Search This Blog

19.4.08

பெரியார் பற்றி மறைமலை அடிகள்

ஹிந்தி ஆரிய தர்மத்தை அடிப்படையாகக் கொண் டது. ஆரிய தர்மம் வர்ணாஸ் ரம தர்மத்தை, சாதி வேறு பாடுகளை, சாதி உயர்வு தாழ்வுகளை அடிப்படை யாகக் கொண்டது. தமிழர் கலாச்சாரமோ இதற்கு முற்றி லும் மாறுபாடானது.

அப்படி இருக்க, ஜாதி வேற்றுமைகளையே அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியைத் தமிழ்நாட்டில் புகுத்துவதென்றால் இங்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வரும் ஒற்றுமை மனப்பான்மையைக் கெடுக்க ஆரியர்களால் செய்யப்படும் சூழ்ச்சி இது என்றுதானே கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் ஹிந்தி வேண்டாம் என் றால் சமஸ்கிருதம் படியுங்கள் என்று கூறுவதன் கருத்து இதுதானே! இரண்டும் மக்க ளுள் வேற்றுமை உணர்ச்சி களை வளர்க்கும் மொழிகள் என்பதுதான் இதற்குக் கார ணம். தமிழர்களிடையே தோன்றியுள்ள புத்துணர்ச்சியை, பகுத்தறிவு உணர்ச்சியைக் கெடுக்க, நாசமாக்க, தம்மா லியன்ற எல்லா வகையாலும் தொல்லை கொடுக்க முற் பட்டு விட்டனர் என்பதன் அறிகுறிதான் இது.

பெரியாருக்குப் பாராட்டு

இதை ஆரம்பத்திலிருந்தே உணர்ந்து கொண்டுள்ள பெரியார் இராமசாமி அவர்களும் ஆரியத்தை இந்நாட்டிலிருந்து எவ்வகையிலேனும் ஒழித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள். இத் தொண்டு மிக விரைவில் வெற்றி காண இருக்கிறது என்பது இங்குக் கூடியுள்ள மக்கள் உணர்ச்சியால் நன்கு தெரியப்படுகின்றது. நான் சைவ சமயத்தில் பிறந்து விட்டேன். ஆகையால் இவருடன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒத்து வேலை செய்யும் வாய்ப் புக் கிடைக்காமற் போய் விட்டது.

சைவ சமயத்தவரைத் திருத்துவதையே எனது நோக்க மாகக் கொண்டு, சமஸ்கிருதம் கற்று சைவ சமய உண்மை களை ஆராய புகுந்தேன். பார்ப்பனர்களின் தந்திரங்களை, சூழ்ச்சிகளை அறிந்து சில வெளியீடுகளின் மூலம் அவைகளை அம்பலமாக்கினேன். பார்ப்பனர் தம்மை உயர் ஜாதி என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கிக் காட்டினேன். இதன் பயனாய் பார்ப்பனர்கள் என்னை `வேத விரோதி என்றும் `பார்ப்பனத் துவேஷி என்றும் பழித்துக் கூறி எம்ம வரிடத்திலேயே எனக்குப் பகைமையை மூட்டி விட் டனர். இதனால் நான் எடுத்த காரியம் எதிர்பார்த்த பல னைத் தராமல் போய் விட்டது என்றாலும் இந்த 55 ஆண்டு களில் சுமார் 40 நூல்கள் வரை தமிழில் வெளியிட்டேன், ஆங் கிலத்திலும் சில நூல்கள் வெளியிட்டுள்ளேன். இவை கள் இளைஞர் உள்ளத்தில் ஓரளவுக்கேனும் எழுச்சியை உண்டாக்க பயன்பட்டிருக் கும் என்று நினைக்கிறேன். செல்வந்தர்களும் மடாதி பதிகளும் ஆரிய தாசர்களாய் ஆகிவிட்ட போதிலும் இந் நாட்டு இளைஞர்கள், தமிழ் அணங்குகள் யாவரும் பெரியார் சொற்படி அறப்போர் துவக்கி ஹிந்தியை ஒழிப்பதில் விரைவில் வெற்றிகாண வேண்டுமென்று கூறிக் கொண்டு என் தலைமை உரையை முடித்துக் கொள்கிறேன்.

-------------- 17.1.1948-இல் சென்னையில் நடைபெற்ற மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்து மறைமலை அடிகளார் ஆற்றிய உரை

0 comments: