இராமாயணம் தொடர்பாக கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வக்காலத்து வங்க வந்த திரு.திவா "பிடித்ததை உள்வாங்கிக் கொண்டு பிடிக்காததை விட்டுவ்ட்டு போகலாமே"என்று சொல்கிறார்.நல்ல ஆலோசனை.தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல் இராமாயணத்தில் வரும் சம்பவங்கள் பார்ப்பனரல்லாதவர்களை இழிவுபடுத்துகிறது. ஏதோ ஒரு காலத்தில் பார்ப்பனரல்லாத மக்கள் விபரம் புரியாமல் அந்தக்கதையை படித்தார்கள்.பரப்பினார்கள்.சுயமரியாதை அடைந்த பின்பும் இந்த 2008- லும் மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தும் இராமயணக் கதையை பரப்பிக் கொண்டிருக்கும் போது இராமாயணத்தில் வரும் சம்பவங்கள் குறித்த நியாயமான விமரிசனத்தை ,வாதத்தை எடுத்து வைத்தால் அது குறித்து பதில் சொல்லுவதுதான் நியாயவானுகளுக்கு அழகு.
அதைவிட்டுவிட்டு " நான் பேசும் போது கெட்டவார்த்தைகள் எல்லாம் பேசுவேன் . ஆனால் நீங்கள் அதைப் பொருட்படுத்தாமல் நல்ல வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதைப் போல் உள்ளது திவாவின் வாதம்."நீ போனால் கலகம் ஆகிவிடும் நான் போய் செருப்பால் அடித்துவிட்டு வருகிறேன்" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.
பெரியார்தான் சொல்லுவார் அரிசி வாங்க வேண்டும் என்றால் அரிசிக் கடையில் வாங்க வேண்டுமே தவிர மலத்தில் அரிசி பொறுக்ககூடாது.
நீங்கள் நல்ல கருத்தை எழுதும் போது பாராட்டி விமர்சனங்கள் வரும். மற்றவர்களை பாதித்தோ, இழிவுபடுத்தியோ எழுதும்போது அதற்குண்டான நியாயமான காரணங்களை விளக்கியாக வேண்டும் இந்த மரபைக் கடைபிடிக்கும் போதுதான் மனிதநேயம் மிளிரும். நன்றி
Search This Blog
18.4.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment