Search This Blog

16.4.08

இராமர், இராமாயணம் - வரலாற்று அறிஞர்கள் கூறுவது என்ன? (4)

உண்மையைச் சொல்லப் போனால் - பொதுவான ஊழிக் காலத்தின் தொடக்கத்தின் முன் இலங்கை, சிறீ லங்கா என அறியப் பெறவே இல்லை. மவுரிய அசோகரின் பட்டயங்களில் அத்தீவினைத் தாம்பபள்ளி என்றுதான் அழைத்திருக்கின்றனர். மாமன்னர் கிரேக்க அலெக்சாந்தர் காலச் சிறப்பு மிக்க வரலாற்றாளர்கள் இலங்கை என்றோ சிறீலங்கா என்றோ அழைக்காது தாப்ரோவேன் என்று அழைத்துள்ளனர்.

எனவே சுகிர்தா ஜெயசுவால் இலங்கையின் மீது ராமன் படையெடுத்தான் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று அடித்துச் சொல்கிறார். அது மட்டுமல்லாது இலங்கை என்ற பெயரே சிறீலங்காவுக்கு இல்லை, தாம்பவள்ளி, தாப்ரோவேன் என்றே அழைக்கப் பெற்றது என்னும் செய்தியையும் எடுத்துக் காட்டுகிறார். கூந “The Making of a Hegemonic Tradition: The Cult of Rama Dasarathi”என்னும் தலைப்பில் எஸ்.சி. மிஸ்ரா நினைவுச் சொற்பொழிவில் இராமனின் கதை கற்பனைக் கதை, வரலாற்று ஆதாரமில்லாத கதை, இராமன் வழிபாடு தென்னாட்டிலிருந்து வடநாட்டிற்குச் சென்றிருக்கிறது என்றும் காட்டியுள்ளார். வடபுலத்தில் இன்றும் கூடக் கண்ணனுக்கு இருக்கின்ற கோயில்களைப் போல், அயோத்தி தவிர வேறு எங்கும் ராமனுக்கான கோயிலைக் காண இயலாது என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

பேராசிரியர் இர்பான் ஹபீப் இந்திய வரலாற்றுக் குழுவின் துணைத் தலைவர். அலிகார் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியர். அரிய பல நூல்கள் எழுதியுள்ளவர். புரட்சிக் கருத்துக்கள் பலவற்றை எடுத்து எழுதியவர். இந்திய அரசு மதித்துப் போற்றும் வரலாற்றாசிரியர்.

இந்தியாவில் சில பகுதிகளில் இராம்சேது அல்லது ஆடம் பாலம் என்பதன் குறுக்கே அகழ்வாய்வு செய்து நிறைவேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புக் காட்ட வேண்டிய பிரச்சினையாக ஆக்கியிருப்பது குறித்து வியப்படைகிறேன். இறை நம்பிக்கையாளர்கள், உலகம் இறைவனால் உருவாக்கப்பட்டது என்று நம்புகிறார்கள். அப்படியானால் இறைவனால் உருவாக்கப் பெற்ற சாலைகளை வெட்டலாம், இறைவனால் உருவாக்கப் பெற்ற மலைகளைக் குடைந்து குகைகளை உருவாக்கிப் பயணம் செய்யலாம். ஆறுகளைப் பிளந்து, போக்குவரத்திற்குக் கால்வாய்கள் அமைக்கலாமா? மனித சமுதாயத்தின் நலனுக்கு உரிய பணியை மேற்கொண்டால் ராமபிரானுக்கு எந்தவித அவமதிப்பும் செய்தது ஆகாது, பிரச்சினைக்குரிய இயற்கை அமைப்பில் அமைந்துள்ள பகுதியில் உருவாகும் திட்டம் ராம பிரானுக்கு அவமதிப்பன்று.

பேராசிரியர் இர்பான் ஹபீப் அவர்கள் இறைவன் படைத்தது மனிதனுக்கு மனித சமுதாயத்தின் நன்மைக்குப் பயன்படுவது இறைவனுக்குப் புகழைத் தருமேயன்றி இழிவைத் தராது என்று கூறினார்.

பேராசிரியர் கே.எம். சிறீமாலி , டி.டி. கோசாம்பிபற்றி ஆய்வு செய்த சிறந்த வரலாற்று அறிஞர். வரலாற்றுக் காங்கிரசின் அமர்வுகள் பலவற்றிற்குத் தலைவராய் அமர்ந்து அரிய கருத்துகளை வழங்கியவர்.

அவர் இது அரசியல் வாதிகளால் சேது சமுத்திரத் திட்டம் அரசியலாக்கிய திட்டம்என்று கூறி, இர்பான் ஹபீப் அவர்களின் கருத்துக்களை மாற்றமில்லாது அவ்வாறு ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதிக் கையெழுத்திட்டார்.

