கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதிய பதில்
திரு தமிழ் ஓவியா அவர்களே!
தங்கள் பின்னூட்டங்கள் வந்து சேர்ந்தன. உங்களுடைய பின்னூட்டங்களைப் படித்தேன். எனக்கு நீங்கள் எழுதிய கருத்துக்களில் ஆழ்ந்த உள்ளறிவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இதை எழுதுவது நான் படித்த ஆங்கில ராமாயணத்தை அடிப்படையாக வைத்தே எழுதுகின்றேன் என்பதை முதலிலேயே தெரிவித்திருக்கின்றேன். வால்மீகியை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட அதன் கருத்துக்களைத் தான் தெரிவிக்கின்றேன். தங்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் தகுதியோ, அல்லது தங்களுடன் விவாதம் செய்யும் அளவுக்கு ஆழ்ந்த உள்ளறிவோ எனக்கு இல்லை எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ராமாயணத்தை அனைவரும் படிக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் யாரிடமும் சொல்லவில்லை. என் சொந்த வலைப்பதிவில் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் எழுதும் இதை நீங்கள் படிப்பதோ, படிக்காமல் இருப்பதோ உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆகவே உங்களைப் படிக்க வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. என்னை எழுதக் கூடாது என்று நீங்களும் கூற முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன். இதற்கு மேல் உங்கள் பின்னூட்டங்கள் தொடர்ந்தாலும், என்னிடமிருந்து பதில் ஏதும் வராது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி வணக்கங்களுடன்,
-----------கீதா சாம்பசிவம்.
தமிழ் ஓவியாவின் விளக்கம்
மரியாதைக்குரிய கீதா சாம்பசிவம் அவர்களுக்கு,
வணக்கம்
யாரையும் எழுதக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.ஒருவலைப்பதிவில் ஒரு பொருளை அல்லது ஒரு கருத்தை தெரிவிக்கும் போது அதற்கு வெட்டியோ ஒட்டியோ விமர்சனம் வரும்.அதுதான் இயற்கை. நாம் எழுதும் கருத்தை செழுமைப்படுத்திக் கொள்ள அந்த விமர்சனங்கள் பேருதவியாக இருக்கும். என்கருத்தை மறுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. அதேவேளை என் கருத்தைக் கூறக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்று சொன்ன பெரியாரின் வழியில் வந்தவன் நான். எனவே தான் நீங்கள் எழுதும் இராமாயணம் எங்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.இராமாயணம் மட்டுமல்ல அதைப் பரப்பும் நீங்களும் எங்களை (பார்ப்பனரல்லாதவர்களை) மதிக்கவா போகிறீர்கள்?
உங்கள் பதிலை எதிர்பார்க்காமல்
நியாயமான பிரச்சாரத்தை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்போம். நன்றி.
------- என்றும் தோழமையுடன் தமிழ் ஓவியா
Search This Blog
18.4.08
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
பகுத்தறிவுக்கு முன்பே
பக்திமார்க்கம் வாயடைத்துப்போகும் என்பது தெரிந்தது தானே தோழரே! தொடர்வோம் நம் பகுத்தறிவு பிரச்சாரங்களை!
வாழ்க பெரியார்!
பரப்புவோம் பகுத்தறிவு பிரச்சாரங்களை
Post a Comment