தந்தை பெரியார் அவர்களின் கூற்று
"ஆங்கிலோ-இந்தியர்கள் எப்படியோ அதேபோலத் தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும்; ஆங்கிலோ- இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள்தாமே ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம்நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் 'டேய் டமில் மனுஷா' என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர்! அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல், தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போலச் சாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்!
அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்துவந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட , ஆரியசாதி முறைகளையும் அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ்ச்சாதிகளாக அடிமைகளாக மதித்து நடத்துகிறார்கள்."
------------ "குடிஅரசு" 28.5.1949
அண்ணல் அம்பேத்கர் கூற்று
"தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பனியத் தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஓர் பக்கம் நிறுத்தி மற்றொருபக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர் களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போல்தான் தோன்றுவர். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ , ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ, அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்."
-------------காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? என்ற நூலிலிருந்து -பக்கம்- 215
Search This Blog
20.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment