நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தன்நிலை குறித்து, மத்திய சென்னை - மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் வெளியிட்ட அறிவிப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்தியில் ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 22.7.2008 அன்று நாடாளுமன்றத்தில் சந்திக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், ஆட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பேன்; தி.மு.க. கட்சிக்கும், தலைமைக்கும் விரோதமாக நான் ஒருபோதும் நடந்துகொள்ளமாட்டேன் என்று தி.மு. கழகத்தின் மத்திய சென்னைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் அவர்கள் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்ததை தாய்க்கழகமான திராவிடர் கழகம் வரவேற்று மகிழ்கிறது; பாராட்டுகிறது.
அய்யாவும் - அண்ணாவும் கூறியவை
அறிஞர் அண்ணா சொன்ன - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளிலிருந்து நழுவ மாட்டேன் என்று அவர் கூறியிருப்பது மிகவும் சரியானது.
நீர் அடித்து நீர் விலகாது என்பது பழமொழி. விலகக் கூடாது என்பது நியாயமும்கூட.
தி.மு.க. என்பதை அழிக்க வேறு எவராலும் (எதிரிகளால்) முடியாது; ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று 1969-இல் தந்தை பெரியார் அவர்கள் கூறிய அறிவுரை, காலத்தினால் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்! அது என்றும் பொருந்தும்.
தயாநிதிமாறன் தொடர்புடைய ஊடகங்களின் நிலைப்பாடு என்ன?
நண்பர் திரு. தயாநிதிமாறன் அவர்களது இந்தத் தெளிந்த நிலைப்பாட்டினை, அவர் தொடர்புள்ள ஊடகங்களும் பின்பற்றுவதை நடைமுறையாகக் கைக்கொண்டால், அவை நம் இன எதிரிகளுக்கும், அரசியல் அங்கலாய்ப்பாளர்களா கித் தி.மு.க.வை அழிக்க ஆசைப் படுபவர்களுக்கும் கருவிகளாகப் பயன்படக் கூடாத நிலை ஏற்படும்! அதன்மூலம் நாட்டில் நடைபெறும் கலைஞரின் நல்லாட்சியின் விழு மிய பயன்கள் மேலும் தொடர வழி வகுக்கும் என்ற வேண்டுகோளை யும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் அன்புடன் வேண்டு கோளாக விடுக்கிறது.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்!
அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல, நடந்தவை நடந்தவைகளாகட்டும்; இனி நடப்பவை நல்லவைகளாகட்டும்!
------------------ 21-7-2008 "விடுதலை" நாளிதழில் கி.வீரமணி(தலைவர்,திராவிடர் கழகம்) அவர்கள் விடுத்துள்ள அறிக்கை
0 comments:
Post a Comment