Search This Blog

6.4.08

பெண்களைப் பழிக்கும் இந்துமதம்

புரபசர் இந்திரா எம்.ஏ., (சாஸ்தீரி காவ்ய திருத், வித்தியாலங்கார் எம்.ஓ.எல். முதலிய பட்டம் பெற்றவர்) எழுதிய பழைய இந்தியாவில் பெண்கள் நிலை என்னும் புத்தகத்தில் 11ஆம் பக்கம் முதல் 26ஆம் பக்கத்திற்குள்ள உள்ளவற்றிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்-பட்டதாகும். அதாவது அவர்கள் பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களை வேத சாஸ்திரங்கள், புராண இதிகாசங்கள் ஆகியவகைளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுபவைகளைத் தொகுத்துக் குறிப்பிட்டிருப்பதாவது:
1. பெண்கள் நிலையற்யற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்.
ரிக்வேதம் 8-3-17
2. பெண்கள் நட்பு நீடித்ததல்ல அவர்கள் கழுதைப் புலியின் தன்மையுடையவர்கள்.
ரிக் வேதம் 10-95-10
(ஊர்வசி புருரவ முனிவருக்குச் சொன்னது)
3. இந்திரன், நாம் விரும்பும் மனைவிகளைக் கொடுப்பவன்.
ரிக்வேதம் 4-17-16
(இந்திரனை ரிஷிகள் பிரார்த்திப்பது)
4. இந்திரா! உன்னை விட மேலானவன் வேறுயாருமில்லை, ஏனெனில் மனைவியில்லாதவருக்கு மனைவிகளை - காதல் கிழத்திகளைத் தருகிறாய்.
ரிக்வேதம் 5-31-3
5. வேதகாலத்தில் போரிலே வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கும் பரிசுப் பொள்களில் ஒன்றாகப் பெண்கள் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள்.
6. வெற்றிக்குப் பிறகு வெற்றியாளர்களால் பெண்கள் கணவரிடமிருந்து பலாத்காரமாகப் பிரிக்கப்பட்டு கொள்ளைப் பொருள்களைப் போல் பங்கு போடப்படுவார்கள்.
(பேராசிரியர் லட்விக் கூறுகிறார், இவைகளுக்கு வேதங்களில் ஆதாரம் இருக்கிறது என்று)
7. ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்
ரிக்வேதம் 4-48-88
8. வேதங்களின் காலத்தில் பெண்கள் ஆண்களின் உடமைபோல் சொத்து போல பாவிக்கப்பட்டு விந்திருக்கிறார்கள்.
(புத்தக ஆசிரியர் கருத்து)
9. பொதுவான கணவன் ஒருவன் தன் காதல் கிழத்திகளை வைத்திருப்பதுபோல் தான் கைப்பற்றிய கோட்டைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்
ரிக்வேதம் 7-2-63
(இந்திரன் சொல்லியிருக்கிறார்)
10. இதே கொள்ளையைத்தான் பின்னால் சட்டம் செய்தவர்களும், காவியங்கள் இயற்றியவர்களும் கையாண்டிருக்கிறார்கள்.
(புத்தக ஆசிரியர்)
11. உடமைகளில் ஒன்றான பெண்களை மனிதன் கொள்ள வேண்டும்.
12. மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டு வைக்காதே.
(யக்ஞ்ய வல்கியர் என்பவரால் வகுக்கப்-பட்ட தர்மநீதி)
13. வேத சாஸ்திரி கட்டளைப்படி, புருஷர்கள் தங்கள் மனைவிகளை, பூர்வீக புண்ணியத்தினாலோ அல்லது தெய்வ சங்கற்-பத்தாலோ தானடைந்த பொருளாகவே கருத வேண்டும்.
(பீஷ்மர் கூறிய வாக்கு)
14. பெண்கள் தங்கள் கௌரவத்தை படிப்படியாக இழந்து ஆண்களின் போகப் பொருளாக மாறி வந்ததை வேதங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
(புத்தக ஆசிரியர்)
15. ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்கு தொண்டு செய்யவும் பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வன வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
16. மேலும் அவள் (கணவனால்) அவனுடைய போஷ்யா அல்லது அடிமை கீழ்ப்பட்டவள் என்று அழைக்கப்பட்டவள்.
அதர்வன வேதம் 14-1-1952
17. பிற்காலத்திலும் பெண்கள் போகத்திற்-குரியவர்களாக மாத்திரம் கருதப்பட்டு வந்திருக்கிறது.
(புத்தக ஆசிரியர்)
18. மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே காமவேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள்.
(என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்)
19. மனிதன் தனக்கு உதவிக்காக நீண்ட நாள் கஷ்டப்பட்டான். கடைசியாக தன்னுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தனக்கு எல்லா இன்பத்தையும் தரக்கூடிய ஒன்றை மனைவி என்ற உருவத்தில் பெற்றான்.
- பிற ஹதரான்யாக 1-4
20. பின்னால், தர்மசாஸ்திரங்களில் பெண்களின் நிலை திகைப்பை உண்டு-பண்ணும் ஷீண நிலைமைக்குப் போய் விட்டதைக் காணலாம்.
- ஆசிரியர் கருத்து
21. அறிவுக்குப் பொருந்தாத முறையில் அவர்கள் மீது இழிவுகள் வசைகள் கற்பிக்கப்-பட்டிருக்கின்றன. இவைகளுக்கு அளவே-யில்லை.
(ஆசிரியர் கருத்து)
22. பெண்குலத்தை இழிவு படுத்துவதில் மகாபரதமும் காவியங்களும் சிறிதும் பின் வாங்கவில்லை.
ஆசிரியர் கருத்து)
23. பெண்கள் தட்டு முட்டு சாமான்களைப் போல் கருதப்படுவதால் அவர்களைப் பற்றி அதிகமாக கவலை கொள்ளத் தேவையில்லை. (இதற்கு ஆதாரங்கள் பல உண்டு).
24. மனு சொல்லுவதைக் கவனியுங்கள். இந்த உலகில் ஆண்களை கற்பழிக்கும் இயல்பை பெண்கள் பெற்றிருப்பதினால் தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்-களாகிறார்கள்.
25. இந்த விதத்தில் படித்த ஆண்களையும் பெண்கள் வசியப்படுத்தி, தப்பான வழியில் செலுத்தி, இச்சைக்கும் போகத்திற்கும் அடிமையாக்கி விடுவார்கள்.
26. மனு, பெண்களுக்குப் போகத்தில் ஆசை, நகையில் ஆசை, இருப்பில் ஆசை என்பவைகளைக் கற்பித்ததோடு களங்கமுள்ள சிந்தையையும், சினத்தையும், அயோக்கியத் தனத்தையும், வஞ்சகத்தையும் துர் நடத்தையையையும் பெண்களின் லட்சணமாக வர்ணித்திருக்கிறார்.
(புத்தக ஆசிரியர்)
27. பெண்ணினத்தின் மீது பாம்பு விஷத்தை கக்குவது போல் இப்பெருங்காவியம் இழிவைக் கக்குகிறது கொட்டுகிறது.
(மஹாபாரதம் அனுஷாசனம்) 38, 12, 25, 29.
28. பெண்ணாய் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை.
எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே!
29. எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை.
ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளுவ பிராணிகளைக் கொன்றாலும் கொலைக்காரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.
30. நாச காலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்புகள், நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடிய தாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்.
31. இதிகாசங்கள் காலத்தில் இருந்த சாதுவாகிய மன்னன் யுதிஷ்டனும் பெண்களின் இயல்பை மிகக் கேவலமாக வெறுக்கத்தகுந்த முறையில் கண்டித்திருக்கிறார்.
(புத்தக ஆசிரியர்)
32. அதாவது: பெண்ணின் அழிவு, கண்டு பிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது.
மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39-8.
33. பெண்களின் அறிவைப் பார்த்துதான் பிரகஸ்பதியும் இதர பெரும் அறிவாளிகளும் அறிவுக்கான கொள்கைகளை வகுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
(மேற்படி 39-40)
34. பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
(மேற்படி 43-22)
35. பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள் - விரும்ப மாட்டார்கள்.
(மேற்படி 43-22)
36. உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள்
(மேற்படி 43-24) 37. ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக் கொண்டாலும் வின்னர் மற்றவர்களுடன் கூடிக் கொண்டு முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள்.
(மேற்படி 43-24)
38. அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.
(மேற்படி 43-24)
39. ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக் கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய (நல்ல தன்மை) ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந்தத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கெண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்.
(மேற்படி 43-24)
40. எல்லா மனிதர்களும் கடவுள்களாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள். பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து, மனிதர்களின் வீழ்ச்சிக்காக பெண்களை சிருஷ்டி செய்தார்.
41. ஆகவே, பெண்கள் மனித சமுதாயத்தின் வீழ்ச்சிக்காக பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
42. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால் அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது.
43. இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும் இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்.
(மனு 9-15)
44. உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலை தண்ணீர் போல் சலனப் புத்தியுடைவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமை தன்மையுடையவர்கள்.
இராமாயணம் ஆரண்ய காண்டம் 13-5-6
45. பெண்களின் முகங்கள் பூக்களைப் போன்றவைகள்; அவர்கள் மொழிகள் தேன் போன்றவைகள்; அவர்களது உள்ளம் சவரக் கத்தியின் கூர்மையைப் போல் கெடுதி செய்யக் கூடியது; அவர்களது உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர் யாருமில்லை.
(இராமாயணத்திற்குப் பிந்திய காவியங்களில்)
46. ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவர் யாருமிருக்க முடியாது.
47. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கு தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.
48. பெண்கள் இரக்கமில்லாமல் புலிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள்.
(பாகவத ஸ்கந்தகம் 4-14, 42.8-4.36)
49. பெண்கள் நிலையற்ற சுவாமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.
- சுக்ரன்
50. பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 குணங்களும் உரிமையானவைகள். பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம்.
சுக்ரா, 3-163
51. பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டின் மீது அடிகள் கொடுக்கலாம்.
அர்த்த சாஸ்திரம் 3-3-59
52. ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளப்பினாலோ அடிக்கலாம்.
53. சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் - அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கொன்று விடலாம்.
54. உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெணை சக்ரா கொண்டிருக்கிறார்.
55. உலகம் தூங்கக்கூடாது என்று விரும்பியதற்காக காவ்ய மாதா என்ற பெண் விஷ்ணு கையினால் கொல்லப்பட்டாள்.
56. ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை சடங்குகளை தடுத்தற்காக தாடகை என்ற பெண்ணை ராமன் கொன்றிருக்கிறான்.
(ராமாயணம் 25-17)
57. குடும்பத்தல் பெண் பிறந்தால் அச் சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது வியாகூலப்பட வேண்டியது
58. அதர்வன வேதத்தில் ஆண் மகவை விரும்புகிறதேயல்லாது பெண் மகவை விரும்புகிறதில்லை.
59. பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும்.
அதர்வண வேதம் 6-2-3
60. புங்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும் பெண் மகவு பிறக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்படி 8-6-25
61. பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்
காதபாசன் ஹிதா (27ஏ)
62. ஆனால் இது பழக்கத்தில் மகளைக் கல்யாணம் செய்து கொடுப்பதனால் தொடர்பற்றதாக இறந்தவளாகக் கருதப்படுகிறது.
- புத்தக ஆசிரியர்
63. யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிப்பட்ட பெண்களோ, அல்லது விவாக சம்பந்தமாக கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எசரையும் மனிதப்பிறவி என்று கருதாமல் தட்டுமுட்டு சாமான்களைப் போலவே நடத்த வேண்டும்.
(ரிக் வேதத்தைக் குறித்து எழுதிய பிரபல ஆசிரியரான டாக்டர் அபினாஷ் சந்திரதாஸ் கூறுகிறார்)
64. இதை இதிகாச காலத்திலும் காணலாம். அதாவது பஞ்ச பாண்டவர்களின் மனைவியாகிய துரௌபதியை யுதிர்ஷ்டிரன் சகுனியுடன் சூதாடும் போது பணையமாக வைத்தான்.
- மேற்படி
65. யாரும் கேட்காமலே, தனது மனைவியையும், தான் மதிக்கும் எல்லாவற்றையும் ராஜ்ய உரிமையையும் தாமாகவே பரதனுக்கு அதுவும் சந்தோஷமாக கொடுப்பதாக ராமன் வாயால் சொல்லுவதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.
(இராமாயணம் 2-19-14)
66. அந்நாளில் மனைவியை சாமானைவிட மேலாக மதிக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணங்கள் வேண்டும்.
(புத்தக ஆசிரியர்)
67. ஒரு சூதாடுபவன் தனது மனைவியை விட்டு பிரிய மனம் தாங்காமல் வருந்துகிறான். தனது மனைவி அழகாயிருப்பதனால் மட்டுமல்ல, பிரியமாயிருப்பதனால் மட்டுமல்ல, அவள் உற்ற தோழியாகவும், சிறந்த ஊழியளாகவுமிருப்பதனால்
(ரிக் வேதம் 10-31-24)
68. சூதாட்டத்தில் தனது கவனம் அதிகமாக ஈடுபட்டிருக்கையில், மற்றவர்கள் தங்கள் கைகளை தனது மனைவியின் மீது போடுகிறார்கள் என்று அந்த சூதாடி பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறான்.
69. அந்த நாளில் (பண்டைய நாளில்) மனைவியின் நிலைமை அடிமையின் நிலைமையைவிட நல்ல நிலைமை என்று சொல்லுவதற்கில்லை.
(மேற்படி)
70. பெண்ணின் நேசம் ஒரு பொழுதும் நிலையானதல்ல. அவளுடைய மனம் கழுதை போன்றது.
இந்து மதத்தில் ஆரிய மதத்தில் அவர்களது வேத சாஸ்திர புராண இதிகாசங்களில் காணப்படுபவைகளிலிருந்து பொறுக்கியெடுத்த சில குறிப்புகளாகும் இவை.
இனியும் இது போலவும், இன்னும் மோசமாகவும் எவ்வளவோ குறிப்புகள் வேறு பல ஆதாரங்களில் இருக்கின்றன.

பொதுவாக எல்லா மதங்களும் பெண்களைச் சிறிதாவது தாழ்மையாகத்தான் மதிக்கின்றன. வட நாட்டில் பெண்கள் எல்லா மதத்தாராலும் பெரிதும் மறை பொரளாகவே கருதப்படுகிறார்கள்.

--------------- தந்தை பெரியார் அவர்கள் சித்திர புத்திரன் என்ற புனை பெயரில் தொகுத்து வெளியிட்டது 30.3.1940 விடுதலை இதழில் வெளிவந்தது)
-----

1 comments:

Prabhu said...

THESE ARE ALL LAME PERIPHERAL COMMENTS.
I VIEW THESE AS PARTIALLY UNDERSTOOD INFORMATION. RAMAYANA INDICATES HOW THE CHASTITY OF SITA IS DIVINE AND NOT ONLY THAT THERE ARE GODESSES WHO ARE TREATED AS SIMILAR AS MALE.
PLEASE TRY TO UNDERSTAND THE CONTEXT RATHER THAN PINPOINTING SOME ABSTRACTS.
HMM WHAT THE WOMEN (BOOK AUTHOR) WANTS TO PROVE ? I DO UNDERSTAND MISTAKES HAVE BEEN COMMITTED AGAINST WOMEN WHICH IS NOT ACCEPTABLE BY STATING ANY REASONS . BUT I AM SURE EQUALLY WOMEN ALSO EXPLOIT MEN. IF I WRITE THIS I WILL CALLED AS A MALE CHAUVINIST ! HMM COME OUT OF ALL THESE MIRAGE AND TRY TO UNDERSTAND SELF rather than complaining about past. u can change self and as an example change others