Search This Blog

7.4.08

பெரியாரின் தொலைநோக்கு

----போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும்; அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.

---கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும்இருக்கும்.

--- ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும்அமைக்கப்பட்டிருக்கும்.

---உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம்ஏற்படும்.

--- மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும்.

---- உணவுகளுக்குப் பயன்படும்படியான உணவு, சத்துப்பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்.

---மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.

--- பிள்ளைப்பேறுக்கு ஆண்-பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும்,திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி, நல்ல குழந்தைகளைப் பிறக்கச்செய்யப்படும் .

---ஆண்-பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.

---மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டு வந்து விடக்கூடும்.

-------"இனிவரும் உலகம்" என்ற நூலில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது (1943)

0 comments: