Search This Blog

23.7.08

பிள்ளையார் சுழி வந்த வரலாறு



ஆத்மா என்று இருக்கின்றது. அது மேலே அலைந்து கொண்டிருக்கின்றது. நாம் சொன்னவுடனேதான் கூட்டுக்குள் போகிறது என்பது அல்ல. தந்தை பெரியார் கேட்டார்:

அலைவதற்கு என்ன இருக்கிறது?

என்ன செத்துப்போன பிற்பாடு மனிதனை எரித்து விடுகிறான், புதைத்து விடுகின்றான். ஒரு மனிதனை புதைத்து, எரித்த பிற்பாடு அலைவதற்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே கிடையாது.

நீங்களே சொல்லுகிறீர்கள். மோட்சத்திற்குப் போய்விட்டார், நரகத்திற்குப் போய்விட்டார் என்று. அதுமாதிரி இருக்கும் பொழுது வைதிகர்கள்கூட என்ன நினைக்கின்றார்கள். கடவுளை நம்பக் கூடியவர்கள்கூட என்ன நினைக்கின்றார்கள்? மதத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள்கூட மேல் லோகம், கீழ் லோகம் என்கிற மாதிரி வைத்துக் கொண்டு விபூதி பூசுகிறவர்கள், நாமம் போடுகிறவர்களை வைத்து கணக்குப் போட்டுக் கொண்டு அச்சாபீஸ்காரரே பதவி கொடுத்துவிடுகின்றார்.

உத்தரகிரியை பத்திரிகை உத்தரகிரியை பத்திரிகை என்று போடுவார்கள். இப்பொழுது தான் தமிழில் வார்த்தையைப் போட்டு அடிக்கின்றார்கள். இதற்கு முன்பு உத்தரவும் தெரியாது, கிரியையும் தெரியாது. உத்தரகிரியை பத்திரிகையை அடிக்கும் பொழுது அச்சாபீசில் கூட இன்னமும் அந்த பத்திரிகையின் மூலையில் அவர்களே ஒரு கருப்புமையை வைத்து அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். மூடநம்பிக்கை என்பதற்கு உதாரணம் இதைவிட வேறு ஒன்றுமில்லை. அச்சாபீஸ்காரரே நடத்தும் மூடநம்பிக்கை


காலம் காலமாக அச்சாபீசில் இப்படி அச்சடித்து கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது எப்படி வந்தது? நம்மாட்களுக்கு அந்த காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாது. அய்ம்பது அல்லது எழுபது , நூறு வருடத்திற்கு முன்னாலே, கிராமங்களில் எங்கேயாவது தந்தி வந்தது என்றால், என்ன செய்வார்கள்? கிராமத் தோழர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள்.

கிராமங்களில் மூன்று மைல், அய்ந்து மைல்களுக்கு அப்பால் தந்தி கொண்டு வந்து கொடுத்தாலே, எல்லா தாய்மார்களும், வயதான தாய்மார்கள் வரை அழ ஆரம்பித்துவிடுவார்கள்.

தந்தி வந்திருக்கிறது, தந்தி வந்திருக்கிறது என்றால் ஓகோ, யாரோ செத்துப் போனார்கள் என்பது அதற்கு அர்த்தம். தந்தியில் பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சி அடைய வேண்டிய விசயம் கூட இருக்கும்.

தந்தி என்றாலே பயப்பட்ட காலம்

தந்தி வந்தாலே அந்தக் காலத்தில் அப்படிப் பயப்பட்டார்கள். ஒரு சிலருக்குத்தான் தந்தி கொடுக்கக் கூடிய சக்தி அந்தக் காலத்தில் இருந்தது. ஆனால், பல பேருக்குக் கடிதம் எழுதுவது தான். ஆனால் எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயம். கிராமத் திற்கு தபால் போகும்பொழுது அவர்களுக்குப் புரிந்துகொள்ள வேண்டுமே. அது அவசர தபாலா, அல்லது மகிழ்ச்சிக்குரிய தபாலா அல்லது ஒன்றுமில்லாத முக்கியத்துவம் இல்லாத தபாலா என்று தெரிந்து கொள்வதற்காக என்ன செய்தார்கள்? ஊருக்கு ஒரு வாத்தியார்தான் படித்தவராக இருப்பார். பள்ளிக்கூடம் மூன்று மைல், நான்கு மைல்களுக்கு அப்பால் இருக்கும்.

அந்த இடத்திற்கு கொண்டுபோய் இந்த கடிதத்தைக் கொடுத்து என்ன இருக்கிறது என்று பார்ப்பார்கள். அதற் காகத்தான் கடிதத்தின் மூலையில் கறுப்பைத் தடவினால் துக்க கரமான செய்தி என்று காட்டுவதற்காகவும், மஞ்சள் நிறத்தைத் தடவினால் மகிழ்ச்சியான செய்தி என்று தெரிந்துகொள் வதற்காகவும் அந்தக் காலத்தில் இப்படிப் பயன்படுத்தினார்கள்.

ஓலைச் சுவடியில் கிறுக்கியதைக்கூட பிள்ளையார் சுழி ஆக்கிவிட்டான்

நம்மாட்கள் அந்த காலத்தில் ஓலைச் சுவடியில் எழுதும் பொழுது எழுத்தாணி எழுதுகிறதா? இல்லையா என்று பார்ப் பதற்கு இரண்டு கிறுக்கு கிறுக்கினான் ஓலைச் சுவடியின் மேலே.

அது வழி வழி பழக்கமாக வந்து பிள்ளையார் சுழி என்று ஆக்கிவிட்டார்கள். அச்சாபீசில் அச்சடிக்கிறவன் முதற்கொண்டு கம்ப்யூட்டரிலேயே அப்படி அடிக்க ஆரம்பித்துவிட்டான். எதற்கு அடித்தான். இதற்கு இப்படி போடுகிறான் என்பது நம்மாட்களுக்கு தெரியாது.


------------------ கி.வீரமணி -"விடுதலை" 21-7-2008

0 comments: