இராவணன் என்றொரு திராவிட மன்னன் இலங் கையைத் தலைநகரமாகக் கொண்டு தென்னாடு பூராவும் - விந்திய மலைவரை ஆட்சி நடத்தியதாக வரலாறு ஒன்றும் கிடையாது.
தற்சமயம் வழக்கிலிருக்கும் வால்மீகி இராமாயணத்தைப் படித்தால், இராமன் போன இடங்களை வர்ணிக்கும் போது, விந்தியமலைத் தொடர் களோடு அந்த வர்ணனை நின்று விடுகிறது. அதற்குத் தெற்கேயுள்ள நிலப்பரப்பின் தோற்றம், ஆறுகள் - கிருஷ்ணா, வட பெண்ணை, தென் பெண்ணை, காவரி, வைகை யாறு முதலிய ஆறுகளைப் பற்றிய குறிப்பே கிடையாது. இவைகளைத் தாண்டாமல் ராமேசுவரத்திற்குப் போவது என்பது சாத்தியமே இல்லை தென்னாட்டிலும், சிறீலங்கா விலும்தான் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் தென்னை மரம் வளர்கிறது. தென்னை மரத்தைப் பற்றிய குறிப்பு இப்பொழுதும் வழக்கிலி ருக்கும் வால்மீகி இராமாயணத்தில் கிடையாது.
பல நூற்றாண்டுக்குப் பிறகு காளி தாசன் எழுதிய ரகு வசம்சத்தில் இராமனுடைய படைவீரர் கள் எதிரிகளின் இரத்தத்தைக் குடித்தது போல், ``நாசி கேளாசவ்ம்பபு; யோத்தா தென்னை ஆஸவத்தை, அதா வது, தென்னங் கள்ளை குடித்தனர் என்று குறிப்பிடுகிறார்.
தற்காலத்தில் வழக்கிலி ருக்கும் இராமாயணம் வால் மீகி எழுதிய இராமாயணத் தில் பிற்காலத்திய பிராமணர்கள் செய்த இடைச் செருகல்கள்தான் அதிகம். வால்மீகி எழுதிய ஆதி காவியம் அனுஷ்டுப் சந்தஸ் அதா வது ஒவ்வொரு வரியும் எட்டு மாத்திரைகளைக் கொண்ட சுலோகங்களைக் கொண்டது. பிற்காலத்தில் செருகல்களோ, பல மாத்திரைகளைக் கொண்ட சுலோகங்களாகும்.
வால்மீகி எழுதிய அனுஷ்டுப் சந்தசில் உள்ள சுலோ கங்களை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தால் அவர் எழுதிய இராமாயணம் சாதா ரண மன்னர்களைப் பாத்திரங் களாகக் கொண்ட ஒரு கதையை வைத்தே காவியமாக எழுதினார் என்பது தெளி வாகும். கதை சரியாகவே, தொடர்ச்சியாகவே ஓடுகிறது.
தசரதன் 60 ஆயிரம் ஆண்டு கள் வாழ்ந்தான் என்பதெல் லாம் அப்பட்டமான புளுகு. உலகில் மனிதன் தோன்றிய காலம் முதற் கொண்டு எவனும் 60ஆயிரம் ஆண்டுகள் வாழவில்லை. 60 வயதாகியும் அவனுக்கு குழந்தை பிறக்க வில்லை. புத்ரகாமேஷ்டி யாகம் என்று ஒன்று ஒரு யாகத்தை அவன் செய்ததாக வும், அப்பொழுது ஒரு பாத் திரத்தில் அமுதம் கிடைத்த தாகவும், அதை தசரதன் தன் னுடைய நான்கு மனைவி மார்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்ததாகவும், அதன் விளைவாக, அந்த மனைவி களுக்கும் ஆண் உடல் சேர்க்கையே இல்லாமல் குழந்தைகள் பிறந்ததாகவும் எழுதப் பட்டுள்ள கதைகள் அனைத் தும் பிற்காலத்திய செருகல்கள்; இயற்கையில் நடக்க முடியாத கட்டுக்கதைகள்.
தசரதன் சமுதாயத்தில் வர்க்கப் பாகுபாடுகள் ஏற்பட்டு விட்ட பிறகு பிராமணீய மதம் பரவியிருந்த சமயத்தில் வாழ்ந்தவன். கங்கையில் கலக் கும் சரயூ நதிப் பிரதேசத்தை ஆண்ட மன்னன். அவன் தலைநகரம் அயோத்தியா.
பிராமணீய மதக்கோட் பாடுகளையும், வாழ்க்கை முறைகளையும், சடங்குகளை யும் ஏற்காத பூர்வகுடிகள் விந்திய மலைகளிலும், இன்னும் பல்வேறு மலைகளிலும் ஓடி வாழ்ந்தனர் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். விந்திய மலைப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த, இன்று வாழ்ந்து கொண்டு வருகிற பூர்வகுடி மக்கள் கோண்ட்கள் எனப்படுவோர், அம்மக்களின் தலைவன் இராவணன். இந்தப் பூர்வக்குடிகள், பிராமணீய மதத்தினர் செய்து வந்த சடங்குகளுக்கு பற்பல தடங்கல்களையும் இடையூறு களையும் இழைத்து வந்தனர். அவர்களை எதிர்த்து பிரா மணீய மதத்தை ஏற்றுக் கொண்ட இராமன் என்ற ராஜகுமாரன் யுத்தம் நடத்தி, அந்த இராவணனை போரில் வீழ்த்தினான் என்பதே வால்மீகி இராமாயணத்தின் கதைச் சுருக்கம்.
அதில் கூறப்பட்டுள்ள லங்கா என்பது ஒரு நகரைக் குறிக்கிறதேயன்றி, கடல் சூழ்ந்த ஒரு பெரும் பிரதே சத்தைக் கொண்ட சிறீலங்கா அல்லது தென் இலங்கைத் தீவைக் குறிக்கவில்லை.
இப்பொழுதும் விந்திய பிரதேசத்தில் லங்கா என்று கோண்ட்களால் அழைக்கப் படும் ஒரு சிறு மலைப்பகுதி இருக்கின்றது. அங்கே செல்வ தற்கு ஒரு பெரிய ஏரியைத் தாண்டவேண்டும். இந்த ஏரியை அனுமான் நீந்தியே கடந்தான் என்றுதான் வால்மீகி கூறுகிறார். மற்ற கதை களெல்லாம் பிற்காலத்தில் பிராமணர்கள் இராமனைக் கடவுளாக்கி, அனுமானையும் கடவுளாக்கி,சேர்த்த செருகல்கள்.
இவைகளை எல்லாம் டி. பரமேசுவர அய்யரும், அவர் இளையவர் டி. அமர்தலிங்க அய்யரும், சமீப காலத்தில் சங்காலியா என்ற புதை பொருள் ஆராய்ச்சியாளரும் எழுதிய ஆராய்ச்சி நூல்களை ஆதாரமாகக் கொண்டு, தோழர் கே. முத்தையா எழு திய ``இராமாயணம் உண்மையும் - புரட்டும் என்ற சிறு வெளியீட்டில் காணலாம்.
நூல்: ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் (மறு வெளியீடு: `தினமலர் வாரமலர் 27-5-2001)
Search This Blog
19.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment