Search This Blog

24.7.08

சேதுக்கடலில் கப்பல் செல்ல பாலத்தை உடைத்தான் - ராமன்

கம்பராமாயணம், யுத்த காண்டம், மீட்சிப் படலம் பாடல் 4057 இதோ:

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரிற்
பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருக்கிய வமரர்க்கெல்லா நீணிதியாவர் அன்றே!
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தது என்பதால், புஷ்பக விமானத்தில் ஏறிச் செல்கையில், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக் கீறி உடைத்து வழி விட்டான் என்கிறது இப்பாடல்.

கட்டியவனே உடைத்துவிட்டான். பாலம் எங்கே இருக்கிறது?

உ.வே. சாமிநாதய்யர் பதிப்பித்த சிறீமத் கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057-க்கு உரை எழுதும்போது அய்யர் எழுதுகிறார்:

வில்லின் குதையால் (அம்பின் நுனி) கீறித் தருக்கிய இடம் இன்றும் தனுக்கோடி என்றும், அவ் விடத்தில் உள்ள நீர்ப் பகுதி தனுக்கோடி தீர்த்தம் என்றும் வழங்கு கிறது.
நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேது புராணத்திலும், பல பட்டடைச் சொக்க நாதப் புலவர் இயற்சிய தேவை உலாவிலும் இதன் வரலாறு காண்க.

1 comments:

Krubhakaran said...

என்று கடல் கடைந்தது?எவ்வுலகம் நீரேற்றது?
ஒன்றும் அதனை உனரேன் நான் அன்று அது
அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இது நீ
படைத்திடந்து உண்டுமிழ்ந்த பார்.

பொய்கையாழ்வார்.


ஆருயிரேயோ! அகலிடம் முழுதும்
படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேரியரேயோ! பெரிய நீர் படைத்து அங்கு
உறைந்துஅது கடைந்துஅடைத்து உடைத்த
சீரியரேயோ! மனிசர்க்குத் தேவர்
போலத்தே வர்குந்தே வாவோ!
ஒருயி ரேயோ உலகங்கட்குஎல்லாம்!
உன்னை நான் எங்கு வந்து உறுகோ!


நம்மாழ்வார்.