திராவிட இயக் கத்தின் முன்னோடிகளின் பெயர்களை மறைக்கப் பார்க் கும் ஒரு கூட்டத்தை அடை யாளம் காட்டிப் பேசினார் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள்.
கிருஷ்ணகிரி வெற்றிச் செல்வனின் மகள் விமலா கஸ்தூரி - டி. பாலச்சந்தர் ஆகி யோரின் திருமண விழாவை (10-4-2008 - சென்னை) முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் நடத்தி வைத்து உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:
இன்றைக்குக் கூட மிகப் பெரிய ஒரு தமிழ்ப் பத்திரிகையில் நம்முடைய விளம்பரப் போர்டுகளை எல்லாம் கழற்ற வேண்டும், ஊரின் அழகைக் கெடுக்கிறது என்று சொல்லி உச்ச நீதி மன்றம் வரையிலே வழக்கு நடந்து, உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் அவைகள் எல்லாம் கழற்றப்பட வேண்டு மென்று சொன்னதின் பேரில் - மாநகராட்சி மன்றத்தின் சார்பிலும், காவல் துறையின் சார்பிலும் அந்தப் பெரிய பெரிய பலகைகள் கழற்றப் படுகின்றன. ஒரு பெரிய பத் திரிகையிலே போட்டிருக் கிறார்கள். ஜெமினி மேம் பாலத்தில் இருந்த பெரிய பலகை கழற்றப்படும் காட்சி என்று இன்று வெளியிட் டிருக்கிறார்கள். ஜெமினி மேம்பாலம் என்ற பெயர் மறைந்து எவ்வளவு காலமா கிறது? இருந்தாலும் இவர்கள் அதை விடமாட்டேன் என் கிறார்கள். ஏன் தெரியுமா? அது அண்ணா மேம்பாலம் ஆகி விட்டது. அண்ணா மேம் பாலம் என்ற பெயரைச் சொல்ல பயந்து கொண்டு அல்லது மனம் இல்லாமல் இன்றைக்கும் ஜெமினி மேம் பாலம் என்கிறார்கள். அண்ணா என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார், எப்போ தும் வாழ்ந்து கொண்டி ருக்கிறார், எங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இடம் பெற்ற அறிஞர் அண்ணாவின் பெயரை ஒரு பாலத்திற்கு 1971 ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த போது அதை வைத்துக் கட்டி முடித்தேன். அந்த அண்ணா மேம்பாலத்தை இன்றைக்கும் ஜெமினி மேம்பாலம் என்று எழுதுகிறார்கள் என்றால் அது எந்தப் பத்திரிகை என்றெல் லாம் நான் சொல்ல விரும்ப வில்லை. அதை அவர்களே உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காகச் சொல்லுகிறேன். இப்படி பல விஷயங்கள்.
விஷமத்தனங்கள்!
தி.நகர் என்றால் உங்களுக் குத் தெரிகிறது. திருவல்லிக் கேணி என்றால் உங்களுக்குத் தெரிகிறது ஏன் தி.நகர் என்று பெயர் வைத்தார்கள் தெரி யுமா? தியாகராய நகர் - திரா விட இயக்கத்தை உருவாக்கிய முன்னோடித் தலைவர் தியாக ராயர் பெயரால் ஒரு பகுதியே விளங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத, விரும்பாத, இன்னும் சொல்லப்போனால் வெறுக்கின்ற ஒரு கூட்டத்தார், அதைத் தியாகராயநகர் என்று சொல்லி - அவர் பெயரை விளம்பரப்படுத்தத் தேவை யில்லை என்று கருதி, அதைச் சுருக்கி தி.நகர் என்று வைத்து விட்டார்கள். பேருந்துகளிலே கூட தி.நகர் என்றுதான் எழுதிக் கொண்டிருக்கிறார் கள். நம்முடைய ஆட்சி வந்த பிறகுதான் தியாகராயநகர் என்று முழுப் பெயர் எழுதப் பட்டது. கேட்டபோது சொன்னார்கள். அது நீளமான பெயர், அதனால்தான் தி.நகர் என்று எழுதுகிறோம் என் றார்கள். அது நீளமான பெயர் என்றால் திருவல்லிக்கேணியை தி.கேணி என்று எழுதுகிறார் களா? இல்லை.
இவைகள் எல்லாம் விஷ
மத்தனமானவை. அந்த விஷமத் தனத்தைப் புரிந்து கொள்ளாத சில அப்பாவிகள் அதற்கு அடி மையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
- இவ்வாறு முதல்வர் கலைஞர் பேசினார்
----------- நன்றி: "விடுதலை" -12-4-08 பக்கம் -3
Search This Blog
13.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment