நீங்கள் நூற்றில் ஒருவரா? இந்தியாவில் நூற்றுக்கு ஒருவர் ஆண்டுக்கு ஒரு முறை இரத்ததானம் செய்தால் கூட விபத்துகளினால் இரத்தம் கிடைக்காமல் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்கலாம். சாதாரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம். இரத்ததானம் செய்வதால் உடல் சோர்வோ உடலுக்கு எவ்விதமான தீங்கோ ஏற்படுவதில்லை.
1. 18 வயது முதல் 60 வயது வரை ஆண், பெண் இருபாலரும் இரத்ததானம் செய்யலாம்.
2. வலிப்பு, சர்க்கரைநோய், மலேரியா, மஞ்சள்காமாலை நோயுள்ளவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் இரத்ததானம் செய்யக்கூடாது.
3. அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆறு மாதத்திற்குப் பிறகு தான் இரத்ததானம் செய்யவேண்டும்.
4. நம் உடலில் 5 முதல் 7 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இதில் 300 மி.லி. இரத்தம் மட்டுமே தானமாகப் பெறப்படுகிறது. வலியோ சிரமமோ இல்லாமல் 10 நிமிடத்தில் இரத்தம் எடுக்கப்படும்.
5. உடல் நலத்தோடு உள்ள ஒருவர் மூன்று மாதங்களுக்கொருமுறை இரத்ததானம் செய்யலாம். புதிதாக ஊறும் இரத்தம் உடலுக்குப் பொலிவுதரும்.
6. எத்தனை முறை இரத்தம் கொடுத்தாலும் ஆரோக்கியம் கெடுவதில்லை.
7. இரத்ததானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்கவேண்டும்.
8. இரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். தானம் செய்யும் இரத்தம் 24 மணி நேரத்திற்குள் நம் உடலால் ஈடுசெய்யப்படும்.
Search This Blog
16.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment