காட்டுமிராண்டிகள் கல்லும், காடும், நீரும், நிலமும், செடி யும், மரமும், புல்லும், பூண்டும் பிசாசுகளுக்கு இருப்பிட மென்று பயந்து வாழ்கின்றனர். நமது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒண்டி மரமும், பாழ் வீடும், குட்டிச் சுவரும், பிசாசுகளுக்கு இருப்பிடமாம்! இவ்விதமாக இரண்டு குடும்பங்கள் ஒரு பாழ்வீட்டைப் பிடித்திருந்த பிசாசால் அவ்வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாகவும், அதனைத் தமிழ் நாட்டில் விசாரித்த திரு. வி.டி. ஸ்குட் என்பவர் அந்தச் சம்பவம் உண்மைதான் என்று சொல் வதாகவும், அவர் பிரக்யாதி பெற்றவராகையால் அவர் சொல் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், தாங்கள் நம்பாமற்போன போதிலும் பிறர் அவர் சொல்லை நம்புகிற படியால் இந்த மகிமையை விளக்கிக் காட்ட வேண்டு மென்றும், நீண்டதோர் கடிதம் தஞ்சை சுயமரியாதைத் தொண்டர்கள் கையொப்பமிட்டு எழுதியுள்ளார்கள்.
இந்தத் திரு. ஸ்குட் என்பவர் பிரபல்யம் பெற்றும் இருக்கலாம். பேய் பிடித்த வீட்டுச் சம்பவத்தை விசாரித்து மிருக்கலாம். அவர் அந்த வீட் டில் கொல்லப்பட்ட ஒருவரின் ஆன்மா பேயாகி அந்த வீட்டண்டை உலாவிக் கொண்டிருக்கின்றதாகவும், அவர் நம்பலாம். ஆனால் ஒரு கேள்வி அவரைக் கேட்கின் றேன். அதாவது, இந்தக் கொல்லப்பட்ட மாது ஆன்ம ரூபமாகக் கொண்டு, அந்த அகால சப்தங்களைச் செய்த தாக யார் பார்த்தார்கள். முனீஸ் வரன் பிடித்த மரங்களின் கதைகளிலும், ``சப்தம் கேட் டது, மலம் வந்து விழுந்தது, சாணிச் சட்டி உடைந்தது, மூத்திரம் ஊற்றப்பட்டது, ஜன்னல் படபட வென்று அடித்து. கதவு திடீரென்று திறந்துகொண்டது, படியில் தடதடவென்று பெட்டி உருண்டது. இன்னும் பல அகாலச் சம்பவங்கள் நடந்தன வென அனுமானிக்கின்றார் களேயொழிய, இந்தக் கிருத் தியங்களை அதாவது காரி யங்களை பேய்தான் செய்தது என்று யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. நமது நண்பரைக் கேட் கின்றேன். இந்தத் திரு ஸ்குட் யார்? எந்த விஷயத்தில் பிரக் யாதி பெற்றவர்? இவர் எந்த வேளையில் எந்த மணி நேரத் தில் விசாரிக்கப் புகுந்தார்? இவர் கூட யார் இருந்தது? இவர் பார்த்தது பிசாசு என்று அனுமானித்ததை எப்பொழுது எழுதினார்? அவர் அந்த க்ஷணத்தில் எழுதினாரா? அந்தப் புத்தகம் எங்கே? எவ் வளவு நேரம் அவர் விசாரித் தார்? பக்கத்து வீட்டு முகவரி களை எல்லாம் யார் விசாரித் தார்கள்? ஏன் எவனோ ஒருவன் அந்த வீட்டுச் சொந்தக் காரனுக்கு நஷ்டம் உண்டாக்க, அந்தச் சப்தங்களை மறைவாக நின்று செய்திருக்கலாகாது? இத்யாதி கதைகளைச் சற்று அவ நம்பிக்கையிலேயே வைப் பதுதான் யோக்கியப் பொறுப்பு லட்சணமென அறிக.
தனிமம் - Element
அய்ந்து தனிமங்களால் உலகம் உருவானது என்பார்கள் (பஞ்சபூதங்கள் என்று தனிமங்களைக் கூறுகின்றனர்). நிலம், நீர், தீ, காற்று, வானம் என அய்ந்தைக் கூறுகின்றனர். வானம் என்பது தோற்றம், அது தனிமம் அல்ல; அதற்கும் உலகுக்கும் தொடர்பில்லை. உலகம் 4 தனிமங்களால் மட்டுமே ஆனது என நாத்திகர்களாகிய சார்வாகர்கள் கூறினர்.
இதை ரசாயன ரீதியாக இரண்டாகப் பிரிக்க முடியாது. தங்கம், ஆக்சிஜன், துத்தநாகம் இவை உதாரணங்கள். 90 தனி மங்கள் இயற்கையிலேயே உள்ளன. 13 தனிமங்கள் செயற் கையாக உருவாக்கப்பட்டுள்ளன.
தனிமங்கள் அணுக்களால் உருவாக்கப்பட்டவை. மூலப் பொருளின் அம்சங்களைக் கொண்ட, இரசாயனச் சேர்க்கை யில் ஈடுபடக் கூடிய, மேலும் பிரிக்க முடியாத மிகச் சிறிய துணுக்கு அணு எனப்படுகிறது. ஒரு மெல்லிய தங்க மோதிரத் தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை: 100-க்குப் பிறகு 20 சுழிகள் (பூஜ்யங்கள்) சேர்த்து வரும் எண்ணிக்கை.
இந்தவித கதைகள், மூட ஜனங்களிடம் அதிகமாக வழங்குவதைக் காணலாம். இந்தக் கதைகளை நம்புகின்ற வர்கள் முக்கியமாக மூன்று விஷயங்களை நிரூபிக்க வேண்டும்.
முதலாவது மனிதனுக்குள் திரேக மன்னியில் ஒரு ஆன்மா இருப்பதாகப் ருசுப் படுத்த வேண்டும்
இரண்டாவது அவன் இறந்த பிறகு அந்த ஆன்மா தனித்து வாழ்வதாக நிரூபித்தல் வேண்டும்.
மூன்றாவது அந்த ஆன்மா நமது உள்ளக் கண் ணால் அதாவது திரேகக் கண் ணால் பார்த்ததாக நிரூபித்தலும் வேண்டும்.
இந்த மூன்று சாட்சியங்களை யாராகிலும் கொடுப்ப தற்குத் தயாராகயிருக்கின்றார்களா? எனக் கேட்கின்றேன்
பேய், பிசாசு என்றால் என்ன? அய்ம்பூதச் சேர்க்கை யால் உண்டானதா, அல்லது உள்ளதா? அது என்ன வர்ணம்? குட்டையா?, நீளமா? அதற்குக் கை, கால்கள் உள்ளனவா? அதற்குக் கண்கள் உண்டா? எந்த அவயவங்களை உடைத்தாயிருக்கிறது?
அகாலமாகக் கொலை உண்டவர்களுடைய ஆன்மா தானா பாழ்வீட்டில் தங்க வேண்டும்? ஒரு நாளைக்கு ஆயிரம் அகாலக் கொலைகள் நடக்கின்றனவே. அந்த ஆன்மாக்கள் எந்தக் கொலை வீட்டில் தங்குகின்றன? யாரும் சஞ்சாரம் செய்யாத வீட்டில் தானா?
கூச்சல் போடத்தான் இந்தப் பேய்களுக்குத் தெரியும்? கூச்சல் போட வாய் வேண்டுமே, வாயுடைய பிசாசுக்கு, மற்ற அவசியங்களும் இருக்குமன் றோ? ஏன் அந்த அவயங் களுடன் நாம் செய்யும் வேலை களை எல்லாம் செய்யக் கூடாது? பிசாசுகளுக்கு ஆடையுண்டோ? சட திரேகத்தில் தான் சூட்சும திரேக ஆன்மா உண்டு. ஆனால், ஆடையில் சூட்சும ஆடையும் உண்டோ?
போர்க்களத்தில் அகாலமாகக் கொல்லப்படுவோருடைய கோடான கோடி மக்களது ஆன்மா, எங்கே உலாவுகின்றன? எந்த ஜன்னல்களையும் கதவுகளையும் அசைக்கின்றன? இந்தப் பரிசுத்த ஆன்மாவுக்கு மலத்தையும் ஜலத்தையும் எறிய சக்தியுண்டு ஏன் சந்தனத்தை வாரி வீசலாகாது?
இந்தப் பேய் பிடித்த கதை களை, பிசாசு பிடித்த கதைகளை நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு, நான் சிறுவனாய் இருக்கும்போது கேட்ட கதை ஒன்று ஞாபகத்தில் வருகின்றது. ஒரு கிழவியின் ஆன்மாவுக்குப் பாதி இரவில் தாகம் எடுத்ததாம். கழுநீர்ப் பானைக்குள் அந்த ஆன்மா சென்று கழுநீரைக் குடிக்குங்காலை, பானையில் உண்டான சப்தத்தைக்கேட்ட இன்னொரு கிழவி, எலியோ, பெருச்சாளியோ, கழி நீரைக் குடிப்பதாக நினைத்து, அந்தப் பானையின் வாயை மூடி விட்டாளாம். அதனால் தண்ணீர் குடிக்கச் சென்ற ஆன்மா அந்தப் பானையில் அடைபடவும், அந்தக் கிழவி இறந்து விட்டாளாம். சுடலைக்குக் கொண்டு போகையில் அது மத்தியான வேளையானதால் மாடுகள் தண்ணீர் அருந்த வீட்டுக்கு வரவும், கழிநீர்ப் பானை திறக்கப்படவும் அதில் அடைப்பட்ட ஆன்மா ஓடி வந்து இறந்த கிழவிக்குள் புகுந்துகொள்ளவும், அந்தக் கிழவி தூங்கி விழித்தது போல எழுந்தாளாம்!!! இந்தக் கதையை உண்மை என்றே என் னுடன் விளையாடிய சிறுவர்கள் சொல்லுவார்கள். அது போலவே நமது சுயமரியாதை இளைஞர்கள் திரு. ஸ்குட் சொல்லும் கதையை உண்மையென நம்புகின்றார்கள் போலும்!!
பேய்க் கதைகள் உலகில் அனந்தமுண்டு. ஆனால் அந்தப் பேயைக் கூத்து மேடைகளைத் தவிர மற்ற எந்த இடங்களிலும் யாரும் பார்த்ததில்லை. அரபிக் கதைகளில் ஒரு புட்டியி லிருந்து பூதமொன்று புறப் பட்ட கதையை நமது சிறுவர்கள் படித்திருப்பார்கள். அதை ஏன் உண்மையென நம்பலாகாது எனக் கேட்கின்றேன். அதுபோன்ற கதைகள்தான் குட்டிச்சுவர் பிசாசுக் கதையும், பாழ் வீட்டுப் பிசாசுக் கதையுமென அறிக.
உயிர் - உலகில் ஜனித்துப் பல கோடி வருஷங்களா கின்றன. மனித உயிர் உலகில் ஜனித்து, சில வருஷங்களாயின வாம். கோடானுகோடி உயிர் களுக்கு, ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆன்மா உண்டானால் அந்த எண்ணிறந்த ஆன்மாக் களுக்கு இருப்பிடம் எங்கே? கோடி கோடி கோடானு கோடி நண்பர்களுக்கு எத்தனை குட்டிச் சுவர்கள், ஒத்தை மரங் கள், பாழ் வீடுகள் வேண்டும்! முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கின்றார்கள் என்றால் சிரிக்கிறீர்களே, ஏன் இந்த திரு ஸ்குட் சொல்லும் கதையைக் கேட்டு நகைக்காமல் ஊக்கத் துடன் இந்த உபயோகமற்ற கதையைப்பற்றி வினாவுகின்றீர்கள்?
அணுக்கள்
ஆக்சிஜனில் உள்ள அணுக்கள்
நீரிலுள்ள அணுக்கள்
அமோனியா வாயுவில் அணுக்கள்
மீதேன் வாயுவில் அணுக்கள்
எதிலின் கிளைகால்
ஆஸ்ப்ரினில் அணுக்கள்
எலுமிச்சைச் சாறில் அணுக்கள்
க்ளுகோஸில்
விலங்குக் கொழுப்பில் அணுக்கள்
மாவுச் சத்தில் அணுக்கள்
ரப்பரில் உள்ள அணுக்கள் 2
3
4
5
10
21
21
24
173
1500 முதல் 150 ஆயிரம் வரை
13 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை.
உயிர் வாழும் மக்களுக்குத் தகுந்த உணவு இல்லாமலும், சுகவீடு இல்லாமலும், இறந் தால் வாய்க்கு அரிசி கூட இல்லாமல் நம்மைச் சுற்றிக் கோடானுகோடி மக்கள் இருந்து வருகையில் அதனைப் போக்க உங்கள் மனதைச் செலுத்தாது, குட்டிச் சுவரில் பேயுண்டா? பாழ் வீட்டுப் படியில் பெட்டிச் சத்தம் கேட் டதா? கொலையுண்டவனின் ஆன்மாவா அதனைச் செய்தி ருக்கும்? என்று சிறுவர் நினைக் கத் தகுந்த கேள்விகளைக் கேட்கப் புகுந்தீர்களே! இது என்ன கோரம்?
இந்தக் கதைகளில் சிறிய தோர் உண்மையுண்டு. அது யாதெனில் மூடநம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க அத னால் ஒரு மயக்கம் உண்டா கின்றது. பேய்கள் ஆடுகின்ற மாதிரியாகவும், இறந்தவர்கள் பேசுகின்ற மாதிரியாகவும், கண்களுக்கும் காதுகளுக்கும் தோன்றும்; கேட்கும். பக்தி யால் வெறிகொண்டதாகவும், விஷ்ணு கருடவாகன ரூபராய் காட்சி கொடுப்பதாகவும், ஏசு மரித்தெழுந்ததாகவும் தோன் றும். இந்தக் காட்சிகள் ஒரு விதமான மயக்கத்தால் உண் டாவது சகஜம். இதனை மன மயக்கம், மனப்பித்தம் என்று வழங்குவார்கள். இதனைப் போன்றே பேய், பூதங்கள் உண்டென நம்புகின்றவர்களுக் குக் குட்டிச் சுவர் பேய்களாக வும், பாழடைந்த வீடுகள் பிசாசுகளுக்கு இருப்பிடமாக வும், அகால சப்தங்களுடனும் வெள்ளைச் சேலைக்காரியும், உப்பாடைக்காரியும் தோன்று வார்கள். இத்தோற்றங்கள் மன மயக்கால் உண்டாகின்றனவே யொழிய உண்மை அல்ல. இதனை வேதாந்திகள் மாயை என்றும் கூறுவர். கட்டையில் கள்ளனைப் பார்ப்பது போல வும் கிளிஞ்சியில் வெள்ளியைக் காணுவதைப் போலவும் பாழ் வீட்டில் பேயையும், பிசாசு களையும் செத்தவர் பட்டவர் களைப் பார்ப்பதாகும். ``மிரண் டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற மொழியைக் கேட்டதில்லையா? நாம் மெய்ஞ்ஞான முறையைப் பற்றி நமது `குடி அரசில் எழுதிவரும் வியாசங்களைக் கவனித்துப் படித்து வருவீர் களாகில் நீங்கள் இறந்தோர் விஷயமாகக் கொண்டுள்ள மருள்யாவும் விலகிப்போகும். நமது அஞ்ஞானம் ஒழிந்து, மெய்ஞ்ஞானம் பெருக வேண்டுமானால் சலம சூத்திரத்தில் புத்தர் சொன்ன வாக்கியத்தைக் கவனியுங்கள்.
தேவன் சொன்னதனாலேயே நம்பாதீர்கள். வேத புத்தகங்களில் சொன்னதினாலேயே நம்பாதீர்கள். ஒவ்வொன்றையும் விசாரியுங்கள். உங்கள் யுக்திக்குப் பொருந்தி இருந்தால், யாவர் நன்மைக்கும் உவந்திருந்தால் அதனை நம்புங்கள். அதனைக் கையாளுங்கள்.
-------------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை
Search This Blog
3.7.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment