புத்தியிருக்கா உனக்கு ? இங்கு உன் பெண்டாட்டியை மீட்டிங்குக்கு கூட்டிவர நடுங்குகிறாய் எட்டிப் பார்த்துவிட்டால் கூட அடிக்கப் போகிறாய்.
அங்கு மாமாங்கக் கும்பலில் அவள் கூட்டத்தில் அகப்பட்டு கூட்டத்தால் கசக்கப்படும் போது வெட்கமில்லாமல் கொந்து பத்திரம், செவ்வு பத்திரம், கழுத்து பத்திரம், காது பத்திரம் என்றுதானே கூறுகிறாய்.
கொஞ்சமாவது மானமிருந்தால் அப்படிப்பட்ட இடத்திற்குப் பெண்களை இழுத்துக் கொண்டு போவாயா நீ ?
மாமாங்கம் என்று கூறிக் கொண்டு போய் மக்களின் மூத்திரம் கலந்தச் சேற்று நீரைத் தெளித்துக் கொண்டு வருகிறாயே!
மாமாங்கக் குளத்தில் எப்படித் தண்ணீர் பொங்கும் என்று சிந்தித்ததுண்டா நீ?
இன்றாவது தெரிந்து கொள். ஜனநெருக்கத்தால் மூத்திரம் வெளியில் விட முடியாத ஜனங்கள் சரசரவென்று குளிப்பது போல் குளத்தில் இறங்கி மூத்திரப்பையை காலி செய்து விடுகிறார்கள்.
அதுதான் நுரைவரக் காரணம் என்றும் அவர்கள் விடும் மூத்திரத்தாலும், பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் நீரில் இறங்குவதாலும் தான் அந்த நீர்மட்டம் ஏறுகிறதென்றும் அறிவாளிகள் சொல்லுகிறார்கள்.
ஆகவே உங்களை இவையெல்லாம் சரியா, தப்பா என்று பகுத்தறிவு கொண்டுதான் நடக்கும்படி சொல்லுகிறோம். நாணயமாகத் தான் நடக்கும்படி சொல்லுகிறோம். இதற்கா நாங்கள் நாஸ்திகர்கள் ஆக்கப்படுவது ?
(14-12-1947 அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 23-12-1947 "குடிஅரசு" இதழில் வெளியானதில் ஒரு பகுதி)(பெரியார் களஞ்சியம் 2-ஆம் தொகுதியில் இருந்து…. பக்கம் :202)
Search This Blog
9.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment