Search This Blog

20.7.08

விபீஷணர்களுக்கு ஒரு கேள்வி

இராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ளதாம் கோதண்டராமன் கோயில். இங்கே விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றதாம். ராமனும், லட்சு மணனும் தங்கக் கேடயத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டனவாம். விபீஷணன் பொம்மைக்கு வெண்பட்டுத் துணியால் பரிவட்டம் (தலைப்பாகை) கட்டிப் பார்ப்பனப் பூசாரி பட்டாபிஷேகத்தை நடத்தி வைத்தாராம்.

கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும், இந்தா விபீஷணா, லங்காபுரி ராஜ்யம் எனக் கூறிப் பெண்டாட்டியைப் பறிகொடுத்த ராமன் அவளைப் பெறுவதற்கு உதவிய விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்ததாக ராமாயணம் கூறுகிறது.

கார் (மழைமேகம்) இருக்கிறது, கடலும் இருக்கிறது, அதில் நீரும் இருக்கிறது, லங்கையும் இருக்கிறது - விபீஷணன் எங்கே? ராமன் வார்த்தை நடந்துள்ளதா? சாகாதவரம் பெற்ற சிரஞ்சீவிகள் ஏழு பேரில் விபீஷணன் ஒருவன் என்கிறார்கள். அப்படியானாலும், எங்கே விபீஷணன்?
ராமன் சரயூ நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான், லட்சுமணனும் அப்படியே! சீதையும் நெருப்பில் எரிந்தாள் (இரண்டாம் முறை) விபீஷணன் மட்டும் எப்படி இருப்பான்?
ஆனால், விபீஷணப் பட்டாபிஷேகம் நடத்தி அதன்மூலம் காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத்தை வளர்க்க நினைக்கும் விபீஷணர்கள் மட்டும் இருக்கிறார்கள்!


-------------நன்றி: "விடுதலை" 20-7-2008

1 comments:

bala said...

தமிழ் ஓவிய அய்யா,

விபீஷணன் என்று யாரை தூற்றுகிறிர்கள்?பட்டம் சூட்டப்பட்ட ஸ்டாலின் அய்யாவையா அல்லது பட்டம் மறுக்கப்பட்ட மதுரை எரிப்பு புகழ் அழகிரி அய்யாவையா?விளக்கமா சொல்லுங்கய்யா.

பாலா