Search This Blog

19.4.08

புண்படுத்துவோர் யார்? புண்படுவோர் யார்?

என் பேர் சிறீராமன். என் பிதா தசரத மஹாராஜா. உன் விருப்பம் என்ன? ஸ்வர்க்க லோகம் வேண்டுமா? எதற்காக உக்ர தவம் பண்ணு கிறாய்? தாபசனே! நீ எவரை ஆக்ரயித்து இந்தத் தவசு செய் கிறாய்? பிராமணனானால் க்ஷேம முண்டாகும். க்ஷத்திரியனானால் ஜபமுண்டாகும். வைசியனா? சூத்திரனா உண்மையைச் சொல் என்றார். அவன் தன் ஜாதியையும் தவசின் காரணத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.

1.22 பெருங்காரியங்களைச் செய்கிற சிறீராமனை நோக்கி அந்தத் தபசி சொல்கிறான், ``மஹா ராஜாவே! நான் சூத்திர ஜாதியில் பிறந்தவன், என் பேர் சம்புகன். புகழுள்ளவரே! இந்தத் தேகத்துடன் தேவத்வம் அடைய விரும்பியிருக்கிறேன். நான் பொய் சொல்லவில்லை என்றான். சிறீராமன் ``சம்புகா, இந்த யுகத்தில் சூத்திரர்கள் தவமியற்றும் அதிகாரம் பெற்றவர். நீ செய்வது தரும விருத்தமாகின்றது. நான் அறம் வழுவாது பரிபாலித்ததற்குரியவன். ஆதலின், உன்னை வதைப்பது என் கடமை. நீ யாது கூறுகின்றாய்? என வினவ, அவன் ``தேவரீர் கரத்தால் கொலையுண்பது பெரும்பாக்கியம் என, சிறீராமன் கூர்மையான கத்தியை எடுத்து வீசி அவன் கழுத்தை வெட்டினார். அந்தச் சூத்திரன் வெட்டப்பட்ட உடனே அக்னி முதலானவர்கள் சிறீராமனை அடிக்கடி புகழ்ந்து புஷ்ப மழை பெய்தார்கள்.
தேவ துந்துபிகள் முழங்கின. தேவர்கள் ஸ்ந்தோஷமடைந்து சிறீராமா மஹா புத்திசாலியே, நீர் தேவ காரியங்களை நிறைவேற்றினீர். அரிந்தமா, உமக்கு இஷ்டமான வரத்தைக் கேளும். ரகுநந்தனா! ஸ்வர்க்கம் புக உரிமையில்லாத இவன் தவமியற்றக் கண்டு நாங்கள் பயந்தோம். இவனை நீர் வதைத்தீர்; உமது தர்மத்தாலே அந்தச் சூத்திரன் ஸ்வர்க்கத்துக்கு வராதபடி செய்தீர். எங்களுக்கு அதுவே போதுமானது என்றார்கள்.
ஸ்ரீராமன் கைகளைக் குவித்துக் கொண்டு இந்திரனை நோக்கிச் சாவதானமாய், `தேவர்களே! இந்திர பகவானே! நீங்கள் என் மேல் கிருபையாயிருந்தால் இறந்து போன அந்தக் குழந்தை பிழைக்க வேண் டும். இதுதான் நான் விரும்பும் வரம். என் குற்றத்தினாலே அந்தப் பிரா மணக் குழந்தை அகால மிருந்தி யுவை அடைந்து எமன் வீட்டுக்குப் போயிற்று. அதைப் பிழைப்பி யுங்கள். பொய் பேசக் கூடாது. அந்தக் குழந்தையைப் பிழைக்கச் செய்கிறேன் என்று பிராமணனிடத் தில் பிரதிக்ஞை செய்தேன் என்று சொன்னார். தேவர்கள் ஸந்தோஷ மடைந்து `ஸ்ரீராமா! ஸந்தோஷ மாயிரு. அந்தப் பாலன் இப்போதே பிழைத்துத் தன் பந்துக்களுடன் சேர்ந்து கொள்வான். நீ சூத்திரனு டைய சிரஸை வெட்டின அந்த க்ஷணத்திலேயே அந்தக் குழந்தை யின் பிராணன் அதன் சரீரத்தில் புகுந்து விட்டது.


இராமனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, கூத்தாடும் பார்ப்பனர்களை, திருவாளர் `சோ ராமசாமிக் கூட்டத்தை கேட்கிறோம்.

இதை எந்த வகையில் நியாயப்படுத்துகிறீர்கள்? சம்புகன் பரம்பரையினரான சூத்திரர்களான நாங்கள் கேட் கிறோம் - எங்கள் முன்னவனை பிறப்பைக் காட்டி படுகொலை செய்தவன்தான் உங்கள் ராமன் அவனை நாங்கள் விமர்சிக்கக் கூடாதா? குற்றம் கூறக் கூடாதா?
ஒரு கொலைகாரனைக் கடவுளாக்கியதுதானே உங்கள் தர்மம்? அந்தக் கொலைகாரனை நாங்கள் கொலைகாரன் என்று சொன் னால் `அய்யயோ இந்துக் களின் மனதைப் புண்படுத்து கிறார்களே! என்று கூக்குரல் போடுவது அசல் பம்மாத்து வேலையல்லவா! இன்னும் அந்த மனுதர்ம மனப்பான் மையுடன்தான் இருக்கின்றீர் கள் என்பதற்கு இதைவிட அடையாளம், அத்தாட்சி வேறு எதுவும் வேண்டுமோ!


நாம் எழுப்ப வேண்டிய உரிமைக் குரல் இராமனைப் புகழாதே, இராமாயணத்தைப் பிரச்சாரம் செய்யாதே என்கிற நியாயமான குரலாகும். அடா வடிக்காரர்கள், குற்றவாளிகள் கொக்கரிக்கிறார்கள் பாதிக் கப்பட்டவர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள் - இதனை மாற்ற வேண்டியதே நீதியும் நியுதியுமாகும்.

பாதிக்கப்பட்டவன் அழக் கூடாது; அதனை மகிழ்ச்சி யாக ஏற்றுக் கொள்ள வேண் டும் என்பதுதானே உங்கள் இந்து மதம்? பாதிப்புக்குக் காரணமானவனைக் குற்றம் கூறக் கூடாது கொலைகார னாக - இருந்தாலும் அவன் கடவுள், அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் - அவ னைப் புகழ வேண்டும் - தொழ வேண்டும் என்று இன்றைக் கும் கூறுவீர்களானால் அதனை ஏற்றுக் கொள்ள நாங்கள் சோற்றாலடித்த பிண்டங்களா!

திராவிட இயக்கம் தன் மான இயக்கம் அதன் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரும் சரி, அவர்தம் தொண்டர்கள் சீடர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி ஆகியோர் இரா மனை, இராமாயணத்தை விமர்சிப்பது நியாயத்தின் அடிப்படையில், தன்மானத் தின் அடிப்படையில் பாதிக் கப்பட்டவர்களுக்கான உரி மைக்குரல் என்ற அடிப்படை யில். உங்களிடத்திலே ஊட கங்கள் இருக்கின்றன என்கிற திமிரில் உச்சிக் குடுமி மன்றம் இருக்கிறது என்கிற கொழுப்பில் பொய்யை உண்மையாகக் காட்ட முயற்சிக்கிறீர்கள்; உண்மையைப் பொய்யாக்கும் உருட்டல் வேலையில் ஈடு படுகிறீர்கள். பக்தி மயக்கம் என்னும் பள்ளத்தாக்கில் இந்தச் சூத்திரர்களை உருட்டி விட்டோம் - அவர்கள் அதிலிருந்து கரை யேறுவது எப்பொழுது என் கிற மமதையில் புரட்டுப்பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.
திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுகவும், மதிமுகவும் அதன் ஆணி வேர் கொள் கைகளை அரசியல் பதவிக் காக காட்டிக் கொடுக் கிறார்கள். இராமாயணத்தில் கூறப்படும் - அந்த வான ரங்கள் இப்பொழுதும் மலி வாகக் கிடைக்கின்றன என்கிற மிதப்பில் பேனா நர்த்தனம் ஆடுகிறீர்கள்.

அது நடக்காது - நடக்க விட மாட்டார்கள் தமிழர்கள்.

இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டம் என்பது வரலாறு - அந்த ஆரிய திராவிடப் போராட்டம் இன் னொரு வகையில் இப்பொ ழுது நடந்து கொண்டு இருக்கிறது. மானமிகு கலைஞரும், மானமிகு வீரமணியும் இராமனை விமர்சிப்பதும் இராமன் பரம்பரையர் பார்ப் பனர்கள் திராவிட இயக்கங் களை விமர்சிப்பதும் அந்த இராமாயணப் போராட்டத் தின் தொடர்ச்சிதான். - ஆரிய திராவிடப் போராட்டம்தான்.

தமிழர்களே நீங்கள் எந்த பக்கம்? இராவணன் பக்கமா - அல்லது அன்றைக்கு இராமனுக்குத் துணைபோன விபீஷணன், சுக்ரீவன் வரிசையிலா?
சிந்திக்க வேண்டிய நேர மும், செயல்பட வேண்டிய நேரமும் வந்து விட்டது - வந்தே விட்டது!

13-10-2007 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதியது.

0 comments: