க் குமார்,பிளேடு பக்கிரி என்ற ரேஞ்சில் தீவிரவாதம் செய்தவர்.குஞ்சுகள் இவர் ரேஞ்சைப் பற்றி புல்த்திக்கொள்ளவேண்டியதில்லை.
பாலா
Post a Comment