Search This Blog

18.4.08

"ராமஜெயம்"எழுதி வெள்ளைத்தாள்களை விரயமாக்கும் போக்கு இனியும் தேவைதானா?

அயோத்தியை ஆண்டுவந்தான் தசரதன். கொஞ்சநஞ்ச காலமல்ல இவன் ஆட்சி , சுமார் அறுபதினாயிரம் ஆண்டுகளாய் ஆட்சி நடத்தியவன் தசரதன். இவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூவர் பட்டத்துக்குரிய மனைவிகள்; வேறு அறுபதினாயிரம் பெண்கள்; இஷ்டத்துக்கு வரும் இன்பராணிகள். இத்தனை இருந்தும் மழலை இல்லாத மலட்டு வாழ்க்கையில் மனம் வெறுத்துக் கிடந்தான் தசரதன்.

"பிள்ளைபெறுவது எப்படி?" என ஆலோசனை நடத்தினான். அமைச்சர்களும் அடிக்கடி வந்துபோகும் முனிவர் வசிஷ்டரும் அசுவமேத யாகத்தால் குழந்தையைப் பெறலாம் எனத் தீர்மானித்துச் சொன்னார்கள். அசுவமேதயாகம் என்பது - தனி வல்லுனர்களை வைத்துச் செய்யவேண்டிய ஒன்று என்றும் விளக்கினார்கள் அவர்கள்.

கலைக்கோட்டு முனிவன் என்பவன் இதில் பேர் போனவன். அவனை இழுத்து வருவது என்றால் இலேசுப்பட்ட காரியமல்ல. ஒரு வழியாய் "அதையும் இதையும்"கொடுத்து சரயு நதியோரம் இம்முனிவன் இழுத்துவரப்பட்டான். கலைக்கோட்டு முனிவனின் தலைமையில் யாகம் துவங்கியது . சம்பிரதாயப்படி தசரதனின் முதல் மனைவியான கோசலை. யாகக் குதிரையைச் சுற்றிவந்து, அதனை மூன்று வெட்டாக வெட்டிக் கொன்றாள். பின்னர், துடிதுடித்த குதிரை முண்டங்களுடன் இரவு முழுதும் அணைத்து, தனது துருதுருப்பைக் கழித்துக் கட்டினாள்.

காலை புலர்ந்தது. கோசலை குதிரை முண்டங்களில் இருந்து எழுந்ததும் தசரதனிடம் போனாள். தசரதனின் மற்ற இரு பட்டமகிஷிகளான கைகேயியும், சுமத்திரையும் அவனருகில் ஏற்கனவே நின்று கொண்டிருந்தனர்.

யாகவேள்வியில் கலைக்கோட்டு முனிவனுக்கு எடுபிடிகளாக இருந்த அத்வர்யு, ஹோதா மற்றும் உகதா ஆகிய மூன்று குட்டி முனிவர்களை அழைத்துத் தனது மூன்று மனைவிகளைத் தற்காலிக தானம் செய்தான் தசரதன். முனிவர்கள் மூவரும் தசரதனின் மனைவியரை அழைத்து கூத்தடித்தனர்.

பின்னர், அவர்களையும் சலிப்படைய வைத்துவிட்டனர் இந்தத் தசரதப் பத்தினிகள்."இவர்களை வைத்துக்கொள்; பொன்னாகப் பொருளாகக் கொடு" என்று முனிவர்கள் பொருள்பறி நடத்திவிட்டு நடந்துவிட்டனர். அன்றே தசரதனின் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.இக்கருக்களின் உருக்களே ராமனும், அவன் இளவல்களும்.

விஷ்ணு பற்றிய கதைப்படி, இந்த ராம அவதாரமென்பது விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்று.

இந்த யாக விவரமெல்லாம், வால்மீகி ராமாயணத்து 14 -ஆம் சருக்கத்தின் விளக்கம். மொழி பெயர்த்தவர் பண்டிதஅனந்தாச்சாரியார்.

பண்டித மன்மத நாததத்தர் என்பவர் இந்த யாக நிகழ்ச்சியில் கோசலையின் பங்கை இங்கிலீஷின் மொழி பெயர்த்துள்ள வரிகளும், தசரதன் தன் பத்தினிகளை இரவல்வழங்கியதும் வருமாறு:

"Kausalya with three strokes slew that horse ex- periencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas. Adhwaryus and the Ugatas Joined the king’s wives’. என்று குறிப்பிட்டுள்ளார்.

கோசலைக்கு ராமனும், கைகேயிக்குப் பரதனும் சுமத்திரைக்கு லட்சுமணன் மற்றும் சத்துருக்கனனும் பிறந்தனர்.

ராமனின் பிறப்புக் கதை இது. இவனின் சிரிப்புக் கதைகள் வேறு இருக்கின்றன. பக்தர்களே!

1. அறுபதினாயிரம் ஆண்டுகால ஆளுகை; அதே எண்ணிக்கைப்

பெண்களுடன் கேளிக்கை! இதென்ன வேடிக்கை? மந்திர

தந்திரக் கதைக்காரனின் அளப்பையும் ஆழப்புதைக்கிறதே இது!

2. பட்டத்து மனைவிகள் மூவர்; தனது கொட்டத்துக்கும்

கும்மாளத்துக்கும் என்று 60 ஆயிரம் அணங்குகள் என்றால்,

தசரதன் என்ன தசையுடலால் ஆனவனா, அல்லது

இரும்புலக்கைப் பேர்வழியா?

3 கலைக்கோட்டு முனிவனை இழுத்துவர, ஒரு கூட்டிக்

கொடுக்கும் வேலை கையாளப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி

யான பச்சை ருசி பரவசந்தான் முனிவர்களாகத் தகுதி வரம்பா?

4 கோசலை பஞ்ச கல்யாணிக் குதிரையை வெட்டிக் கூறாக்கி

அந்த முண்டங்களுடன் ஒட்டியும் கட்டியும் கிடந்து ஒரு

இரவைக் கழித்தாள் என்பது மிருகத்தனமா, இல்லையா?

சொல்வதானால், மிருகத்தனத்தில் கூட இத்தனை விரசம்

இருக்காது. ஒரு தெய்வப் பிறவியின் கரு உருவானது இப்படித்

தான் என்றால் அந்தக் கடவுளைக் கும்பிடுபவர்கள்

யோக்கியமான ஒன்றுக்குத் தாசர்கள் என்றுசொல்ல முடியுமா?

5 குட்டி முனிவர்களுடன் கொட்டமடித்து மகிஷிகளை விட்டுப்

பிடிக்கும் கூத்து மானமுள்ளவனால் செய்யக்கூடியதா?

மானங்கெட்ட அப்பனுக்கும், ஆயிக்கும் வந்தவனுக்கும்,

போனவனுக்கும் பிறந்தவன் தான் தெய்வப்பிறவியா?

6.கசங்கிய மலர்களான தனது பத்தினித் தங்கங்களைப்

பெற்றுக்கொண்டு. பொன்னும், பொருளும் தந்துதவும்

வரம்பெற்ற வள்ளல் தன்மை இருந்தால் தான் தெய்வங்களின்

தகப்பன் பட்டம் கிடைக்கும் போலும்!

7. இப்படிப் பிறந்த ஒரு அசிங்கப் பிறவியின் ஆதரவை நாடி,

"ராமஜெயம்"எழுதி வெள்ளைத்தாள்களை விரயமாக்கும்

போக்கு இனியும் தேவைதானா?


---------நூல்: "சாமி" எழுதிய "கடவுளர் கதைகள்" பக்கம் 22-25

0 comments: