Search This Blog

30.7.08

‘பார்ப்பனரல்லாதார்’ என்று நம்மை நாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும்?



திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை, ‘திராவிடர்’ என்றும்; ‘இந்தியா’ ‘இந்தியர்’ ‘இந்து’ ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்றும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இந்து என்ற வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள், இதிகாசங்கள், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ்வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம். நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சியே ‘இந்து’ என்பதாகும்.

இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அவற்றில்கூட ‘இந்தியா’ என்பதோ ‘இந்து’ என்பதோ, ‘இந்தியர்’ என்பதோ காணப்படவில்லை. 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மைக் குறித்துத் ‘திராவிடர்’ என்றே எழுதப்பட்டிருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம்; அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும், அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக் கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே ‘இந்து’ என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா, இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.

‘பார்ப்பனரல்லாதார்’ என்று நம்மை நாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும்? நாம் திராவிடர்; நம் எதிரிகள் வேண்டுமானால் ‘திராவிடரல்லாதார்’ என்று சொல்லிக் கொள்ளட்டுமே! சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்துவரும் பழம் பண்டிதர்கள் இமயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்து போகட்டும்; அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.

-------------------------- தந்தைபெரியார் - லால்குடியில், 23-5-1944-ல் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 3-6-1944

5 comments:

bala said...

//திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான்//

தமிழ் ஓவியா அய்யா,

ஆ என்ன?திராவிட முண்டங்கள் உழைக்கிறார்களா?இது என்னங்க புது ரீல்?கொள்ளை அடிப்பதற்கு பெயர் உழைப்பா?அடப் பாவிகளா?உங்க அயோக்யத்தனத்துக்கு அளவே இல்லையா?

பாலா

tamiloviya said...

பொறுக்கி பாலா உன்னுடைய பார்ப்பத்தனத்துக்கு அளவேயில்லாமல் போச்சு.பார்ப்பனர்கள் "திராவிடர்" என்ற சொல்லைக் கேட்டதும் அலறுவதிலிருந்து தெரிகிறது பச்சைப் பார்ப்பன முண்டம் என்று.

bala said...

மூண்டம் தமிழ் ஓவியா அய்யா,

திராவிடர்கள் என்று தங்களை வர்ணித்துக் கொள்ளும் கருப்பு சட்டை வெறி நாய்கள் தான் பார்ப்பனர்,ஆரியர் என்று அலறிக் கொண்டிருப்பர்.

பாலா

தமிழ் ஓவியா said...

உங்களின் தராதரத்தை அறிந்து கொள்ளவே கொஞ்சம் காட்டமாக எழுதினேன். இதற்கு பொறுக்க முடியாமல் நீங்கள் பதறுவது தெரிகிறது. கருப்புச்சட்டைக்காரன் எப்போதும் நிதானம் இழக்கமாட்டான். படிக்கும் வாசகர்கள் அறிவார்கள். பார்ப்பான் பம்மாத்து எடுபடாது இனி எக்காலத்திலும்.

bala said...

//கருப்புச்சட்டைக்காரன் எப்போதும் நிதானம் இழக்கமாட்டான்//

முண்டம் தமிழ் ஓவியா அய்யா,

அது சரி.கருப்பு சட்டைக்காரன் மானமிழந்தான்,அறிவிழந்தான்,பின்னர் பீடு இழந்தான்.நிதானம் மட்டும் இழக்க மாட்டானாகும்?போங்கடா வெங்காய வெறி நாய்களா.

பாலா