Search This Blog

10.7.08

சாவுக்குப் பின் வாழ்வு உண்டா?


2000 வருஷங்களுக்கு முந்தி, மோஸேசுக்கு அவர் கடவுள் தீப்பற்றி எரியும் புதரிலிருந்து கொண்டு பத்துக் கட்டளையைத் தனக்கு ஓதினாரென்று பைபிளில் எழுதியுள்ளதைக் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் நம்பி வருகின்றனர். இன்றைய தினம் மகாத்மா காந்தியும், கடவுள் தனக்கு சொன்னார் என்று சொல்வதற்கும் 2000 வருஷத்திற்கு முந்தி மோஸே சொன்னதற்கும் என்ன வித்தியாசம்? இதை நம்பினால், அதை ஏன் நம்பலாகாது? எல்லாம் மக்கள் நம்பிக்கையைப் பொறுத்தது. நமது தமிழ் நாட்டில், கற்களின் கடவுள் பிரசன்னமாகின்றார் என்று நம்பி கோயில்களுக்குச் செல்கின்ற அந்த மக்களும் தாங்கள நம்புவது உண்மை என்றே கருதிக் கற்களுக்கு வந்தனை வழிபாடு செய்கின்றனர். எந்த நம்பிக்கைக்கு அணை போட்டுப் பார்ப்பது?


ஆதிமனிதன் எண்ணி வந்தவாறு 50,000 வருஷங்களுக்குப் பின் வந்த அவர்களுடைய சந்ததியராகிய நாமும் - மனிதன் இறந்தபிறகு அவனது ஆவி உலகில் உலாவுகின்றது என்று எண்ணுகின்றோம்! பிரபல விஞ்ஞானியாகிய sir olivar lodgr அவர்களும், தனது குமா ரன் சுநஅனஅ என்றவர், இறந்த பிறகு அவருடன் சம்பாஷிப் பதாக எழுதுகின்றார். படிக்கத் தெரிந்த எங்கள் தாயும் எங்க ளுடைய தகப்பனார் உயிருள்ளபோது பிடித்த சுருட்டுகளைப் போன்ற சுருட்டு களை அவர் இறந்த கூடத்தில் வைத்து, 20 வருட காலம் படைத்து வந்தார்கள். ஆனால், தகப்பனார் பிடித்த சுருட்டைக் கரியாக்கியதை நாங்கள் பார்த்து வந்தோம். அவர் இறந்த பிறகு வைத்துப் படைத்த சுருட்டுகள் எங்கள் தாயைத் தவிர எந்த ஆவியும் கரியாக்கியதைப் பார்க்க வில்லை! எங்கள் தாயார் எண்ணமும், விஞ்ஞானியின் எண்ணமும் பல கோடி பாமர மக்களின் எண்ணமும் தமிழரசு கட்டுரை ஆசிரியர் தாஸ் குப்தாவின் எண்ணமும் ஒன்றே. ஆனால், என்னுடைய அனுப வம் வேறு. இறந்த பிறகு மனி தன் ஆவியாக ஜீவித்திருக் கின்றான் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால், அவ்வித மாக ஜீவிப்பதாக நம்ப போது மான சாட்சியங்கள் இல்லை என்பது எனது நம்பிக்கை. இவை இரண்டு நம்பிக்கைகளில் எதை நம்புவது என்பது தான் சங்கை?

இம்மாதிரிச் சம்பவங்களில் பார்த்தது ஒன்றாய் இருக்க, அதனை அர்த்தப்படுத்வது வேறாய் இருக்கலாம். கள்ளனை கட்டையில் பார்க்கின்றார்கள். கிளிஞ்சிலில் வெள்ளியைப் பார்க்கின்றார்கள். கானலை நீரென்று காண்கின் றார்கள். இந்த இடங்களில் பார்த்தது ஒன்று, அர்த்தப் படுத்துவது வேறு. கள்ளனையும், வெள்ளியையும், தண்ணீ ரையும் பாராதவனுக்குக் கட்டை, கட்டையாகத்தான் தோன்றும். அதுபோலவே பேய், பூதங்கள், ஆன்மா உயிர் ஆவி என்று கேட்டறியாத மக்களுக்கு இறந்த பிறகு ஆவி, உயிர், ஆன்மா தோன்றுவைப் பார்க்க மாட்டார்கள். திருஷ் டாந்திரம் வேண்டுமானால், வெகு தூரம் போக வேண் டியதில்லை. நம்முடன் கூடப் பழகி வரும் உயர்தர மிருகங் களாகிய நாய், குதிரை, குரங்கு, யானை முதலியவைகள் தங்கள் ஆவி ஆன்மா, பேய், பிசாசு காண்பதாகத் தெரியவில்லை. உண்மையாகவே ஆன்மா இருந்தால் நமக்குத் தோன்றும். ஆன்மா, அவைகளுக்கு ஏன் தோன்றாது?

மனிதனுக்கு திரேகமன்னில் வெறும் ஆவி ஒன்றுள்ளதோ? இல்லையோ? அது மாணவ நூலோருடைய ஆராய்ச்சி, விஞ்ஞான வகைகள் சுமார் இருபதுக்கும் மேல் இருக்கின் றன. பூத பவுதீகம், வைத்தியம், சுகாதாரம், வான ஆராய்ச்சி, உயிர் விஞ்ஞானம், உட்பிரிவு களாகிய முதலிய விஞ்ஞான வகைகள், என்னும் மாணவ விஞ்ஞானம் முதலிய விஞ்ஞான வகைகளில், பூத பவுதீக சக்தி களைத் தவிர வேறு எந்தவித ஆன்மா, உயிர், ஆவி உள்ளதாக தெரியவில்லை. ஆனால், பல கோடி சீவ அசீவப் பொருள் களில் மனிதனுக்கு மாத்திரந் தான். அவன் இறந்த பிறகு யாருக்கும் விளங்த ஆன்மா வொன்று சிறு பிள்ளைகளுக்கு மாத்திரம் ஏன் தோன்ற வேண் டும்.? தாஸ்குப்தா அவர்கள் ஒரு காலத்தில் இத்யாதி கதைகளை நம்பாத நாத்திகராக இருந்த வராம். ஆனால், தனது வீட்டுக் குழந்தையொன்று இறந்தபிறகு அதன் ஆவி 1922-இல் சில விரோத நடவடிக்கைகளைக் காட்டியதாம். இந்த நடவ டிக்கைகளை ஆராய்ச்சி செய்த வர்கள். பல படித்தவர்களும் உயர்ந்த அதிகாரிகளும், போலீஸ் சூப்பரின்டெண்டு களுமாம். அவர்கள் ஆராய்ச்சி யில் ஏற்பட்ட தம்மை ஆவி உல கத்தை நம்பும்படிச் செய்தன என்கிறார்.

அந்தச் சம்பவங்களாவன:

1. குழந்தைகளுக்கு மாத்திரம் அந்த இறந்த பெண்ணின் ஆவி தோன்றியதாம். மற்ற யார் கண்ணுக்கும் தென்படவில்லையாம்.

2. அந்தக் குழந்தையின் ஆவி நல்ல ஆபரணங்களுட னும், சேலைகளுடனும் குழந் தைகளோடு விளையாடினதாம்.

3. இதற்குப் பின்தான் அடுப்பு மறைந்ததாம். சாமான் கள் பறந்தனவாம். பல பண் டங்கள் வெளியில் வந்து கிடந்தனவாம்.

4. தனது தாயார் உபயோ கித்த அடுப்பு மாயாமாகக் காணாமற் போய் மாலையில் வந்து கிடந்ததாம். 5. போலீசார் விசாரித்துத் தங்களுக்கு ஒன்றும் புலப்பட வில்லை என்று சொன்னார் களாம்.

6. பிரம்ம ஞானக் கூட் டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் நான் கண்ட தோற்றங்களைக் கூறவும், அவர் மறு உலகத் திலிருந்தே ஒரு ஆவி செய்யும் காரியங்கள் என்றாராம்.

7. இதன்பிறகு மச்சு மேலிருந்து சில கடிதங்கள் அந்தச் சிறுகுழந்தை ஆவியிட மிருந்து வந்தனவாம்.

8. விஸில் செய்யும் பொம்மை ஒன்றை தாஸ்குப்தா அந்தச் சிறு குழந்தை ஆவிக் குப் பரிசு அளித்ததும், அந்தப் பொம்மை மேல் கிளம்பி விஸில் சப்தமும் கேட்டதாம்.

9. அந்த ஆவி மூலமாக, தனக்குத் தெரியாத எதிர்கால விசயங்கள் தெரியவந்தனாம்.
இந்த அற்புத விசயங்கள் உண்மைதானென்று துளசி தாசரும், பிரின்சிபால் யோகேந் திரநாத் மிஸ்ராவும் இன்னும் ஒருவரும் தாஸ்குப்தா சொல் லிய விசயங்களைத் தெரிவித் தனராம்.


----------ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: