Search This Blog

20.4.08

தமிழ்நாடு இராமன் பூமி அல்ல! ஈ.வெ.ராமசாமி பூமி.

மதிப்பிற்குரிய கீதா சாம்பசிவம் அவர்களுக்கு
வணக்கம்.
"பரதன் தந்தை இறந்தார் எனச் சொல்ல திகைத்த ராமர் துக்கம் தாங்க முடியாமல் விம்மி, அழுகின்றார். ராமர் அழும் சத்தம் கேட்டுக் கூட வந்த மற்றவர்கள் பரதன் ராமனைக் கண்டு பேசிவிட்டான் எனத் தெரிந்து கொண்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வருகின்றார்கள். தாய்மார் மூவரையும் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ராமரைப் பார்த்து அவர்களும் கதறி அழ, ராமர் பரதனை பார்த்து வந்த காரணம் என்ன என மீண்டும் வினவ, ராமன் வந்து நாடாள ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றான் பரதன்."

மேலே அடைப்புகுறிக்குள் கொடுக்கப்பட்டது பகுதி-20 இல் நீங்கள் எழுதியது.

பகுதி -19 இல் தந்தை இறந்ததற்கு இராமன் அழவில்லை என்று வேறொரு இராமயணக்கதையில்( தசரத சாதகம் ) உள்ள காட்சியை ந.சி. கந்தையா பிள்ளை எழுதியதைச் சுட்டிக் காட்டியதை தங்களுக்கு பின்னுட்டமாக அனுப்பியிருந்தேன்.


ந.சி. கந்தையாபிள்ளை அவர்கள்"தசரத சாதகம்" என்ற நூலில் இச்சம்பவம் பற்றிக் கூறும் பகுதி இதோ:
"பரதன் இராமனைக் கண்டான்; அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தந்தையின் மரணத்தைக் கூறினான். இராமன் கவலை கொள்ளவும் இல்லை, அழவும் இல்லை; பரதன் அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது மற்ற இருவரும் பழங்கள் கொண்டு வந்தனர். தந்தையின் மரணத்தைக் கேட்டதும் அவர்கள் மயக்கமடைந்தார்கள். அறிவு தெளிந்த பின் அவர்கள் எல்லாரும் அழுது கொண்டிருந்தார்கள்; இராமன் அழவில்லை. பரதன் இராமனை நோக்கி ``நீர் அழாமல் உறுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்டான். ``மனிதனால் ஆகாத ஒன்றிற்காகப் புலம்புவதால் பயனில்லை. பழுத்த பழம் எப்பொழுதாவது நிலத்தில் விழுந்துவிடும். பிறந்தவர் எல்லாரும் ஒரு நாளைக்கு இறந்துவிடுவர் என்று இராமன் சொன்னான். இதைக் கேட்டு மற்றவர்கள் ஆறுதலடைந்தார்கள்."

ஆக ஒரு கதையில் தந்தை இறப்பிற்கு இராமன் அழுகிறான், இன்னொரு கதையில் இராமன் அழவில்லை.


இராமாயணக்கதையை படிக்கும் மக்கள் குழம்பிப்போக மாட்டார்களா?

ஓ..ஓ.மக்கள் குழம்பிய நிலையில் இருந்தால் தானே தனது
ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும். மக்கள் சிந்தித்தால் தெளிவு பிறக்கும். உண்மை புரியும்.ஆதிக்கவாதிகளின் ஆட்டம் அடங்கும்.அந்த நிலை வந்து விடக்கூடாது என்பதற்குத்தான் இராமாயணப் பிரச்சாரம்.

தமிழ்நாடு இராமன் பூமி அல்ல!
ஈ.வெ.ராமசாமி பூமி.
இராமன் கதைகள் இங்கு எடுபடாது.

0 comments: