Search This Blog

8.7.08

ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் ரூ.50 ஆயிரம் பரிசு



"ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டால், அந்தத் தம்பதிக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இளைஞர்களும், இளம் பெண்களும் கொடூரமாகக் கொல்லப்படுவது அரியானாவில் அதிகளவில் நடந்துவருகிறது.

கடந்த ஆறு மாதங்களில் இதுபோன்று ஆறு சம்பவங்கள் நடந்துள்ளன. காதலர்களுக்கு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளது அரியானா அரசு.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக, சிறப்புத் திட்டம் ஒன்றும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அப்படி திருமணம் செய்துகொள்வோரில் ஒருவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை."

----------- "விடுதலை" 8-7-2008

ஜாதி ஒழிய மிகச்சிறப்பான செயல்திட்டத்தை அமுல்படுத்திய அரியானா அரசை மனம் திறந்து பாராட்டுகிறோம். தமிழ்நாடு அரசும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர்களுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. அது பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்குள் என்றால் 10000 ரூபாயும் தாழ்த்தப்பட்டவரை திருமணம் செய்து கொள்வோர்களுக்கு 20000 என்ற அளவில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் ஜாதிஒழிய வேண்டுமானால் ஜாதிஒழிப்புத்திருமணங்கள் பெருக வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாரியக்கத்தவர்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் எதையும் எதிர்பாராமல் ஜாதிமறுப்புத் திருமணங்கள் செய்து வருகின்றனர். இன்னும் சில பெரியாரியக்க குடும்பங்களில் ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் அந்தக்குடும்பங்களிலும் ஜாதிமறுப்புத் திருமணங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து நடைமுறைப் படுத்த வேண்டும் என்ப்து நமது வேண்டுகோள்களில் ஒன்று.

அடுத்து கொள்கை கோட்பாடுகள் எதுவும் அறிந்திராதவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களைப் பார்த்து மற்ற காதலர்களும் ஜாதிமறுப்புத்திருமணம் செய்யும் வகையில் கலப்புத்திருமண உதவிதிட்டத்தின் தொகையை தமிழக அரசு அதிகப்படுத்தி தர வேண்டும் என்பது நமது இரண்டாவது வேண்டுகோள்.


இந்த இரண்டு வேண்டுகோளையும் பெரியாரியக்கத் தோழர்களும், பெரியார் அரசாக செயல்பட்டுவரும் கலைஞர் அரசும் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ................ உழைப்போம்! உயர்வோம்!!

2 comments:

Thamizhan said...

பெங்களூருவில் ஆண்டு தோறும் ஒரு நாள் சாதி மறுப்பு மணமுடித்தக் குடும்பங்கள் ஒன்று கூடி விழாவாகவே கொண்டாடுகிறார்கள்.
இந்திய அளவிலே இந்தச் சாதி மறுப்பு வழிகள் கடைப் பிடிக்க அரசு மட்டுமன்றி அனைவருமே ஏதாவது செய்யலாம்.

தமிழ் ஓவியா said...

நல்ல யோசனை, தொடர்புடையவர்கள் நடவடிக்கை எடுத்து ஆவன செய்தால் நன்றாக இருக்கும். இது தொடர்பாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினால் நாமும் முயற்சி செய்யலாம். நன்றி.