Search This Blog

6.7.08

2008-லும் மனுநீதி மனப்பான்மை கொண்டவர்களாக தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்



சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் ரகுபதி அவர்கள் தம்முன் வந்த வழக்கு ஒன்றில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் சிறப்புகளை, ஆற்றலைப் புகழ்ந்து நான்கு வரிகள் எழுதி விட்டாராம்.

பொறுக்குமா பூணூல் திருமேனிகளுக்கு? பொத்துக் கொண்டு கிளம்பி விட்டது - கொப்பளித்துக் கிளம்பி விட்டது குருதி! குதித்தாடுகிறது குடுமி!!

விட்டேனா பார் என்று பூணூலைப் பேனா வாக்கி பொல பொல வென்று கொட்டித் தீர்த்து விட்டார் திருவாளர் `சோ ராமசாமி அய்யர்வாள் (`துக்ளக் 9.7.2008 தலையங்கம்).

1957-இல் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராகயிருந்தவர் ஆர்.எஸ். மலையப்பன் என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்; நல்ல நிருவாகி என்று பெயர் எடுத்த நாணயக்காரர்; குளித்தலை வட்டத்தில் நிலக்குத்தகை சம்பந்தப்பட்ட தகராறில் அவர் வழங்கிய தீர்ப்பின்மீது (அப்பொழுது மாவட்ட ஆட்சியர்க்கு அத்தகு அதிகாரங்கள் உண்டு) மிராசுதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் வழங்கும் தீர்ப்பு தவறு என்று சொல்லலாம் - புதிய தீர்ப்புகளையும் வழங்கலாம். அதில் ஒன்றும் குற்றம் கிடையாது. அதனை விட்டு விட்டு பார்ப்பனர் அல்லாத - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆர்.எஸ். மலையப்பன் என்பதை மனதிற் கொண்டு, அவரைப்பற்றி இரு நீதிபதிகள் தாறுமாறாக தீர்ப்பு எழுதினார்கள் தனிப்பட்ட முறையில். அந்த இருவரும் பார்ப்பனர் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த அளவுக்குச் சென்று எழுதினார்கள்? இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இவருக்கு இதற்கு மேல் பெரிய பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கிறுக்கித் தள்ளினார்களே - அது எந்த சட்டத்தின் கீழ்? மலையப்பன்மீது திருச்சி மாவட்ட மக்களிடத்தில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது.

இலட்சம் பேர் கூடிய பொதுக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளான இரு பார்ப்பனர்கள் எழுதிய தீர்ப்பினைக் கொளுத்தினார் தந்தை பெரியார் (4.11.1956). அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் ஒரு காங்கிரஸ் காரர்தான்; பிற்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் - நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு. பழனியாண்டி தான் அவர்.
இரு பார்ப்பன நீதிபதிகள் ஒரு தமிழரின் உத்தியோகத்துக்கே வேட்டு வைத்து எழுதினர். மாவட்ட ஆட்சித் தலைவருக்காக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) தன் கடமையைச் செய்யவில்லை; காரணம் அவரும் ஒரு பார்ப்பனர்; `துக்ளக் பார்ப்பனக் கூட்டத்தின் கோத்திரத்தைச் சேர்ந்த `மவுண்ட் ரோடு மகா விஷ்ணுவான இந்து ஏடும் கும்மாளம் போட்டு எழுதியது. அதனால் தான் நீதிபதிகளின் தீர்ப்பும், இந்து ஏடும் எரியூட்டப்பட்டது (அன்று `இந்து இன்று `துக்ளக் - அதே உணர்வு அட்சரம் பிறழாமல் எப்படி இழையோடுகிறது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது!)

தந்தை பெரியார்மீது நீதிமன்ற அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் திருவாளர் பி.வி. ராஜமன்னார், ஏ.எஸ். பஞ்சாபகேச அய்யர்.
தந்தை பெரியார் எதிர் வழக்காடவில்லை. நீதிமன்ற அனுமதியுடன் வரலாறு படைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார் (1957 ஏப்ரல் 23).

அந்த அறிக்கையில் அழுத்தந்திருத்தமாக பல வரலாற்று உண்மைகளை, ஆரியர் திராவிட வரலாற்றின் போக்கினை எல்லாம் பகிரங்கமாகப் படித்தார் - பதிவு செய்தார் (`நீதி கெட்டது யாரால்? என்ற நூலாக பிறகு வெளியிடப்பட்டது) அதற்காக அவர் எடுத்துக் கொண்டது ஒரு மணி நேரம்.

``பார்ப்பனர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனரல்லாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலோ, அவர்களைத் தலையெடுக்க வொட்டாமல் செய்வதிலோ, முயன்று வருவார்கள் என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பார்ப்பன அய்.சி.எஸ். அதிகாரிகளான டி.எஸ். சாமிநாதன், எஸ்.ஏ. வெங்கட்ராமன், எஸ்.ஓய். கிருஷ்ணசாமி ஆகியோர் வழக்கிலெல்லாம், இப்போது திருச்சி கலெக்டரைத் தாக்கி எழுதிய மாதிரி, எந்த நீதிபதியாவது எழுதியது உண்டா? இல்லை! காரணம், அவர்கள் பார்ப்பனர்கள்; இவர் பார்ப்பனரல்லாதவர். நான் 50 ஆண்டு காலமாய்ப் பாடுபட்டும், இன்னும் பார்ப்பனர்களால், பார்ப்பனரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருக்கிறேனா என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. நான் பொது நலத்துக்காகவே போராடுகிறேன். பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு, கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி, மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்! எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தானா? என்றால், ஆமாம்! வாயில் - நாக்கில் குற்றமிருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது! அதுபோலவேதான், பார்ப்பனர்கள் தன்மை! இந்த ஸ்டேட்மெண்டில் நான் எவ்வித குரோத, துவேஷ உணர்ச்சியுமில்லாமல், ஒரு பொது நலத் தொண் டனாய், விஷயங்களை எடுத்துக்காட்டி, நீதிபதிகள் முன்சமர்ப்பித்துள்ளேன். இதன்மீது கனம் நீதிபதிகளின் `சித்தம் எதுவோ அதுவே என் பாக்கியம் என்பதாகக் கருதி ஏற்கத் தயாராயிருக்கிறேன் இதுதான் உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் படித்த அறிக்கை.

நீதிபதி ஒருவர் தமிழக முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைப் புகழ்ந்து நாலு வார்த்தை கூறியதற்காகக் குருதிக் கொழுப்போடு குதியாட்டம் போடும் `துக்ளக் சோ ராமசாமியைப் பார்த்து ஒரு வினா: ஒரு மாவட்ட ஆட்சியர் தமிழர் என்பதற்காக பார்ப்பன நீதிபதிகள் பழி வாங்கும் நோக்கத்தோடு, தீர்ப்பைத் தாண்டி தீயால் சுட்டார்களே. அதற்கு உங்கள் கூட்டத்தின் தீர்ப்பு என்ன?

அவ்வளவு தூரம் போவானேன்; கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது, அந்த வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் (அய்யர்), `நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்; காரணம் நான் சங்கராச்சாரியாரின் பக்தன்! என்று பகிரங்கமாகச் சொன்னாரே (6.8.2007) அப்பொழுது எங்கே போனது திருவாளர் `சோவின் எழுதுகோல்?

நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு இருப்பதேன்? நீதிக்கு முன் எல்லோரும் சமம், இன்னார் இனியர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதானே அதன் தாத்பர்யம்? அப்படியிருக்கும்போது பச்சையான உணர்வுடன் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாரே - அதுபற்றி ஒரே ஒரு வார்த்தை முணுமுணுத்தாவது எழுதியதுண்டா இந்தக் கூட்டம்? தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு எஸ். மோகன் அவர்கள் நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று பேசினார்.

அடேயப்பா! இதே `சோ ராமசாமி தன் இதழில் எப்படியெல்லாம் தாண்டிக் குதித்தார்?
நடைபாதைக் கோயில்கள் அனுமதியில்லாமல் ஆக்ரமித்துக் கட்டப்பட்டவைதான். அதனை அகற்றுவது சட்டப்படி சரிதான்; அப்படி சட்டப்படி பேசியதற்கே தாண்டி தோண்டியில் விழுந்த வேதியர் குலத்தவர்தானே இவர்? அப்படிப்பட்டவர் எப்படி நடந்து கொள்வார்? தன்னைச் சூத்திரன் என்றும் சூத்திரர்களுக்காக ஆட்சி செய்பவர் என்றும் - தந்தை பெரியாரின் தொண்டன் என்றும் சூளுரைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவரைப்பற்றி ஒரு நீதிபதி புகழ்ந்தால் அவர்கள் குடுமி குதிக்காதா என்ன? குருதி கொப்பளிக்காதா என்ன?

என்ன செய்வது! நம் தமிழர்களுக்குத்தான் அந்தச் சூடும், சொரணையும் வருவதில்லையே - அந்தத் தைரியத்தில்தான் அக்கிரகாரத்து அம்மிக் குழவி ஆகாயத்தில் பறக்கிறது!

பார்ப்பன நீதிபதிகள் தமிழர் அதிகாரிபற்றி சட்டத்தைத் தாண்டி தாறுமாறாக தீர்ப்பு எழுதினால் குற்றமில்லை. ஒரு தமிழர் நீதிபதி - தமிழர் முதலமைச்சரைப் பாராட்டினால் மட்டும் குற்றமா?
2008-லும் மனுநீதி மனப்பான்மை கொண்டவர்களாக தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?



---------------- "விடுதலை" 6-7-2008 இதழில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

4 comments:

Subramanian said...

பார்ப்பனர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.அந்த மனப்பான்மையை அழிக்க முன்னிலும் விடத் தீவிரமாக நாம் இயங்க வேண்டாமா?துக்ளக் வார இதழைத் தீயிட்டுக் கொளுத்தும் நாள் எப்போது?

திராவிட இயக்கத்தை இனியும் நீர்த்துப் போய்விட முயலாதீர்கள்.

tamiloviya said...

தங்களின் பின்னூட்டத்துக்கும், ஆலோசனைக்கும் நன்றி.

Anonymous said...

சோ ராமசாமியின் இது போன்ற எழுத்துக்கள் தான் கலைஞர் இன்னும் இன்னும் நமக்குத் தேவையானவர் என்று காட்டுகிறது. எழுதட்டும்...

இப்போது புதிதாக ஒரு வாத்தியார் கிளம்பியிருக்கிறார். செக்ஸ் விழிப்புணர்வுத் தொடர் எழுதிப் பார்த்தார். எதிர்பார்த்த ரீச் இல்லை. அதனால் இப்போது கலைஞர் மீது வஞ்சப் புகழ்ச்சி செய்து வருகிறார். அந்தக் குமுதம் கேணையைப் பற்றியும் எழுதுங்கள்.

தமிழ் ஓவியா said...

நன்றி தோழரே.தமிழ் இனத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும். தங்களின் ஆலோசனைக்கு நன்றி.