Search This Blog

24.7.08

பெரியார் நுட்பமான பகுத்தறிவை மனித குலத்திற்கு அளித்ததனித்துவம் வாய்ந்த தலைவர்



உலகுக்கே வழிகாட்டும் பெரியார் தத்துவம் வியக்கும் கனடா கவிஞர்

அண்மையில் கனடா நாட்டுக் கவிஞர் டாம் மெக்காலே (Tom McGauley) தனது ஆய்வுப் பணிகளுக்காக சென்னை வந்திருந்தார். இந்தியா பற்றியும் பெரியார் பற்றியும் நிறைய அறிந்து வைத்திருக்கும் அவருடன் ஒரு நேர்காணல்.

கேள்வி: டாம் உங்களைப் பற்றிக் கூறுங்கள்...

பதில்: நான் கனடாவின் வேன்கூவர் மாநிலத்தைச் சேர்ந்தவன். அங்கு ஒரு சிறிய வட இந்திய குழுவுக்கு பெரியார் படத்தை திரையிட்டபின் ஆய்வுகள் பலவற்றை முடித்து, பெரியாரின் பாதை சிறந்தது என்று முடிவெடுத்து, பெரியார் பிறந்த மண்ணை நோக்கி வந்துள்ளேன். பெரியார் திடலில் உயிரோட்டம் உள்ள பெரியார் கொள்கை பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோல ஆய்வுகளை மேற்கொண்டு பெரியாரை நுண்ணறிவு கொண்டு ஆராய்ந்து, படிப்பது போன்றவற்றை மேற்கொள்ள முற்பட்டுள்ளேன்.

பெரியார் பற்றி சிறிது படித்திருந்தாலும், வரலாற்றை புரட்டினால், இந்திய துணை கண்டத்தில் நாளும் ஆரிய திராவிட போர்தான். அமெரிக்கா மற்றும் அங்கு வாழ் மக்களுக்கும் இந்தியா என்றால் மகாத்மா காந்தியை மட்டுமே நினைவுக்கு வரும் தருணத் தில், அவரைவிட மிகவும் முற்போக்கான சமுதாய விழிப்புணர்வூட்டிய பெரியாரை ஆராயவும், இந்திய வரலாற்றில் பெரியாரின் அடையாளத்தை கண்டறியவும் திராவிடர்களின் வரலாற்றில் பெரியாரின் முத்திரை பல்வேறு கருத்து மோதலுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் மேலோங்கி நிற்கும் பெரியாரை நினைக்கும்போது ஆழமான தொடர்பு ஏற்படுவது இயற்கையே.

கேள்வி: இந்திய வரலாற்றில் பல தலைவர்களின் தியாகமும் உழைப்பும் மறைக்கப்பட்டிருப்பதாக நீங்களும் நினைக்கிறீர்களா?

பதில்: வெளி உலகத்துக்கு மேலை நாடுகளுக்கு காந்தி ஒரு பெரிய தலைவர். அவருடைய உயர்ந்த கருத்துக்களான அகிம்சை, தீண்டாமை அவருடைய மன வளம்,ஆங்கிலேயரை எதிர்த்து போரா டும் தன்மை, வெள்ளைக்காரனுக்கு அது ஒரு உட்டோப்பியன் மாதிரியாக இருந்தாலும், மகாத்மா காந்திக்கும் பின்னடைவுகள் உண்டு. பின்னாளில் பிரிவினை, முஸ்லிம் இனக் கலவரங்கள். ஒரு பிற்போக்கு மதம் கொண்டு அவர் தேடிய தீர்வுகள் மத்தியில் பெரியார் தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்கால சிந்தனையுடன் சமூக நெகிழ்வுகளை முன்னிறுத்தி பகுத்தறிவுவாதிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் தனித்து காணப்படுகிறார். அவர் சமத்துவ, சகோதரத்துவ மனித நேய கோட்பாடுகளில் சமுதாய தளத்தில் போராடும் தனித்துவம் பெற்ற தலைவர். வெளிநாட் டிற்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள வட மாநிலங்களிலும் பெரியார் மேலோங்கி தெரியவில்லை. நான் வேன்கூவர் மாநிலத்தில் பெரியார் திரைப்படத்தை காண்பித்தபோது பெரியாரைப் பற்றி சிறிதளவு தெரிந்திருப்பவர்கள் படத்தை பார்த்த பின் அவரை பற்றி மேலும் அறிய ஆவலும், தென்னகத்தை பற்றி மேலோட்டமான பார்வை இருப்பதைக் கண்டு பெரியாரைப் பற்றிய அறியாமை காரணத்தினால் வருந்தினர். இந்திய வரலாற்றில் காந்திக்கு நிகரான காந்தியை விட மேலும் முற்போக்கு பாதையில் பயணம் செய்ததில் பெரியார் காலத்தின் கட்டாயம்.

அறிவு சார்ந்த புரட்சிகரமான தலைவர்களில் பெரியார், சாக்ரடீசைப் போன்றவர். பெரியார் படத்தில் சாக்ரடீஸ் சிலை முன்பு பெரியார் கூறிய வாசகங்கள் என்னை உணர்ச்சி வயப்படச் செய்தது. பெரியார் சமூக புரட்சி செய்த போது பல நிலைகளில் சிக்கிக் கொள்ளவில்லை. தன் திறமையால் அரசியலில் ஈடுபடாமல், சமுதாய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டவர். உலக வரலாற்றில் சமுதாய சீர் திருத்த சமத்துவ கொள்கைக்காக பாடுபட்ட வர்கள் ஒன்று இராணுவ தீர்வையோ அல்லது தனி சர்வாதிகாரச் சிறையில் தாங்களே சிக்கிக் கொண்டார்கள். ஆனால், பெரியார் நுட்பமான பகுத்தறிவை இந்த மனித குலத்திற்கு அளித்த ஒரு தனித்துவம் வாய்ந்த தலைவர். அவரை தமிழ்நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ ஒரு குறுகிய வட்டத்தில் அடைக்க முடியாது. அவர் ஒரு ஆசான், சர்வதேச திறமை வாய்ந்த மாபெரும் ஆசான்.

கேள்வி: இப்போது உலகத்தில் மதத்தினால்தான் பிரச்சினை. அது புனிதப் போராக இருக்கட்டும்; ஜிகாத் போராக இருக்கட்டும்; போர்கள் மதத்தை நிலைநாட்ட கடும் மனித சேதத்தை ஏற்படுத்தியது. பொருள் சேதம் நடந்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் பெரியார் ஒரு சர்வதேச தீர்வாக இருப்பாரா?

பதில்: பிராந்தியத்தில் பெரியாரின் செயல் வடிவங்கள், நுணுக்கங்கள், உறுதி குலையாத பகுத்தறிவு, பழமைக்கு எதிரான போக்கு, மதவாதிகளுக்கு எதிரான நிலை ஆகியவற்றை லெனின், ட்ராஸ்கி போன்ற புரட்சியாளர்கள் எடுத்திருந்தாலும், பெரியாரின் பகுத்தறிவு மேலோங்கி நிற்கிறது. நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருந்தது. இதை உலகில் பார்ப்பது மிகவும் அரிது. பெரியாரின் பாரம்பரியம் ஒரு மதத் தத்துவத்தைப் போல் ஒரு குறுகிய வட்டத்துக் குள் அடங்கி விடாமல், விரிந்து பயணம் செய்யும் தத்துவமாக விளங்குகிறது. பெரியாரின் தத்துவம் ஒரு புரட்சிகரமான தத்துவம். இந்த கால சூழலுக்கு தேவையான தத்துவம். முன்னேற்றப் பாதையில் செல்ல வைக்கும் தத்துவம். மனிதநேய தத்துவம். அத்தத்துவத்தை இந்த உலகம் பயன் படுத்துவது மிகவும் கடினம். அதனால்தான் பெரியாரை ஒரு சிலையாகவோ பெரியாரின் தத்துவம் மற்ற மதத் தத்துவத்தைப் போல இல்லாமல், இறுக்கப்படாமல் இயற்பியல் தத்துவமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது.

பெரியார் ஒரு நாட்டை நடத்த மக்களாட்சி முறையால் மட்டும் முடியாது. அது ஒரு கொள்கை அடிப்படையில்தான் செயல்பட முடியுமென்று ஆட்சியில் பங்கு வகிக்காமல் வெளியில் நின்று போராடினார்.

அவர் நடத்திய கொள்கை பிரச்சாரமும், கலாச்சார புரட்சியும், அவர் சிந்தனையின் வெளிப் பாடே. அதனால்தான், எழுத்திலும் அப்போதிருந்த ஊடகங்கள் அவரைச் சூழ்ந்தே இருந்தனர். தற்போதைய உலகில் பெரியார் இருந்திருந்தால் இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தை பயன் படுத்தி பிரச்சாரம் செய்வதில்கூட வல்லமை மிக்கவராக திகழ்ந்திருப்பார். பெரியார் அவர்கள் அரசியலில் பங்கு கொண்டிருந்தால், சிக்குண்டு இருப்பார். அதை அவர் நன்கு அறிந்திருந்ததால் பகுத்தறிவு நுட்பத்தைக் கொண்டு வரலாறு காணாத சமூக சீர்திருத்தத்தை அளிக்க முடிந்தது. நேருவும் காந்தியும் இந்திய மாதிரி. அரசாட்சி செய்வதற்கு முன்னுதாரணமாக சொல்லப்பட்டாலும், பெரியாரின் சமூக அமைப்பு சிந்தனை இவர்களைவிட எழுச்சிமிக்க, புரட்சிகரமான, முன்னேற்றகரமான சிந்தனை உடையது. ஆதலால், அரசியல் தலைவர்களை விட வேறுபட்டு நிற்கிறார் பெரியார். அவரை எதிர்ப்போர்களுக்கு அவர் கடும் எதிரி. மட்டுமல்ல, எதிரிகளே விருப்பப்படும் எதிரி. பெரியார் எதிர்த்த பிராமணிசம் நிறுவன மயப்படுத்தப்பட்டது. 150, 200 வருடமாக பிரிட்டிஷ்சார் ஆட்சி செய்தார்கள். பிராமணர் கள் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று எப்போதுபோல அவர்கள் சகஜமாக இருந்தார்கள். பெரியார்தான் யார் நிரந்தரமான எதிரி என்று அடையாளம் காட்டினார். இன்றைய நடப்பு அவரது அப்போதைய பார்வையை நியாயப்படுத்துகிறது.

கேள்வி: நீங்கள் இந்தியாவுக்கு பெரியாரை ஆய்வு செய்வதற்கு வந்துள்ளீர்கள். உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்: முதலில் எனக்கு ஒரு சுயநல நோக்கு இருந்தது. உலகம் முழுவதும் இந்தியாவை ஒரு தெய்வீக நாடாக அறிந்திருப்பது ஒரு நோயாகவே உள்ளது. இந்நோயை வீழ்த்துவதற்கு பெரியார் எனக்கு ஒரு அருமருந்தாக இருக்கிறார். இந்தியாவை ஒரு வேதாந்த நாடாகவும், ஆஸ்ரமமாகவும், சுயநல போக்கு உடையவர்கள் இந்து மதம் சார்ந்த சித்தாந்த கருத்துகளை தாங்கி நிற்கும் சூழலில் பெரியாரைப் படித்த பின், அவரைப் பயன்படுத்தி இது போன்ற கருத்துகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெரியாரின் பகுத்தறிவு ஒரு நுட்பமான திறவுகோல், மடமை, முட்டாள்தனம் நிறைந்த, மதம் சார்ந்த சித்தாந்த மாயையை மூடியிருக்கும் கதவுகளைத் திறந்த அந்தத் திறவு கோல்தான் ஒரே வழி.

அன்னை தெரசா சேவை மனப்பான்மை கொண்டு, தொழு நோயுள்ளவர்களுக்கு சேவை செய்தார். மகாத்மா காந்தி அகிம்சை பாதையில் ஆங்கிலேயரை விரட்டி அடித்தார். ஆனால், பெரியார் பகுத்தறிவு கொண்டு, நுண்ணறிவு கொண்டு அறியாமையில் மூழ்கியிருக்கும் மக்களை விடுவித்தார்.

நான் என் மண்ணிற்கு சென்ற பிறகு, பகுத்தறிவு கருத்துகளை கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து பெரியாரின் வழியில் பகுத் தறிவு சங்கிலியை உருவாக்கிட செயல்படுவேன்.
“South East Asian Film Chamber Society” இல் பெரியாரின் படத்தை திரையிடுவது, மற்றும் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பெரியாரின் கருத்துகளை பரப்பி இளைஞர் களை ஒருங்கிணைக்கும் தசையாக (Tissue) இருப்பேன். இந்தியாவை ஒரு இருண்ட, மதம் சார்ந்த அறியாமையில் திகழும் நாடு என்ற வெளிநாட்டாரின் கருத்தை மாற்றி இது ஒரு அறிவியல் சார்ந்த, மடமை சார்ந்த, புரட்சிகர மான பெரியாரின் மண் என்று உணர்த்த முற்படுவேன்.

கேள்வி: புத்தர்கள், சாக்ரடீஸ் போல் பெரியாரிஸ்ட் என்பது உலகம் முழுவதும் ஒரு இணைப்பு ஏற்படுத்துவது சாத்தியமா?

பதில்: இது மிகவும் சாத்தியமே. அது காலத்தில் கட்டாயமும் கூட. உலகம் தகுதி வாய்ந்த ஒரு தலைமைக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறது. அந்தத் தலைமை பெரியாரின் கொள்கை கொண்டே அமையும். இந்தியா பொருளாதார அடிப்படையில் ஒரு முன்னிலை நாடாக அமையப் போவதைப் பார்க்கிறோம். ஆனால், உலகம் இந்தியாவை கிரிக்கெட்டைக் கொண்டு, அமிதாப்பச்சன், ரஜினிகாந்த்தைக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறது. நான் படித்த பல்கலைக் கழகத்திலிருந்து சென்னையில் உள்ள ஒரு அய்.டி. உலகத்துடன் தொடர்பு கொண்டு மகிழ்கிறேன். ஆனால், என் நாட்டிலுள்ள அறிவு சார்ந்தவர்கள், வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்கள் இந்தியாவை அறிவு சார்ந்த பார்வையில் பார்க்கும் போது எதைப் பார்க்கிறார்கள்? அவ்வாறு அறிவு சார்ந்தவர்கள் இந்தியாவை பெரியார் வழியாக பார்ப்பதன் மூலம் தான் இந்தியாவின் புரட்சிமிக்க, பகுத்தறிவு கொண்ட மறுபக்கம் வெளிவரும். பாலிவுட்டிலோ, பச்சன்களிலோ அறிவு சார்ந்த கருத்துகளை அவர்கள் எதிர் பார்க்க முடியாது.


கேள்வி: இந்தியாவில் படிப்பறிவிற்கும், பகுத்தறிவிற்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. படிப்பறிவே பகுத்தறிவுக்கு மூலதனம் என்ற நிலை மாறி இங்கு படிப்பறிவு பணம் சேர்க்கவும், பகுத்தறிவு புறக்கணிக் கப்படுவதைக் காண்கிறோம். இவ்வாறான நிலைமை அங்குள்ளதா?

பதில்: ஆம். இப்போது உலகம் ஒரு பயங்கர மான பாதை நோக்கிதான் சென்று கொண்டிருக் கிறது. டெக்னாலஜி மனிதர்களை இயந்திரங்க ளாக மாற்றும் போது பெரியாரைப் போல கேள்வி கேட்கும் தன்மை, சுயசிந்தனை போன் றவை குறைகிறது. சாஃப்ட்வேர் காரணமாக சுயநலப் போக்கு, மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவை உயர்ந்து காணப்படுகிறது. நான் வேன்கூவரில் கண்ட வட இந்தியர்களில் பெரியார் படத்தை கண்டவுன் இந்திய நாட்டில் ஜாதி ஒழிக்கப்பட்டதாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஜாதி ஒழிப்பு முறை, போற்றப்பட்டதாகவும் கூறினர். இன்னும் மதுரையிலும், சிதம்பரத்திலும் தீட்சிதர் பிரச்சனைகளிலும் ஜாதியே மூலக் காரணமாக இருப்பதை பார்க்கவில்லையா? பெரியாரின் தொண்டர்கள் மூலமாக முதல்வர் கலைஞர் அதற்கு தீர்வு கண்டதை காணவில்லையா? உலகத்தில் ஜாதி கொடுமைகள், மதவாத கருத்துகள் இருந்து கொண்டேதான் இருக் கிறது. எனவேதான் அதற்கு பகுத்தறிவு கொண்ட படிப்பறிவு மிகவும் அவசியமாகப்படுகிறது.

-------------- நன்றி - "உண்மை" ஜூலை 16-31 2008

0 comments: