Search This Blog
31.7.08
இவர்தாம் பெரியார்
சிவந்தமேனி, தடித்த உடல், பெருத்த தொந்திம் நல்ல உயரம், வெளுத்த தலை மயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்து மயிரடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி.
பெசண்ட் அம்மையாரின் தலைமயிர், பர்னாட்ஷாவின் தாடி, தாகூரை விட அழகான மூக்கும், இவர்கள் இருவரையும் விட அழகான உருண்டை முகம், ஒரு தனியான முக வெட்டு, என்னமோ ஒரு விதமான கவர்ச்சி.
இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத் துணி, காலில் செருப்பு. முக்கால் கையுடன் ஒரு மாதிரியான வெள்ளைச் சட்டை. அதில் வரிசையான நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுக் "கோட்டு"க்கும் இக்காலத்து சட்டைக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு, வெளிப் புறத்தில் மூன்று பாக்கட்டுகள். உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒரு பாக்கட். வெளிப்பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள், இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒரு சிறு கத்தி-ஆகிய சகல சாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிக்கொண்டே இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு பவுண்டன் பேனா சொருகப்பட்டிருக்கும். உட்புறப் பையில் ஒரு மணிப்பர்ஸ். அதன் அறையொன்றில் ஒரு கடிகாரம்.
இவ்விதமான சட்டைக்கு மேல் போர்த்தியிருப்பது ஒரு ஐந்து முழப் போர்வை. அநேகமாக ஆரஞ்சு அல்லது காப்பி நிறத்தில். இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும். சட்டைப்பைகளின் ஓரங்கள் அடிக்கடி கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமான தடி. பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும்.
கையில் ஒரு தோற்பெட்டி. அதற்கு பூட்டுமில்லை; சாவியுமில்லை. மிக அந்தரங்கமான சொந்த கடிதங்கள் முதல், பழைய செய்தித்தாள்கள், பட்டையாக நசுக்கப்பட்ட பற்பசை, மிக பழைய பல் ப்ரஷ், மைப்பெட்டி, சோப், கடிதத்தாள், உறைகள் வரையில் எல்லாம் இப்பெட்டிக்குள் தான். சட்டைப் பைகளில் உள்ள குப்பைகள், ஏதாவது ரிக்கார்டுகள் மிகுந்துவிட்டால், அவைகளில் சில இப்பெட்டிக்குள் வந்துவிடும். இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஒரு முறை பெட்டி மூட முடியாமலே மாட்டிக் கொண்டால், இப்பெட்டி காலி செய்யப்படுவதுண்டு.
இம்மாதிரி உருவத்தோடும், உடையோடும், வாலிப நடையோடும் கையிற் பிடித்த தடியுடன் இதோ தெரிகிறாரே, இவர் தான் பெரியார். தமிழரின் தலைவர். ஈரோட்டு இராமசாமியார்.
------------------- சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்ற நூலிலிருந்து.
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//இவர் தான் பெரியார்.//
தமிழ் ஓவியா,
ஆமாங்க இவர் தான் பெரியார்.இந்த ஆளிடம் பெரிதாக என்ன இருந்தது என்று ஆராய்ந்த போது தோன்றியவை.
1) பெரிய தொந்தி(ஓசியில் சாப்பிட்டு உழைக்காமல் வஞசமில்லாமல் வளர்ந்த வயிறு)
2) தாடி.வருஷக் கணக்காய் தண்ணி பார்க்காத,காஞ்சிப் போன,நாத்தமடிக்கும் தாடி.
இவை தவிர,பெரிய அளவில் அயோகயத்தனம்,கஞ்சத் தனம்,பொறிக்கித்தனம் இவரிடம் பொங்கி வழிந்ததால் மகிழ்ச்சியுற்ற குஞ்சுகள் இந்த மூஞ்சியை பெரியார் என்று போற்றுவதில் வியப்பில்லையே.
பொறுக்கி பாலாவுக்கு நாகரிகமா பதில் எழுதினா புரியாது போல. பார்ப்பானுக்கு பொறுக்கித்தின்னே (பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் தர்மம்) பழக்கமாய்டுச்சு.அதனாலதான் பொறுக்கித்தனமா பின்னூட்டம் போட்டு நம்மைச் சீண்டிப்பார்க்கிறான்.
குறைக்கிற நாய் கடிக்காதுங்கிறது நம்ம ஊர் சொலவடை.
தெருவில் சுத்தும் தெருநாய்களுக்கு என்ன மரியாதையோ அந்த மரியாதைதான் பொறுக்கித்தனமா குரைக்கும் இந்த ..............களுக்கும் கொடுக்க முடியும்.முடிந்தால் அந்த நாய்களுக்கு கொடுக்கும் சிகிச்சையை இதுகளுக்கும் கொடுத்தால் ஒருவேளை புத்தி வந்தாலும் வரும்.
Post a Comment