Search This Blog

17.4.08

தமிழ்புத்தாண்டு எது?

தை முதல் நாள் தான் இனி தமிழ்புத்தாண்டு என்று அரசு அறிவித்த நிலையில் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக ஒருசில பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் கொண்டாடியதுடன், அரசின் அறிவிப்பை கிண்டலடிக்கவும் செய்தனர். இது பார்ப்பனர்களுக்கே உரிய குயிக்தி யுத்தியாகும்.பார்ப்பானுக்கு எப்போதும் முன் புத்தி கிடையாது என்று சொல்லப்படுவதுண்டு. அது முற்றிலும் உண்மை என்பதற்கு சித்திரை முதல்நாள் ஆண்டுபிறப்பின் யோக்கியதை என்ன என்பதைப் பார்த்தாலே தெரிந்து விடும். சித்திரை முதல் நாள் தொடங்கும் ஆண்டுகள் பற்றிய உண்மை நிலை இதோ:

--- - --"வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்து 'நீர் அறுபதனாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன? ' அதற்குக் கண்ணன் 'நான் இல்லாப் பெண்ணை வரிக்க'என, அதற்கு உடன்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லா விடு கிடைக்காததனால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு 'நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங்கொண்டேன்'

என்றனன்.

கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானம் செய்ய ஏவ முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார் களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.


இவ்வளவு கேவலமான ஆபாசமான , அறிவுக்குப் பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண்டாடுபவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது? " --


---------தந்தைபெரியார் ---நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" பக்கம் 45 -46

கொஞ்சமாவது அறிவுள்ளன் இதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பான். பார்ப்பானோ சிந்திப்பதையே பாவச்செயலாக் கருதுபவன். அவனுடன் செர்ந்து கொண்டு சில சூத்திர முண்டங்களும் சிந்திப்பதை மறந்து காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அறுபது ஆண்டுகளின் அயோக்கியதனத்தைப் பற்றி மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு மேலும் சித்திரை முதல்நாளைக் கொண்டாடுவோம் என்று கூறுபவர்கள் பற்றி "சிந்திக்கும் தன்மையுள்ள மனிதப்பிறப்புத்தானா" என்று அய்யப்படவேண்டியுள்ளது.
மானமும் அறிவும் உள்ள ஒவ்வொரு தமிழனும் இனி தை முதல்நாளையே "தமிழ் புத்தாண்டாக" கொண்டாடுவோம்.

0 comments: