Search This Blog

8.4.08

என்னை மேடையேற்றியவர் தந்தை பெரியார்!

நான் மேடை யேறிப் பேசுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் எனக் கவிஞர் நந்தலாலா கூறினார்.

திருச்சி, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் முத்தமிழ் விழா தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கா.வாசுதேவன் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் சு.செயலாபதி முன்னி லை வகித்தார். கல்லூரி முதல் வர் ஷீலா ஞானசிரோன்மணி தலைமை வகித்தார். நிகழ்ச்சி யில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா சிறப்புரையாற்றும் போது, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி யில் பேசுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் பிள்ளை களும், படிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தம் சொந்தப் பணத்தைக் கொடுத்து இக்கல்லூரி தொடங்கக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்.

கற்றுக் கொள்ள வேண்டிய விசயம் பெரியாரிடம் நிறைய உண்டு. எளிமையையும், ஒழுக்கத் தையும் கற்றுக் கொடுத்தவர் பெரியார். பெரிய படிப்பு படித்த ஒருவர் ஏதாவது ஒரு தவறை செய்துவிட்டால், நீ என்ன படித்தவன் தானா? எனக் கேட் பார்கள். ஆக இங்கு படிப்பு வேறு, ஒழுக்கம் வேறாக இருக்கிறது.

இங்கே தமிழ்மொழி குறித் தெல்லாம் சொன்னார்கள். தமிழால் எல்லாம் முடியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழர்களால் முடி கிறதா? தமிழில் பத்துப் பாட்டு இருக்கிறது. ஆனால் இவனோ குத்துப் பாட்டு அல்லவா கேட் கிறான்? எனவே தமிழன் வளரா மல், தமிழ் வளரமுடியாது. யாரைப் பின்பற்ற வேண்டு மோ அவர்களைப் பின்பற்றுவ தில்லை. பின்பற்றக் கூடாதவர் களின் பின்னாலே மாணவச் சமுதாயம் சென்று கொண்டி ருக்கிறது. இந்தக் கல்லூரியின் நுழைவு வாயிலிலே தந்தை பெரியார் சிலை இருக்கிறது. ஒரு சிறுவனைக் கூட வாங்க, உட்காருங்க என மரியாதை யோடு நடத்தியவர் தந்தை பெரியார். எனவேதான் சொல்கிறேன், கற்றுக் கொள்கிற விசயங்கள் பெரியாரிடம் நிறைய உண்டு!
ஒரு மனிதன் படிப்பதனால் பண்பு வளர வேண்டும், கர்வம் அகல வேண்டும். நான்கு ஆண்டு கள் படித்து, இலட்சக்கணக்கில் செலவழித்து, குறுக்கும் நெடுக் கும் ஒரு கோடு போட்டால் அவரைப் பொறியாளர் என்கிறோம். ஆனால் வயல் வரப்புகளில் ஆண்டாண்டு காலமாக வயல் வரப்புகளை நேராக வெட்டு கிறானே விவசாயி, அவனுக்கு நாம் என்ன மரியாதை செய்தோம்?

எனவே மாணவர்களுக்குச் சமூகச் சிந்தனை வேண்டும். சமுதாயக் கவலை இல்லாத மாணவர்களால் எந்தப் பயனும் இல்லை. சினிமாக்காரன் பின் னால் போகாதே எனப் பெரியார் சொன்னார். ஆனால் மாணவச் சமுதாயம் சினிமாவால் சீரழிந்து வருகிறது. எழுதுகின்ற நோட்டு அட்டைகளில் கூட இப்போது ஹீரோ(?) வந்து விட்டார்.
அதேபோல கால்பந்து, ஹாக்கி போன்ற சிறந்த விளை யாட்டுகளை நாம் மதிப்ப தில்லை. மாறாகக் கிரிக்கெட் மோகத்துடன் இருக்கிறோம். அதுவும் இந்திய - பாகிஸ்தான் விளையாட்டு என்றால் ஒரு பரபரப்புடன், உணர்ச்சி வசப்பட்டு, ஒரு போர் நடப்பதைப் போல பார்த்துக் கொண்டி ருக்கிறோம். விளையாட்டை விளையாட்டாய் நமக்குப் பார்க்கத் தெரியவில்லை.

அதேநேரத்தில் ஈராக் நாட்டு மக்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி அழிக்கிறது. அந்தக் காட்சி யைத் தொலைக்காட்சியில் எப்படிப் பார்க்கிறோம்? நாற் காலியில் கால்நீட்டி அமர்ந்து கொண்டு, வேர்க்கடலையை மென்று கொண்டே பார்க்கிறோம். அங்கு விளையாட்டை சண்டையாய்ப் பார்க்கிறோம். இங்கு உண்மையான சண்டை யை விளையாட்டாய் பார்க்கி றோம். இது எவ்வளவு பெரிய ஆபத்து?


இன்றைக்கு கோக்கும், பெப்சியும் கிராமம் வரை வந்து விட்டது. நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வெயிலில் மணிக்கணக்காக விளையாடு வோம். வீட்டிற்குச் சென்று பாட்டி கொடுக்கும் நீராகாரத் தைக் குடிப்போம். நெஞ்செல் லாம் குளிர்ந்து போகும். இன்றைக்கு யார் வீட்டிற்குச் சென்றாலும் கோலா- பெப்சிதான். இதைக் குடித்தால் நெஞ்சில் எரிச்சல்தான் வருகிறது. ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். பாட்டி கொடுத்த நீராகாரத்தைத் தலைநிமிர்ந்து குடித்தோம். அமெரிக்கப் பானத்தை தலைகுனிந்து குடித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே மாணவச் செல்வங் கள் போலிகளைக் கண்டும், பிம்பங்களைக் கண்டும் ஏமாந்து விடக்கூடாது. நீங்கள் இங்கே ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக் கிறீர்கள், ஆனால் உங்கள் தந்தையோ கிழிந்த வேட்டி யோடு கிராமத்தில் உழைக் கிறார் என்பதை மறந்துவிடா தீர்கள். நீங்கள் நல்ல சுடிதார் அணிந்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் தாய் வெளுத்துப் போன, கந்தல் சேலையோடு இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

திறம்படப் படியுங்கள், ஆசிரியர்களை, பெற்றோர்களை மதியுங்கள். பெரியார் குறித்து நிறையப் படியுங்கள். உங்கள் கல்லூரியின் நுழைவு வாயிலி லேயே தந்தை பெரியார் சிலை இருக்கிறது. தினமும் பெரியா ரைப் பாருங்கள். அவரின் கருத்து களைப் படியுங்கள். குறிப்பாகப் பெண்கள் அதிகம் தெரிந்து கொள்ளுங்கள். என்னைப் போன்றோர் இன்று மேடையேறி, உங்கள் முன்னால் பேசுகிறோம் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்.

தீண்டாமை, ஜாதி, மதம், வேதங்கள், இதிகாசங்கள், கடவுள் ஆகிய அத்தனையும் ஒழிய வேண்டும் எனப் பாடு பட்டவர் தந்தை பெரியார். அது ஒன்றுதான் இந்திய சமுதாயத்தை மாற்றும் மருந்து என கவிஞர் நந்தலாலா பேசினார்.

-----பட்டிமன்ற பேச்சாளர் திரு.கவிஞர் நந்தலாலா அவர்கள் பேசியது- "விடுதலை" 30-3-2008

0 comments: