கேள்வி: அந்நாள் அமெரிக்க அதிபர் நிக்சன், அண்டை மாநிலத்து முதல்வர் ஹெக்டே இருவர் மீதும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாகக் கிளம்பிய குற்றச்சாட்டு காரணமாகத்தானே பதவியை ராஜினாமா செய்தார்கள் - ஆனால் அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர்; இங்கே தமிழகத்தில் இரு அதிகாரிகளுக்கிடையே தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்காக முதல மைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன?
கலைஞர்: என் செய்வது, இந்த முதலமைச்சருக்கு முப்பரி நூல் கிடையாதே! இவர் கடவுளின் முகத்தில் பிறந்த சாதியில் பிறந்தவர் அல்லவே - காலில் பிறந்த சாதியில் பிறந்தவரா யிற்றே! அதனால்தான் இந்த முதல்வர் தலைமையில் இந்த ஆட்சியில் அன்றாடம் நடைபெறுகிற அற்புத சாதனைகளை ஒரு சாரார் மூடி மறைத்துவிட்டு; வேண்டுமென்றே திட்ட மிட்டு சில விஷமச் செய்திகளைப் பரப்பி அந்த நெருப்பில் குளிர் காய முனைகிறார்கள். என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது? என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித் தாலும்; விகடன் கேலி செய்கிறார்! - சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்து நடிகை, காஞ்சனமாலையின் பேச்சையே டேப் செய்து போட்டுக் காட்டி மிரட்டிய பணிய வைத்த பரம்பரையினர் அல்லவா?
------------- "விடுதலை" - 18-4-2008 பக்கம் -6
Search This Blog
19.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment