Search This Blog

20.7.08

கடவுள் கைவிட்டார்!

சோமநாதபுரத்தில் இருந்த மிகப் பெரிய கோயிலில் பல நூற்றாண்டுகளாகப் பக்தர்களால் அளிக்கப்பட்ட செல்வங்கள் குவிந்து கிடந்தன. கஜினி முகம்மது அங்குச் சென்ற காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்களாம்! ஏதாவது அற்புதம் நிகழும் - தாங்கள் வழிபடும் தெய்வம் தங்களைக் காப்பாற்றும் - என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் பக்தர்களின் கற்பனையிலன்றி மக்கள் உலகில் அற்புதம் நிகழ்வது ஆபூர்வமாகத்தானே இருக்கிறது. ஆகவே, அற்புதம் ஒன்றும் நிகழவில்லை. கஜினி முகம்மது கோயிலை இடித்துப் பாழாக்கினான்; பொருளைச் சூறையாடினான். நிகழாத அற்புதம் நிகழும் என்று நம்பியிருந்த 50,000 பேர் அவனால் கொல்லப்பட்டனர்.

---------- ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதிய `உலக வரலாறு என்ற நூலிலிருந்து

0 comments: