Search This Blog

12.7.08

கேள்விகளும் புத்தர் அளித்த பதில்களும்



கேள்வி: நீங்கள் வேட்டை யில் கொல்லாமையை கூறு வது புலிகளுக்கு பயந்து தானே?

புத்தர்: நீங்கள் புலிகளைக் கொல்லப் போவதில்லை என்பதை அறிவேன். எவ்வகை தீங்கும் இழைக்க முடியாத மான்கள், முயல்கள் போன்ற விலங்குகளையே நீங்கள் கொல்லப் போகிறீர்கள்.

கேள்வி: உண்மையான உயர்வு எவ்விடத்தில் உருவாகும்?

புத்தர்: எங்கே அழிவு நேர்கிறதோ, எங்கே வெறும் உலகப் பொருள்கள்மீது பற்று உள்ளதோ, எங்கே புலனடக் கம் இல்லையோ அங்கே உண் மையான உயர்வைக் காண முடிகிறது.
கேள்வி: ஆசையே துன்பத் திற்கு காரணம் என்றால் மனி தர்கள் வாழ்வது எப்படி புத்தரே?
புத்தர்: அடிப்படைத் தேவை கள் எல்லாம் ஆசைகள் ஆகாது. தன்னுடைய தேவைக்கு மீறி அடுத்தவனுடைய தேவையை திருடுகிற அந்த பேராசை இருக்கிறதே அந்த ஆசையைத் தான் துன்பத்திற்கு காரணம் என்றேன்.

கேள்வி: யாகத்தின் மீது நம்பிக்கையில்லையா?

புத்தர்: எதிர்கால விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒரு திக்கற்ற உயிரைக் கொல்வது - கருணையுள்ள நல்ல இதயம் கொண்ட மனிதனுக்கு நினைத்துப் பார்க்கவே முடியாத செயல்.

கேள்வி: யாகங்கள் அடுத்தப் பிறவிக்கு வழிகாட்டுவது பற்றி?

புத்தர்: ஒரு மனிதன் இந்த உலகில் பெறுகின்ற இன்பம் - அறிவும், பரிவும் உள்ள இதயத் திற்கு வெறுப்பைத் தருவதென் றால் நம் பார்வைக்கே புலப் படாத அடுத்த உலக வாழ்க் கைக்காக உயிர்களைக் கொல் லுவது எத்தனை பெரிய வெறுப்புக்குரியது.

கேள்வி: வேதங்களையும் மந்திரங்களையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புத்தர்: வேதங்கள் பாலை வனம் போல் பயனற்றவை. மந்திரங்கள் நாம் கற்பதற்கும், பின்பற்றுவதற்கும் தகுதியற்ற வைகள். அதேபோன்று வேத ரிஷிகளின் தத்துவங்களிலும் ஒன்றுமே இல்லை. அவர்கள் எல்லாம் இல்லாத உண்மையை இருளில் தேடியவர்கள்.
ஒருக்காலும் அதை அடைந்ததே இல்லை.

கேள்வி: பிராமணிய வேதங்கள்பற்றி?

புத்தர்: பிராமணியத்தின் முதல் கொள்கையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். வேதங்கள் குறையற்றவை என்றும், அவற்றின் அதிகாரப் பூர்வ தன்மையை எப்போதும் விமர்சிக்கக் கூடாதென்றும் கூறப்படுவதை நான் கடுமை யாக எதிர்க்கிறேன்.

கேள்வி: மனிதன் பிரம்மாவிலிருந்து படைக்கப்பட்டான் என்பதுபற்றி?

புத்தர்: மனிதனை ஒரு கடவுள் படைத்தார் அல்லது அவன் யாரோ பிரம்மாவின் உடலிலிருந்து வந்தான் என் னும் கொள்கையை மதிக்கா மல் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

கேள்வி: உண்மைச் சமயம் என்றால் என்ன புத்தரே?

புத்தர்: என்னைப் பொறுத்த வரையில், உண்மைச் சமயம் என்பது எழுதி வைத்த மத நூல்களில் இல்லை. மனிதர் கள் நடைமுறைப்படுத்தும் கொள்கைகளிலே உண்மைச் சமயம் உருவாகும்.

கேள்வி: நீங்கள் தீர்க்க தரிசியா? கடவுளின் தூதரா?

புத்தர்: இல்லை, நான் ஒரு போதும் என்னை தீர்க்கதரிசி என்றோ, கடவுளின் தூதர் என்றோ அறிவித்துக் கொள்ள மாட்டேன். அத்தகைய எண்ணங்கள் தான் சாதாரண மனிதனின் தன்னம்பிக்கை யைக் குலைக்கிறது.

கேள்வி: புத்தரே, அகிம் சையை போதிக்கின்ற நீங்கள் ஆயுதங்களே எடுக்கக் கூடாது என்று கூறுகிறீர்களா?

புத்தர்: அகிம்சைப் போரை விட வன்மையானது ஆதிக்கத் திற்கான போர்க் கொலை. ஆனால் உரிமைக்கான போர் கிம்சை.
நான் தன்னைத்தானே அடக்கச் சொன்னேனே தவிர, தன்னை அடக்குபவனுக்கு அடங்கிப் போகச் சொல்ல வில்லை. உயிர்வதைகூடாது என்று சொன்னேனே தவிர, தன்னை வெட்ட வருபவனுக்கு தலையை நீட்டச் சொல்லவில்லை.

கேள்வி: புனிதங்கள்தான் தீண்டாமையை உருவாக்கு கின்றனவா?

புத்தர்: ஆம். ஒரு பொருள் அல்லது நம்பிக்கை புனித நிலையை அடைந்தவுடன் அது மீறக்கூடாததாக மாறு கிறது. உண்மையில் பார்த்தால் அதுவும் தீண்ட முடியாத தாகிறது. அதுவே தீண்டா மைக்கு வழி வகுக்கிறது.

கேள்வி: பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது உண்மையா?
புத்தர்: யாரொருவனும் பிறப்பினால் ஒதுக்கப்பட்டவனும் அல்ல, யாரொருவனும் பிறப்பினால் பிராமணனும் அல்ல.

கேள்வி: புத்தரே, சாதியால் நடக்கின்ற வன்கொடுமைகள் பற்றி?

புத்தர்: யாரொருவன் கிராமங்களையும், குக்கிராமங் களையும் முற்றுகையிட்டு அழிக்கிறானோ, எவன் ஒருவன் நெஞ்சில் ஈரமில்லாமல் ஒடுக்குமுறை செய்கிறானோ, அவன்தான் இந்த சமூகத்தி லிருந்து ஒதுக்கப்பட்ட வேண்டியவன்.

கேள்வி: புத்தரே, நீங்கள் எத்தனை வயது வரை சங்கத்தில் பணியாற்றினீர்கள்?

புத்தர்: என் உடல் ஓடாத வண்டியாய் முதுமையடையும் பொழுது எனக்கு வயது 80. அதுவரை நான் சங்கத்தில் பணியாற்றினேன்.


-------------------- "கேள்விகளும் புத்தரும்" - என்ற நூலிலிருந்து..

1 comments:

வனம் said...

வணக்கம் ஓவியா

ரொம்ப நாளாக நான் தேடிக்கொண்டிருந்த விஷயங்கள் கிடைத்தன.

எனக்கு புத்தரை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
தங்களுக்கு தெரிந்த புத்தகங்கள் மற்றும் இணைய தொடுப்புக்கள் ஏதேனும் இருந்தால் தர இயலுமா

நன்றி