இந்தியாவையும் சிறீலங்காவையும் இணைக்கும் தீவுத் தொடர் வழியாகக் கப்பல் போக்குவரத்துக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புக் காட்டுவது என்பது துரதிர்ஷ்டமானது. இந்தத்திட்டம் சில குழுவினரால் எதிர்க்கப்படுகிறது. இத்திட்டம் இந்தியப் பொருளாதாரத்திற்கு, குறிப்பாகத் தமிழ் நாட்டிற்குப் பயனளிப்பது. எதிர்ப்பவர்கள் சமய அடிப்படையில் போக்கு வரத்துக் கால்வாய்க்கு எதிராகக் கூறும் கருத்து பொருத்தமற்றது. ஏனென்றால் கடல், இராம் சேது எனப்படும் ஆடம் பாலத்தின் பெரும் பகுதியைச் சார்ந்துள்ளது. எனவே கால்வாயை ஆழப்படுத்துவதற்கு அகழ்வாய்வு செய்வதால் ராம பிரானுக்கு எவ்வித அவமதிப்பும் கிடையாது. கற்பனையான சந்தேகங்களின் அடிப்படையில் அல்லாமல் நாட்டின் நன்மைக்கும் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மின்னஞ்சல் வாயிலாகத் தன் பல்வேறு பணிகளுக்கும் இடையே வாக்களித்தவாறு திருமதி ஷிரீன் மூஸ்வி அம்மையார் அலிகார் வரலாற்றறிஞர் களின் சங்கத்தின் சார்பில் தகவல் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு குறிப்பிடத்தகுந்த இன்றைய வரலாற்றுப் பேராசிரியர்கள் மதவாதிகளின் முகமூடிகளைப் பிற்போக்காளர்களின் பிற்போக்குத் தன்மையை வெளிப்படுத்திய பின்னும், இத்திட்டத்தை விரைந்து நிறை வேற்ற நடவடிக்கை எடுக்காதது குறித்து வருந்தித் திராவிடர் கழகம் தன் கவலையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறது.

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் கடந்த ஜனவரி இரண்டாம் வாரத்தில் செய்தியாளர்களிடம் தன் கவலையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். உச்ச நீதி மன்றத்தின் குறுக்கீட்டினால் நின்று போயிருக்கும் சேது சமுத்திரத் திட்டம் உடனடியாகத் தாமதமின்றி நிறைவேற்றப் பெற வேண்டும் என்னும் ஆதங்கத்தை நம் உணர்வை வெளிப்படுத்தியது கண்டு தமிழ் நெஞ்சங்கள் மகிழ்கின்றன.

மய்ய அரசைப் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்பதையும், மய்ய அரச வேண்டிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு விட்டது, இனியும் தாமதிக்கக்கூடாது என்பதைத் தக்க தருணத்தில் சுட்டிக் காட்டியிருந்தார். அடுத்த நடவடிக்கை குறித்து என்ன நடவடிக்கை மேற் கொள்வது என்பது குறித்து கூடும் குழுவினர் - திராவிடர் கழகத் தலைவரின் எச்சரிக்கை மணி ஓசையால் மேலும் விழிப்படைவர்.

தமிழர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலனில் என்றும் அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் திராவிடர் கழகம் முனைப்புக் காட்டி முன் நிற்பது குறித்து நல்ல உள்ளங்கள் மகிழ்கின்றன.
இந்த நேரத்தில் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற 125 வயதுடைய கவிஞர் பாரதி மட்டும் இருந்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே, சேது சமுத்திரத் திட்டத்திற்கு இடையூறு செய்யும் இந்த வஞ்சக மனத்தினர் கண்டு என்று மட்டும் பாடியிராது, சேதுவை ஆழப்படுத்திக் கால்வாய் அமைப்போம். அக்கால்வாயில் கப்பல் விடுவோம், கனிம வளம் பெருக்குவோம் என்றும் பாடியிருப்பார்.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக, ராமர் பாலம் என்ற பெயரில் முட்டுக் கட்டை போடுவது குறித்து, இந்தியாவின் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறும் கருத்துகள்:

Suvira Jaiswal, former Professor, Jawaharlal Nehru University, New Delhi:
It is generally accepted by the historians that the story of Rama incarnation of Vishnu developed in stages and the narrative of Valmiki describing the southern expedition of Rama and his Vanara sena is a figment of poetic imagination. In the present political atmosphere such statements based on scientific historical methodology are promptly interpreted by the rightist groups as biased opinions of Marxist historians. But scholars of the previous generation, who cannot be dubbed as Marxists by any stretch of imagination, had no hesitation in pointing out that Rama’s invasion of Ceylon had no historical basis. One could cite the writings of Professor K.A.Nilakanta Shastri, Professor D.C. Sircar and Professor H.D. Sankalia & Dr. P.B. Sastri of Andhra Pradesh in this connection.

As a matter of fact in the centuries before the beginning of the Common Era, Ceylon was not known as Sri Lanka. In the inscriptions of Asoka Mayurya the island is mentioned as Tambapanni and the classical historians of Alexander frefer to it as Taprobane.

Prof. IrFan Habib, Former Professor of Aligarh Muslim University:
I am surprised at the fact that the projected excavation of a navigational channel through the natural formation known as Ram Setu or Adam’s Bridge should be made into an agitational issue in parts of India. Believers consider the world to be divine created; should then, no roads be cut in the mountains or tunnels be drawn there into, or rivers be bridged or their waters diverted into canals? No disrespect will be shown to Lord Rama if a work is undertaken that will contribute to human welfare, especially of people who inhabit the vicinity of the physical formation in question.
Prof. K.M.Shrimali, Retired Professor of Delhi University:
I have great pleasure in endorsing the above formulation.


---------(நிறைவு)


---------------- முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் "விடுதலை" 7-2-2008 இதழில் எழுதியது

0 comments: