Search This Blog
2.7.08
வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன்.
“இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும் வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதில் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்குமேல் ஒருவன் வீரனாகவோ மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும்.
ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். எத்துறையிலும் நான் இருந்து பார்த்து விட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தி யாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.
நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்ட விரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்கமில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல் கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப்புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன். வீரப்பட்டமும் பெறுவேன்.
சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் “புகழை”யும், “வீர”ப் பட்டத்தையும் தியாகம் செய்துவிட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன்.
-------------- தந்தைபெரியார் - ‘குடி அரசு’ 29.3.1936
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக //
அடேங்கப்பா, அப்பேற்பட்ட மகாத்மாவா தன்னை நினைச்சுக்குதா இந்த முண்டம்.அப்ப எதுக்காக இவ்வளவு கேவலமாக ,பொறிக்கித்தன்மா இந்த முண்டம் நடந்தது?தமிழ் ஓவியா அய்யா விளக்குவாரா?
பாலா
என்னதான் பாலா அவர்கள் பெரியாரைப் பற்றி வசைமாரி பொழிந்தாலும்,பெரியாரின் உண்மை உழைப்பை அவர் வெகுசீக்கிரம் புரிந்து கொள்வார் என நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஏன் என்றால் பெரியார் எந்த மக்களுக்காக உழைத்தாரோ அந்த மக்களாலேயே துற்றப்பட்டார். பின் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து பெரியாரைப் போற்றினார்கள் என்பது தான் உண்மை வரலாறு.
பாலாவும் அவரைப் போன்றவர்களும் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை மட்டுமல்ல நாகரிக மனிதன் வெட்கப்படக்கூடியது என்பதை படிக்கும் அன்பர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
உங்களின் எப்படிப்பட்ட விமர்சனைத்தையும் எதிர்கொள்ளும் தெம்பும் திராணியும் பெரியார்தொண்டர்களுக்கு உண்டு. நாங்கள் வீட்டுச் சோற்றை தின்று விட்டு ஊருக்கு உழைப்பவர்கள்.உங்களைப்போல் "பொறுக்கி" எடுக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் உழைத்துவருகிறோம்.ஏன் எனில் நாங்கள் எப்போதும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் பக்குவம் உடையவர்கள். குழந்தை எட்டி உதைக்கிறது என்பதற்காக காலை ஒடித்துவிட மாட்டோம். அதேவேளை அந்தக் குழைந்தையை பக்குவமா சொல்லித் திருத்துவோம். அது போல்தான் பாலா போன்றவர்களிடம் எங்கள் அணுகுமுறை இருக்கும். திருந்தாத போது திருத்துவதற்கு சில நேர்மையான நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எப்படியிருப்பினும் பாலாவைப் பொன்றவர்களின் சுயரூபங்கள் விரைவில் அம்பலப்படும் . நன்றி.
Post a Comment