Search This Blog
20.7.08
இராமாயணத்தையும் மனுதர்மத்தையும் நெருப்பில் பொசுக்க வேண்டும்
1922-இல் பெரியார் அறிவித்தார்
1937-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பொதுக்கூட்டம் ஒன்றில் பெரியார் பேசியது:
1921-ஆம் வருடம் நான் பெரிய தேச பக்தனாய் தேசிய வீரனாய் இருந்து சிறை சென்றுவந்த உடனே திருப்பூரில் கூட்டப்பட்ட தமிழ் மாகாண மாநாட்டில் சொல்லியிருக்கிறேன். அதாவது இன்று இந்தியைத் தமிழ் மக்களுக்குள் புகுத்தியாக வேண்டும் என்று பலாத்காரம் செய்யும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்ன காரணத்திற்காகத் தமிழ் மக்கள் இந்தி படிக்க வேண்டும் என்று சொன்னாரோ அந்தக் காரணமாகிய ராமாயணத்தைப் படிப்பதையும் மனுதர்மத்தை உணர்வதையும் குற்றம் என்று சொன்னதோடு அவைகளை நெருப்பில் போட்டுப் பொசுக்க வேண்டும் என்றும் நான் சொல்லியிருக்கிறேன்.
-------------------(`குடிஅரசு 19.9.1937)
மனுநூல் கொளுத்தப்பட்டது
தீண்டாமையையும் ஜாதி முறையையும் நியாயப்படுத் துகிற மனு (அ)தர்ம நூலைத் தீயிட்டுக் கொளுத்தியது சுயமரியாதை இயக்கம் 4.12.1927-இல் குடியாத்தம் நகரில் அப்துல்கரீம் தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜனக சங்கர கண்ணப்பரால் மனுநூல் பிரதிகள் கொளுத்தப்பட்டன. (குடிஅரசு 11.12.1927)
அண்ணல் அம்பேத்கர் நடத்திய மஹத் மாநாட்டில் 27.12.1927-இல் மனுநூல் கொளுத்தப்பட்டது.
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment