Search This Blog

5.7.08

இராமாயணத்தினால் அறிவு மழுங்கும்; குறளால் அறிவு பெருகும்



திருக்குறளின் மேன்மை!


ஆயிரம் தடவை இராமாயணம் படிப்பதும் சரி, ஒரு தடவை குறள் படிப்பதும் சரி; இராமாயணத்தில் நூறு பாடல் படிப்பதும் சரி; குறளில் ஒரு பாட்டுப் படிப்பதும் சரி; இராமாயணத்தினால் அறிவு மழுங்கும்; குறளால் அறிவு பெருகும். மக்களுடைய ஒழுக்க நெறியை வகுத்து மேன்மைப்படுத்துவது குறள்.


--------------- தந்தைபெரியார் - "விடுதலை", 2.1.1955

2 comments:

Thamizhan said...

வால்மீகி ராமாயணத்தின் உண்மையான மொழி பெய்ர்ப்பைப் படித்துப் பார்க்க வேண்டும்.அதிலுள்ள அசிங்கங்களையெல்லாம் முடிந்த வரை மாற்றி தமிழில் மிகவும் ஒலி,பொருள் நயத்துடன் கம்பர் காவியம் படைத்தார்.இருந்தாலும் பல இடங்களில் அவராலேயே மாற்றி எழுத முடியாத நிலையில் வடித்துள்ளார்.

கம்பராமாயணத்தை ஏன் எரிக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையுடன் பட்டி மன்றம் நடத்தி வென்றார்.அதில் ந்டுவர்கள் மிகவும் தமிழும்,பக்தியும் நிறைந்தவர்கள் தான்.அது "தீ பரவட்டும்" என்று வெளியிடப் பட்டுள்ளது.

ராமாயணத்தில் உள்ள் அசிங்கங்கள் வேண்டு மென்றால் "கம்ப ரசம்" படியுங்கள்.

tamiloviya said...

தோழர்.தமிழன் அவர்களுக்கு மிக்க நன்றி.தங்களின் பின்னூட்டங்கள் பல உண்மைச் செய்திகளை எடுத்துரைக்கிறது.