Search This Blog

20.7.08

புரட்சி என்பது உலகின் நியதி!





`புரட்சி என்பது உலகின் நியதி; மனித சமுதாய முன்னேற்றத்தின் இரகசியம். மக்களுக்காக மக்களால் புரட்சி என்பதை, தொழிலாளர்கள் விவசாயிகள் ஒரே அணியில் திரட்டப்பட்ட ஒரு ஸ்தானபத்தின் மூலம் மட்டுமே பெற முடியும்.

புரட்சிவாதம் என்று நான் சொல்வது கையில் வெடிகுண்டு களுடனும் துப்பாக்கிகளுடனும் அலையும் மனிதனை என்று அர்த்தமாகாது.

பயங்கர நடவடிக்கைகள் என்பது புரட்சியின் போக்கில் தவிர்க்க முடியாத அவசியமான ஒரு கட்டம். பயங்கர நடவடிக்கைகள் என்பதே ஒரு முழுமையான புரட்சியாகி விடாது. ஒரு புரட்சியின் பணிகளை அது சாதித்து விடாது.

ஆனால் எந்தப் புரட்சியும் பயங்கர நடடிக்கைகள் இன்றி முழமை பெறுவதில்லை என்பது ஒவ்வொரு புரட்சியின் வரலாறும் போதிக்கும் பாடமாகும்.
பயங்கர நடவடிக்கையின் பலன் இதுதான்.

யாராலும் தன்னை அசைக்க முடியாது என்று அரசுகள் ஏகறபடுத்தி வைத்திருக்கின்ற ஒரு மலைப்பை, ஒரு பிரமிப்பை, ஒரு மனத் தோற்றத்தை அது சுக்குநூறாக உடைத்து - சின்னாமாக்கும்.

-------------------- பகத்சிங்

3 comments:

தியாகு said...

"யாராலும் தன்னை அசைக்க முடியாது என்று அரசுகள் ஏகறபடுத்தி வைத்திருக்கின்ற ஒரு மலைப்பை, ஒரு பிரமிப்பை, ஒரு மனத் தோற்றத்தை அது சுக்குநூறாக உடைத்து - சின்னாமாக்கும்."

புரட்சி என்பதின் முழு பொருள் இவ்வரிகளில் இருக்கின்றது

புரட்சி தமிழன் said...

புரட்சி என்பது ஒன்றை விரைவாக பெறுவது அல்லது செய்வது எதிர்ப்புகளை சமாலித்து விறைந்து வெற்றியிலக்கை நோக்கிச் செல்வது இதுதான் புரட்சி எனப்படும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கவும்.